Sunday, July 17, 2022

ஸ்தோத்ர ரத்நம், ஸ்ரீஆளவந்தார் அருளியது - பொருளடக்கம்

ஸ்ரீஆளவந்தார் அருளிய ஸ்தோத்ர ரத்நம் முழுமையும் 65 சுலோகங்கள் கொண்டது. ஒவ்வொரு சுலோகமும் ஒலிக்குறிப்புடனும், எளிய தமிழில் விளக்கமும் தரப்பட்டு நிறைவேறியது. ஒலிக்குறிப்பில் வர்க்க எழுத்துகளுக்குப் பொதுவாக ஸ்ஃபிக்ஸில் 1, 2 போன்று எண்களால் குறிப்பு காட்டியிருக்கிறேன். ஸ, ஷ போன்ற ஒலிகளுக்கு நேர் எழுத்துகள் இருக்கின்றன. சங்கரர் என்பதில் ஒலிக்கும் சிறப்பு என்பதை இடாலிக்ஸில் காட்டியிருக்கிறேன். சுலோகங்கள் அச்சு எழுத்திலும், விளக்கம் சாதாரண எழுத்திலும் வருகின்றன. செல் உலகமாக வாழ்க்கை ஆகிவிட்டது என்பதனால் செல் மூலமாகவே படிக்க வசதியாக, வழக்கம்போல் பொருளடக்கப் பக்கமாகிய இதில் வரும் தலைப்புகள் அனைத்தும் ஹைபர்டெக்ஸ்ட் செய்யப்பட்டு, அந்தந்தத் தலைப்பைத் தொட்டதுமே திறந்துகொள்ளும் படி செய்திருக்கிறேன். ஆக்கபூர்வமான ஆன்மிகச் சிந்தை வளர்வதற்கு இது உதவியாய் இருக்கும் என்ற நம்பிக்கை. நண்பர்கள் பயன்கொள்க. 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 







































































குறிப்புதவி நூல்கள் - 1) ஸ்ரீஸூக்திமாலா மலர் 2, ஸ்தோத்ர ரத்ந வியாக்கியானம் பெரியவாச்சான்பிள்ளை, பதிப்பாசிரியர் கீர்த்திமூர்த்தி ஸ்ரீ உ வே ஸ்ரீநிவாஸய்யங்கார் ஸ்வாமி, மூன்றாம் பதிப்பு 1999; 2) ஸ்தோத்ரரத்நம், ரத்நப்ரபா வியாக்கியானம் ஸ்ரீ உ வே பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமி, 1927
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

ஸ்ரீஆளவந்தார் ஸ்தோத்ர ரத்நம் சில குறிப்புகள்

பிரபத்தி என்பது தனக்குப் பேறு தன்னால் அன்று அவனால் என்னும் திடநம்பிக்கையும், தன்னை ரக்ஷிப்பது தான் அன்று அவனே என்னும் திடமும், தன்னை நினைந்தால் இயலாமையே நிதர்சனமாய் இருப்பதும், தன்னால் இயல்வதாக நினைப்பதெல்லாம் தன்னை அவனிடமிருந்து அகற்றிக் கொள்ளும் வழியாக முடிவதையும் கண்டு, என்றும் தன்னுடைய தோஷங்களையும், தான் அவன் அருளினாலன்றி கடைத்தேற இயலாது என்பதையும் விண்ணப்பிக்கும் பிரார்த்தனை நிறைந்த மனநிலை பிரபன்னரின் தன்மையாக இருப்பது. இதை அறிவுக்கு விஷயமாக்கிப் புரிந்துகொள்வது ஒருவிதம் என்றால் ஸ்தோத்ர ரூபமாக இதை உணர்வு பூர்வமாக உள்ளம் கலந்து கரைவது என்பது மிகவும் சிறந்தது. இதைத்தான் ஸ்ரீஆளவந்தார் நம் அனைவரின் நன்மைக்காகவும் இயற்றி நமக்குக் கொடுத்திருக்கிறார். இதனால் பிரபன்ன குலத்தின் என்றென்றைக்குமான நன்றிக்கு உரியவர் அவர் ஆகிறார். இதை நாம் பகவானைப் பிரார்த்திப்பதற்கு முன் மாதிரி என்று கொள்வது மிகுந்த நன்மை பயக்கவல்லது. கூடவே விசிஷ்டாத்வைத தத்துவக் கூறுகளையும், பிரபத்தி நெறியின் நுட்பங்களையும் ஆழமாகப் பொதிந்து ஸ்ரீஆளவந்தார் அருளியிருப்பது நமக்கு இந்த ஸ்தோத்ர ரத்நம் நித்யம் ஆன்மிக அனுஷ்டானமாக, தியானமாக அமையும் போது புரியவரும். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Saturday, July 16, 2022

