பெரும் அரசியல் சித்தாந்தங்கள், மத ரீதியான வாத ப்ரதிவாத (வேண்டாம் எங்கு நிறுத்தறதுன்னு தெரியல்லை), அன்றாட சமுதாயச் சீர்கேடுகள், அலற வைக்கும் பொருளாதாரச் சீரழிவுகள் -- சார் சார்! வேண்டாம் சார்.
இப்பொழுதுதான் காலையில் எழுந்து உட்கார்ந்து விடிந்த உலகத்தைப் பார்த்து ஒரு கொட்டாவி விட்டு, ஒரு கப் டீ குடித்துக் கொண்டிருக்கிறேன். அல்லது
மாலையில் ஆஞ்சு ஓஞ்சு வந்து ஒரு கப் டீ அல்லது காபி குடித்துக்கொண்டே ஏதாவது மென்மையான நகைச்சுவை மிளிரும் இலக்கிய மிளகு ரசம் ஏதாவது சிப் பண்ணிக்கொண்டே.... இந்த மாதிரி நீங்க நினைப்பதுண்டா தெரியவில்லை. ஆனால் நான் நினைப்பதுண்டு.
அந்த நேரத்தில் ஏதாவது பெரிய சித்தாந்த பண்டிதர்களோ புரட்சி வீரர்களோ வந்தால் சொல்லாமல் கொள்ளாமல் நழுவிப் போய் ஒளிந்துகொண்டுவிடுவேன். 'கோழைப் பையா! கோழைப்பையா என்று என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். ஆளை விடுங்கப்பா...
அப்படிப்பட்ட தருணங்களில் சில விதமான எழுத்தாளர்களின் எழுத்துகள் மிகவும் தருணத்துக்கு இசைந்து மிக நளினமாகவும், அமைதியாகவும் ரசிக்க வரும். மார்க் ட்வெயின் ஓர் எழுத்தாளர். பழைய எஸ் வி வி ஒருவர். இன்னும் பலர் ஐரோப்பா, ப்ரெஞ்சு, அமெரிக்க, நம் நாட்டு தமிழ், இந்திய ஆங்கில (குறிப்பாக ஆர் கே நாராயணன்) இன்னும் பலர். ஜெரோம் கே ஜெரோம்.
(என்ன டேஸ்டுய்யா உன்னுது? சீரியஸ் எழுத்தாளன் சீண்டுவானா நீ சொல்ற ஆட்களையெல்லாம்? -- I don't care :-) You may or may not accept this as a genre in itself. But I have these in my register of my privacy)
இதில் தனிப்பெரும் இடம் வகிப்பவர் நமது மிடில் க்லாஸ் ஸ்ரீமான் பி ஜி வோட்ஹௌஸ் என்னும் P G Wodehouse.
அவரைப் பற்றிய ஒரு நல்ல வீடியோ பார்த்த நினைவு தேநீரோடு கமழ்கிறது.
*
பண்டைய கிரேக்கம் ஏதன்ஸ், அரிஸ்டாடில், ப்லாட்டோ, ஹோமர் என்ற நினைவு மணங்கள் கமழ இருப்பது.
இன்றைய கிரேக்கம் எப்படி? என்பதற்கு ஓரு திசை காட்டியாகச் சினிமா உலகில் இருந்தவர் தியோ ஆஞ்ஜலோபோலஸ். Theo Angelopoulos. ஹாலிவுட் சினிமாத்தனத்திற்கு ஒரு மாற்றமாகத் திகழ்பவை தியோவின் இயக்கக் காட்சிகள். அமைதி, இயல்பு, ஆழ்ந்த நிதானம் இவை காமிராவின் கண்களிலும் நிரம்பியிருக்கலாம் என்று காட்டியவர் தியோ.
கவிதையும், தத்துவமும் அவசர் அடி உலகின் ஆரோக்கியமான மாற்றாக இருக்க முடியும் என்பதை சினிமா வாய்பாட்டை மாற்றிக் காட்டியதின் மூலம் கிரேக்க சினிமாவை ஓரடி முன்னெடுத்துச் சென்றவர் தியோ ஆஞ்ஜலோபோலஸ்.
அவருடைய Eternity and a Day என்னும் படத்திலிருந்து ஒரு காட்சியைப் பார்த்த நினைவு.
*
பழம் பழைய இசை எப்படி இருக்கும் கேட்பதற்கு?
யாரேனும் வாசிப்பார்களா?
சிலப்பதிகாரத்தில், சங்க இலக்கியத்தில் பாணர்கள் வாசித்த அந்தச் சீறியாழ் இசையைக் கேட்க முடியுமா? (விபுலாநந்த அடிகளே! எங்கு இருக்கீங்க...)
இசைக் குறியீடு கொண்டு முழுமையாக ஒரு பழம் பாடல் மாட்டியிருக்கிறது முழுமையாக.
கிரேக்க இசை.
ஸெயிக்லோஸ் என்பவர் தமது மனைவி.. காதலி?.. தெரியவில்லை.. அவளுக்குத் தெரிவிப்பதாக நான்கு வரி -
கானல்வரி என்பது போல் இதைக் கிரேக்கவரி என்று சொல்லிவிடலாமா?
வாழும்வரை சுடராய்
வருந்தாதே திகழ்வாய்
வாழ்வதுவும் புன்கணமே
காலத்தின் துர்குணமே
இவ்வாறு இதை மொழிபெயர்த்துக் கொள்ளலாமா?
