Tuesday, June 2, 2015

ஸ்ரீரவீந்திரநாத் தாகூர் அவர்களின் கவிதை ஒன்று


இன்று ஸ்ரீரவீந்திரநாத தாகூர் பிறந்த தினமாம். தேடும் போது இந்தப் பாடல் கிடைத்தது. இதையொட்டித் தமிழில் -

படகோட்டி எந்தன் வழிகாட்டி!
பதைபதைக்கும் என் உள்ளம்
தொலைதூரத்து நிலம் தேடியே
தாகம் கொண்டுள்ளது என் உள்ளம்.
கையிரண்டினில் காலத் தாளங்கள்
கண்ணெதிரினில் கடலாழங்கள்
கிராமத்தில் அவள் பெயர் கன்னங்கருங் காளி
கொத்துக் கொத்தாய்ப் பூத்துக் குவிந்தது வசந்தம்
உவமையற்றவளே!
ஓடிவிட்டன நாட்கள் இதயம் சுமந்த அழகோடு
இந்த நாளொன்றினில் அவளிடம் சொல்லல் ஆம்
பொன்னால் வனைந்ததொரு கூட்டில்
புள்ளொன்று வதிந்ததும் உண்டு சிலகாலம்
உண்மையும் நீயே
உயிர் அன்பெனும் நீயே
உற்றது போல் அண்மை வந்ததும் நீயே
அன்றி வாராது நின்றதும் நீயே.

***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*



No comments:

Post a Comment