ஸ்ரீஆளவந்தாரும் ஸ்தோத்ர ரத்நமும்

ஸ்ரீவைஷ்ணவத்தின் வரலாற்றில் ஸ்ரீஆளவந்தாரின் இடத்தைக் குறித்து உருவகமாக எம்பார் இயற்றிய சுலோகம் ஒன்றில் இவ்வாறு வருகிறது.: 

லக்ஷ்மீநாதா2க்2ய ஸிந்தௌ4 2ரிபு ஜலத3:

ப்ராப்ய காருண்ய நீரம்

நாதா2த்3ராவப்4யஷிஞ்சத் தத3நு

ரகு4வராம்போ4ஜ சக்ஷுர்ஜ2ராப்4யாம் |

3த்வா தாம் யாமுநாக்2யாம் ஸரிதமத2

யதீந்த்3ராக்2ய பத்3மாகரேந்த்3ரம்

ஸம்பூர்ய ப்ராணிஸஸ்யே ப்ரவஹதி

3ஹுதா4 தே3சிகேந்த்3ர ப்4ரமௌகை4: || 

திருமால் என்னும் லக்ஷ்மீநாதனாகிய கருணையம் பெருங்கடல். அதில் கருணை என்னும் நீரைப் பருகியது நம்மாழ்வார் என்னும் சடகோபராகிய மேகம். ஸ்ரீநாதமுநிகள் என்னும் மலையின் பேல் அந்த நீரைப் பெய்தது. மலையின் மீது பெய்த கருணை என்னும் நீர், புண்டரீகாக்ஷர் என்னும் உய்யக்கொண்டார், ராமமிச்ரர் என்னும் மணக்கால் நம்பி ஆகிய இரு அருவிகளின் வழியே யாமுநாசார்யர் என்னும் ஸ்ரீஆளவந்தாராகிய பெரிய ஆற்றில் புகுந்தது. அங்கிருந்து யதீந்த்ரர் என்னும் இராமாநுசராகிய பெரும் ஏரியில் வந்து சேர்ந்தது. அந்த ஏரியினின்றும் ஆசார்யர்கள் என்னும் வாய்க்கால்கள் மூலம் உயிர்கள் என்னும் பயிர் செழிக்கப் பாய்கிறது. 

அந்த கருணையாகிற நீர் பிரபத்தி நெறி என்பது தானே போதரும். ஸ்ரீவைஷ்ணவத்தின் சாரமும், அனைத்து வேத வேதாந்தக் கருத்துகளின் உட்பொருளும் ஆகிய பிரபத்தியைத் தாம் இயற்றிய ஸ்தோத்ர ரத்நத்தால் அனைவரும் தினமும் மனத்திலேயே பாடமாகக் கொண்டு நினைக்கும் வண்ணம் செய்தவர் ஸ்ரீஆளவந்தார். அவரைப் பற்றிய தனியன் ஒன்று இவ்வண்ணம் சொல்கிறது. 

