செந்தமிழ்த் தொகுதிகளில் முன்னர் திரு த இராமநாதபிள்ளை என்பவரால் அரிஸ்தாதில் இயற்றிய நிக்கோமேகியன் அறநூல் என்னும் மானிட ஒழுக்க வரையறை நூல் ஒன்று தமிழில் யவன மஞ்சரி என்னும் தலைப்பில் சில காலம் தொடர்ந்து எழுதப்பட்டது.
அதைப் பார்க்கும் காலத்தில் இந்தத் தலைப்பில் வந்த அனைத்துக் கட்டுரைகளையும் தொகுத்து யாரேனும் போட்டால் அது கிரேக்க மகாஞானியும், உண்மையான ஜகத் குருவுமான அரிஸ்தாதில் அவர்களது அறநூல் ஒன்று தமிழில் வந்த புண்ணியம் உண்டாகுமே என்று நினைத்ததுண்டு.
நல்ல வேளை அப்பொழுதே நூலாகவும் போட்டிருந்தார்கள் போல. இன்று எதையோ தேடும் பொழுது இந்த நூல் நூலகத்தில் தரவிறக்கிப் படிக்கவே கிடைக்கின்றது என்பதைக் காணும் போது மனம் மிக்க மகிழ்ச்சி உறுகிறது. அதைப் பார்க்கும் காலத்தில் இந்தத் தலைப்பில் வந்த அனைத்துக் கட்டுரைகளையும் தொகுத்து யாரேனும் போட்டால் அது கிரேக்க மகாஞானியும், உண்மையான ஜகத் குருவுமான அரிஸ்தாதில் அவர்களது அறநூல் ஒன்று தமிழில் வந்த புண்ணியம் உண்டாகுமே என்று நினைத்ததுண்டு.
மதங்களின் அடிப்படையில் அறநூல்கள் எழுவது உண்டு அல்லது மதக் கருத்துகளை ஒப்பி நூல் வரைவாரும் உண்டு. ஆனால் அறிவின் நிலைப்பாட்டில் இருந்து, காரண காரிய தர்க்கத்தால் மனித வாழ்க்கையில் அறத்தின் இடம் செயல் ஆகியவைகளைக் காட்டி எழுதப்பட்ட நூல் என்று பார்த்தால் காலம் தேசம் விஞ்சிய சிறப்பாய்த் திகழ்வது இந்த யவன மஞ்சரி.
***