ஸ்வாத3யந்நிஹ ஸர்வேஷாம்

த்ரய்யாந்தார்த்த2ம் ஸுது3ர்க்3ரஹம் |

ஸ்தோத்ரயாமாஸ யோகீ3ந்த்3ர:

தம் வந்தே3 யாமுநாஹ்வயம் || 

அறிதற்கு அரிதான வேதாந்த நுண்பொருளை எந்த ஒரு யோகீந்த்ரர் இவ்வண்ணம் அனைவரும் இனிதே அனுபவித்துப் பயில வாய்ப்பாக ஸ்தோத்ரமாக ஆக்கினாரோ அந்த யாமுநர் என்று அழைக்கப்படும் ஸ்ரீஆளவந்தாரை வணங்குகிறேன். 

மேலும் ஒரு தனியன் ஸ்தோத்ர ரத்நத்தைப் பெற்ற மகிழ்ச்சியில் பலகால் வணக்கி இறும்பூதெய்துகிறது. 

நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: | 
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: || 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 65

அக்ருத்ரிம த்வச்சரணாரவிந்த3

ப்ரேமப்ரகர்ஷாவதி4ம் ஆத்மவந்தம் |

பிதாமஹம் நாத2முநிம் விலோக்ய

ப்ரஸீத3 மத்வ்ருத்தம் அசிந்தயித்வா || 

நிறைவு சுலோகம்:

என்னுடைய நடத்தையை நோக்காதீர்! என் நடத்தையைச் சிந்தனையில் கொள்ளாதீர்! என்னுடைய தாத்தா (பிதாமஹமர்), உமது சரணாரவிந்தங்களில் இயல்பான பிரேமை எல்லையற்றுப் பிரவாகமாய் இருந்தவர், ஆத்மஞானத்தில் சிறந்தவர், ஸ்ரீநாதமுனிகளையே கண்ணால் பார்த்துக்கொண்டே என்னையும், என் நடத்தையையும் கிருபை கூர்ந்து மன்னித்துவிடும். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Friday, July 15, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 64

நநு ப்ரபந்நஸ் ஸக்ருதே3வ நாத2

தவாஹமஸ்மீதி ச யாசமாந: |

தவாநுகம்ப்ய: ஸ்மரத: ப்ரதிஜ்ஞாம்

மதே3கவர்ஜம் கிமித3ம் வ்ரதம் தே || 

நாதனே! ’ஒரே முடிவாய் உன்னைச் சரணடைந்துவிட்டேன்’, ‘நான் உனக்கே ஆட்பட்டவன் ஆகவேணும்’ என்றெல்லாம் வேண்டி உன்னை யாசிக்கின்ற நான், (சரணாகதி அடைந்தோர் குறித்து) நீ செய்துள்ள பிரதிஜ்ஞையை என்றும் நினைவுகொண்டிருக்கும் உனக்குத் தயையுடன் அருள்செய்யத் தக்கவன் அன்றோ? (சரணாகதி அடைந்தோரைக் கைவிடேன்) என்ற உன்னுடைய விரதம் என் ஒருவனைத் தவிர்த்துவிட்டு இயலுமோ? 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Thursday, July 14, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 63

ரகு4வர யத3பூ4ஸ்த்வம் தாத்3ருசோ வாயஸஸ்ய

ப்ரணத இதி த3யாளுர்யச்ச சைத்3யஸ்ய க்ருஷ்ண

ப்ரதிப4வம் அபராத்3து4ர் முக்34 ஸாயுஜ்யதோ3Sபூ4:

வத3 கிமபத3மாக3ஸ்தஸ்ய தேSஸ்தி க்ஷமாயா: || 



ரகுவரனே! அப்படிப்பட்ட பாபம் செய்த காகாஸுரன் விஷயத்தில் சரணாகதி செய்தான் என்பதே கொண்டு தயாளுவாய் அருளினாய் அன்றோ! குற்றமே இல்லாத கிருஷ்ணனே! ஜன்மம் தோறும் அபராதமே செய்து போந்த சேதிகுலத்தவனான சிசுபாலனுக்கு ஸாயுஜ்யமே கொடுத்தாய் அன்றோ! அத்தகைய உன்னுடைய பொறுமைக்குப் பாத்திரம் அல்லாத பாபம் என்னதான் இருக்கிறது? நீயே கூறியருளாய்!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***























Wednesday, July 13, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 62

அமர்யாத3: க்ஷுத்3ச் சலமதி: அஸூயாப்ரஸவபூ4:

க்ருதக்4நோ து3ர்மாநீ ஸ்மரபரவசோ வஞ்சநபர: |

ந்ரும்ஸ: பாபிஷ்ட2: கத2மஹமிதோ து3:க்க3ஜலதே4:

அபாராது3த்தீர்ண: தவ பரிசரேயம் சரணயோ: || 

வரம்புகளை மீறியவன், நீச விஷயங்களில் சபலம் உள்ளவன், நிலையற்ற நெஞ்சம் கொண்டவன், பிறருடைய நல்லவற்றைக் கண்டு பொறாத அசூயைக்கே பிறப்பிடமானவன், செய்நன்றியைக் கொன்றவன், தீயகர்வம் மிக்கவன், காம எண்ணங்களில் என்னை இழப்பவன், வஞ்சனையே செய்பவன், கொடிய காரியங்களைச் செய்பவன், பாபத்திலேயே நிலைபெற்றவன், இப்படிப்பட்ட நான் இந்தக் கரைகாண முடியாத துக்கக் கடலிலிருந்து கரையேறி உன்னுடைய திருவடிகளுக்கு அடிமை செய்யும் பேறு பெறுவது எங்ஙனம்? 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Tuesday, July 12, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 61

ஜநித்வாSஹம் வம்சே மஹதி ஜக3தி க்2யாதயஸாம்

சுசீநாம் யுக்தாநாம் கு3ண புருஷதத்த்வஸ்தி2தி விதா3ம் |

நிஸர்க்கா3தே3வ த்வச்சரணகமலைகாந்த மநஸாம்

அதோ4Sத4: பாபாத்மா ரணத3 நிமஜ்ஜாமி தமஸி || 

சரணமளிக்கும் பிரானே! உலகத்தில் மிகவும் புகழும், சிறப்பும் மிக்கவர்களும், பரிசுத்தி நிறைந்தவர்களும், உத்தமமான நித்யமான யோகத்தில் தலைசிறந்தவர்களும், பிரகிருதி, புருஷன், தத்வம் என்பனவற்றின் உள்ளபடியான நிலையை நன்கு அறிந்தவர்களும், பிறந்தது தொட்டே இயல்பாக உன்னுடைய சரண கமலங்களில் ஒரே ஈடுபாட்டுடன் கூடிய மனம் வாய்ந்தவர்களும் ஆன பெரியோர்களின் வம்சத்தில் பிறந்தும் பாபாத்மாவான நான் பிரகிருதியில் கீழே விழுந்துகொண்டிருக்கிறேன். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Monday, July 11, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 60

பிதா த்வம் மாதா த்வம் த3யிததநயஸ்த்வம் ப்ரியஸுஹ்ருத்

த்வமேவ த்வம் மித்ரம் கு3ருரஸி க3திச்சாஸி ஜக3தாம் |

த்வதீ3யஸ் த்வத்3ப்4ருத்யஸ் தவ பரிஜநஸ் த்வத்33திரஹம்

ப்ரபந்நச்சைவம் ஸத்யஹமபி தவைவாஸ்மி ஹி ப4ர: || 

உலகத்திற்கெல்லாம் தகப்பனும் நீயே; தாயும் நீயே; பிரியமான மகனும் நீயே; என்றும் அன்புடைய தோழனும் நீயே; மறைப்பில்லாமல் உள்ளத்தில் உள்ளதைப் பகிரத்தக்க நட்பும் நீயே; ஆசாரியனும் நீயே; நல்வழியும் நீயே. நானோ உன்னைச் சேர்ந்தவன்; உன்னுடைய அடிமை; உனக்குத் தொண்டு செய்யும் வேலைக்காரன்; உன்னையே ஒரே உபாயமாகக் கொண்டவன்; உன்னிடம் சரணாகதி அடைந்த பிரபன்னன். இவ்வாறு இருக்கையில் நான் உனக்கே காக்க வேண்டிய பொறுப்புள்ள அடைக்கலமடைந்த உயிர் ஆக அன்றோ இருக்கின்றேன்! 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Sunday, July 10, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 59

அநிச்ச2ந் அபி ஏவம் யதி3 புநரிதி இச்ச2ந் இவ ரஜஸ்

தமச்2ந்நச்2த்3மஸ்துதிவசந ப4ங்கீ3மரசயம் |

ததா2Sபீத்த2ம் ரூபம் வசநம் அவலம்ப்3யாSபி க்ருபயா

த்வமேவைவம் பூ4தம் த4ரணித4ர மே சிக்ஷய மந: || 

ரஜஸ், தமம் என்ற குணங்களால் மூடுண்டு, உண்மையான விருப்பம் இல்லையாயினும், இச்சை இருப்பது போல் கபடமான வார்த்தைகளாலும், துதிகளாலும் போலியான ரீதியில் செய்தேனாகிலும், அந்த மாதிரியான வார்த்தைகளையே உன்னுடைய அளவுகடந்த கிருபையினால் ஒரு பற்றாசாகக் கொண்டு, அந்த வார்த்தைகளுக்கேற்றபடி என் மனத்தைத் திருத்தியருள வேண்டும், புவியை உய்யக்கொண்ட பிரானே! 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Saturday, July 9, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 58

து3ரந்தஸ்ய அநாதே3: அபரிஹரணீயஸ்ய மஹதோ

நிஹீந ஆசாரோSஹம் ந்ருபசு: அசு4ஸ்ய ஆஸ்பத3மபி |

3யாஸிந்தோ43ந்தோ4 நிரவதி4க வாத்ஸல்யஜலதே4

தவ ஸ்மாரம் ஸ்மாரம் கு3ணக3ணம் இதி இச்சா2மி க3தபீ4: || 

சேஷத்வத்திற்கு விரோதியாக இருக்கும் எதுவும் அழிந்து போகட்டும், ஆத்மா உள்பட என்று பிரார்த்தித்தவர், தாம் கைங்கர்ய விரோதியாக இருக்கும் எதையும் வேண்டாம் என்று வேண்டுவதைக் கண்டு, ஸம்ஸாரத்தில் இப்படிக் கைங்கர்யப் பிரார்த்தனை உள்ளவர் உண்டாவதே என்று பகவானின் முகக் குறிப்பில் ஆச்சரியம் தோன்றுவதாகவும், அதற்குப் பதில் அளிப்பது போன்றும் ஒரு மனோபாவம் இந்தச் சுலோகத்தில் அமைந்திருக்கிறது.

நானோ மனித உருவில் அமைந்த மிருகம் என்ற நிலையில் இருக்கிறேன். முடிவற்றதும், தொடக்கமற்றதுமான, போக்கவரிதான பெருப்பெருத்த அசுபங்களுக்கு மண்டுமிடமாகவும், தாழ்ந்த ஆசாரங்கள் அமைந்தவனாகவும் இருக்கின்றவன். இருந்தாலும், தயையின் பெருங்கடலாக இருப்பவரே! நித்ய பந்துவாகவும் இருப்பவரே! எல்லையற்ற வாத்ஸல்யத்தின் சாகரமானவரே! உம்முடைய கல்யாண குணக் கூட்டங்களை நினைத்து நினைத்து அதனால் பயத்தை மறந்து இப்படி விரும்பத் துணிந்துவிட்டேன். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Friday, July 8, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 57

ந தே3ஹம் ந ப்ராணாந் ந ச ஸுக2ம் அசேஷ அபி4லஷிதம்

ந ச ஆத்மாநம் நாந்யத் கிமபி தவ சேஷத்வ விப4வாத் |

3ஹிர்ப்பூ4தம் நாத2 க்ஷணமபி ஸஹே யாது ததா4

விநாம் தத் ஸத்யம் மது4மத2ந விஜ்ஞாபநமித3ம் || 

பகவானுக்கு உடைமையாகவும், அவனுக்கே பெருமை ஏற்படும்படி இருக்க வேண்டியதும் இந்த ஆத்மாவின் இயல்பு ஆகும். அதற்கு சேஷத்வம் என்று பெயர். அவ்வாறு சேஷத்வம் இல்லையெனில் இந்த உடலால் என்ன பயன்? பிராணனால் என்ன பயன்? எல்லோரும் விரும்பும் சுகம் அதுதான் எதற்கு வேண்டும்? ஏன் இந்த ஆத்மா கூட சேஷத்வம் இல்லாத ஆத்மா இருந்தால் என்ன போனால் என்ன? இவை மட்டும் அன்றி வேறு எதுவுமே, சேஷத்வம் சமபந்தப்படாத எதுவும் நாசம் அடையட்டும். மதுவைக் கொன்ற நாதனே! இது சத்யம். இதுவே என் விண்ணப்பம். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Thursday, July 7, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 56

ஸக்ருத் த்வதா3கார விலோகநாயா

த்ருணீக்ருத அநுத்தம பு4க்திமுக்திபி4: |

மஹாத்மபி4: மாம் அவலோக்யதாம் நய

க்ஷணேSபி தே யத்3விரஹோSதிது3ஸ்ஸஹ: || 

கணநேரப் பொழுதும் யாரைப் பிரிவது உனக்கு மிகவும் சகித்தற்கரியதோ, யார் உன் வடிவழகை ஒரு முறை காணவேண்டிப் பெரும் போகங்களையும், ஏன் உத்தம முக்தியையும் கூடத் துரும்பு போல் நினைத்து விடுகிறார்களோ, அந்த மஹாத்மாக்களால் கடைக்கண் நோக்கி அருளப்படும் தன்மையை என்னை அடைவிப்பாய்! 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Wednesday, July 6, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 55

தவ தா3ஸ்யஸுகை2க ஸங்கி3நாம்

4வநேஷு அஸ்து அபி கீடஜந்ம மே |

இதர ஆவஸதே2ஷு மா ஸ்ம பூ4த்

அபி மே ஜந்ம சதுர்முகா2த்மநா || 

உன்னிடத்தில் சேஷத்வம் கொண்டு உன்னடிகளுக்கே தொண்டு புரிவதில் எப்பொழுதும் ஈடுபாடு கொண்டவர்களின் இல்லங்களில் புழுவாய் ஆகினும் பிறப்பேனாக. மற்றவர்களின் இல்லங்களில் சதுர்முகப் பிரம்மா போன்ற பிறவியாயினும் கூட எனக்கு வாய்க்க வேண்டுவதில்லை. 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Tuesday, July 5, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 54

 அவபோ3தி4தவாந் இமாம் யதா2

மயி நித்யாம் ப4வதீ2யதாம் ஸ்வயம் |

க்ருபயா ஏதத3நந்யபோ4க்3யதாம்

43வந் ப4க்திம் அபி ப்ரயச்ச2 மே || 

என்றும் எனக்கு நிலைத்த ஸ்வரூபமாயிருக்கும் உமக்கேயான சேஷத்வம் என்னும் இயல்பை எனக்கு உணர்த்தியது போன்றே, பகவானே! உம்முடைய காரணமற்ற சொந்த கிருபை ஒன்றினாலேயே உம் திருவடிகளில் அன்றி வேறொன்றிலும் தோய்வே அற்ற பக்தியையும் எனக்குக் கொடுத்தருள்வீராக! 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Monday, July 4, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 53

மம நாத2 யத3ஸ்தி யோSஸ்ம்யஹம்

ஸகலம் தத்3தி4 தவைவ மாத4வ |

நியதஸ்வமிதி ப்ரபு3த்34தீ4:

அத2வா கிந்நு ஸமர்ப்பயாமி தே || 

என்னை உன் உடைமையாய்க் கொண்ட என் நாதனே! என்னுடையது என்று எதை நினைக்கிறேனோ, எந்த ஒன்றாய் நான் இருக்கிறேனோ, அஃது அனைத்தும் உன்னுடையதே அன்றோ திருமகள் கேள்வ! முக்காலத்தும் இஃது இப்படியேதான் உன்னுடைய உடைமை என்பதை உணர்ந்த புத்தியுடைய நான் (முன்னர் ஸமர்ப்பித்து விட்டேன் என்று சொன்னாலும் உண்மையில் பார்த்தால்) உனக்கு எதைத்தான் ஸமர்ப்பிக்க முடியும்? 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Sunday, July 3, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 52

வபுராதி3ஷு யோSபி கோSபி வா

கு3ணதோSஸாநி யதா2ததா2வித4: |

தத3யம் தவ பாத3பத்3மயோ:

அஹமத்3யைவ மயா ஸமர்ப்பித: || 

தத்துவ நிலைப்பாடுகள் எப்படி இருந்தாலும் அவனுடைய திருவடிகளில் பக்தி மிக முக்கியம் என்கிறார். தேஹமே ஆத்மா. இந்திரியங்களே ஆத்மா, பிராணனே ஆத்மா, மனோமயனே ஆத்மா, விஞ்ஞானமயனே ஆத்மா, இவையெல்லாம் எதுவுமில்லை பிரகிருதியைத் தாண்டியதாய், ஞானம், ஆனந்தம் என்னும் அவற்றையே தன் இலக்கணமாய்க் கொண்ட எதுவோ அதுவே ஆத்மா இப்படி ஆத்மா என்பதன் வபு, வடிவைப் பற்றிப் பலபடியான கொள்கைகள் உண்டு. ஆத்மாவின் ஸ்வரூபம் எப்படிப் பட்டது என்பதிலும், அணு ஸ்வரூபம், விபு, உடலளவு பரிமாணம் உள்ளது, நித்யன், அநித்யன், ஞாத்ருத்வம் உண்டு என்று பலபடியான பேச்சுகள் உண்டு. இவற்றில் ஏதோ ஒன்று ஆத்மாவின் இயல்பு என்று ஆகிவிட்டுப் போகட்டும். இப்பொழுது முக்கியம், அறிவுக்குப் புலப்படும் பொருளைக் காட்டிலும் வேறாய், தனக்கே அர்த்தம் ஆகும் இயல்புடைய வஸ்துவாய், பிரத்யக்ஷத்திற்கு எட்டுபவனாய்ப் பிரகாசிக்கின்ற இந்த நான் ரக்ஷகரான தேவரீருடைய பாதபத்மங்களில் இந்தக் கணமே என்னால் ஸமர்ப்பிக்கப்பட்டுவிட்டேன். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Saturday, July 2, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 51

தத3ஹம் த்வத்3ருதே ந நாத2வாந்

மத்3ருதே த்வம் த3யநீயவாந் ந ச |

விதி4நிர்மிதம் ஏதத3ந்வயம்

43வந்! பாலய மாஸ்ம ஜீஹப: || 

பகவானே! உமக்குத் தெரியாததில்லை. உம்மை விட்டால் எனக்கு நாதன் கிடையாது. என்னை விட்டால் உமக்கும் தயை காட்டுவதற்கு உரிய ஆள் கிடையாது. உமது அருளின் விதியால் ஏற்படுத்தப்பட்ட இந்தத் தொடர்பை நீரேதான் பாதுகாக்க வேண்டும். கைவிட்டுவிட வேண்டாம். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Friday, July 1, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 50

ந ம்ருஷா பரமார்த்த2மேவ மே

ச்ருணு விஜ்ஞாபநம் ஏகம் அக்3ரத: |

யதி3 மே ந த3யிஷ்யஸே ததோ

3யநீய: தவ நாத2 து3ர்லப4: || 

பொய்யில்லை ஐயனே! மெய்யாகவே சொல்லுகிறேன். என்னுடைய ஒரு விண்ணப்பத்தை முதலில் கேட்டருள வேண்டும். எனக்கு நீ ஒரு வேளை தயைகாட்டாமல் போவாயாகில் பிறகு, நாதனே! உனக்குத் தயை காட்டுவதற்கு யாருமே கிடைக்க மாட்டார்கள். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***