*
'ஐயோ பாவம் ஜீவன்கள்' என்று உலகத்தில் சில ஆட்கள் உண்டு.
யாரென்று பார்க்கிறீர்களா? புத்தகங்களைக் காதலிக்கும் பைத்தியங்கள்.
புத்தகக் காதல் எவ்வளவு பெரியது என்பது உங்களுக்குத் தெரியாது. அதில் அடிபட்ட ஆட்களுக்குத்தான் அந்த ரணம், அல்லது அந்தச் சுகம் புரியும். (சரி..சரி.. நீ அப்படிப்பட்ட ஆள்தானே.. என்று முறைக்காதீர்கள்... நான் தான் மறுக்கவில்லையே )
வாழ்க்கை ஒழுங்காத்தான் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் பாருங்கள் திடீரென்று இந்தப் புத்தகக் காதலில் விழுந்துவிட்டால்... ஓமை காட்.... அப்புறம் வாழ்க்கையில் எதுவுமே பெரிதில்லை.
அந்த அருமையான ஜாக்கெட் போட்ட.. அதோ அங்க இருக்கே.. அதுதான்... பார்த்தால் கொஞ்சம் க்ழிந்த ஜாக்கெட் மாதிரி இருக்கில்ல... வோவ்வ்வ்வ் என்ன ப்யூட்டி....!
இதெல்லாம் இந்த மாதிரிப் பைத்தியங்களின் காதல் வசனங்கள். மறுபக்கம் கண்ணுக்குத் தெரியாமல் ஒரு பக்கம் மட்டுமே கண்ணில் பட்டதென்றால் உங்களுக்கு இவர்கள் பெரிய காமுகர்களோ என்று முகம் சுளிக்கத் தோன்றும். ஆனால் பாருங்கள்... பரிதாப ஜீவன்கள்.... பழம் புத்தகக் கடையில் அட்டை பிய்ந்தும், புது அட்டையுடனும் இருக்கும் நூல்களை இதுகள் விவரிக்கும் லட்சணம்... ராமா ராமா...
இதோ ஒரு பத்து நிமிஷம் அந்தப் புத்தகக் கடையில் நுழைந்துவிட்டு வந்துவிடுவோம். ஒரு புத்தகம் தேடிக் கொண்டிருக்கிறேன்... ஜஸ்ட் அது இருக்கான்னு மாத்திரம் கேட்டுவிட்டு.... நான் பண்ணும் இந்த மாதிரியான அப்பவித்தனங்களுக்கு இரையாகி என் நண்பர்கள் நொந்து நூலாகிப் போன கதைகள் இருக்கின்றனவே... ச்சோ ச்சோ.. அப்புறம் எனக்கே அசிங்கமாக இருக்கும்... ச என்னடா இது... கொஞ்சம் கூட கன்ஸிடரேஷனே இல்லாமல்... சீ.. ஆனாலும் அந்த கட்டு குலைந்தும் கட்டு குலையாதும் இருக்கும் சாகசக்காரி கண்ணில் பட்டுவிட்டால் ம்ம்ம் மானம் அவமானம்.. கருணை.. நயம்.. எல்லாம் அம்பேல்.
பத்து புத்தகங்களைக் கையில் அள்ளிக்கொண்டு வேர்க்க விறுவிறுக்க நான் ஏதோ இன் டைம் கீப் பண்ணால் போல் நண்பருடன் சேர்ந்து கொள்ளும் போது, சபித்துக்கொண்டிருந்த அந்தப் பொன்னிதழ்கள் நட்புக்காகப் பாவம் ஒரு மெல்லிய புன்னகை மலர்ந்து, சகிப்புத்தன்மையில் விரிந்து, இட்ஸ் அ கேம் என்னும் பரந்த மனப்பான்மையில் விகசித்துப் பெரிதாகச் சிரிக்கும் பாருங்கள்... வாவ் லவ்லி காட்சி அதுதான்.
மோகன்! டூ யூ நோ ஹௌ மச் டைம்? யூ டோல்டு மீ 5 மி. நௌ ஈட் இஸ் 3 ஹவ்ர்ஸ்....
ஆனால் அடுத்தமுறை அதே நண்பர்கள் ஏமாற மட்டார்கள். கொஞ்சம் ரெக்யுபரேஷன் டைம் கொடுக்கணும். அதுவரை வேறு தேறிவிட்ட நண்பர்கள்... இல்லை சார்.. ஏஞ்ஜல்ஸ் என்பது எனக்கு என் நண்பர்கள்தான். அவர்கள் என்னைப் பொறுத்துக்கொண்டமைக்கு நான் என் கண்ணீரைத்தான் காணிக்கையாக ஆக்க முடியும். எனக்கு மனைவி இருந்திருந்தால் என்றோ டைவர்ஸ் செய்திருப்பாள். ஆனால் அதுகூட உறைக்காமல் இருந்திருக்கும் -- அப்படிப்பட்ட போதை புத்தகக் காதல்.
*
இந்தியா, ஐரோப்பா - இரண்டும் ஒன்றை ஒன்று, ஒன்றில் ஒன்றை கண்டு வியக்கும் கணங்கள் காலம் நெடுக இருந்து வந்துள்ளது.
விஷ்ணு பக்தி தென் ரஷ்யாவின் கோடி அஸ்ட்ரகானில் 16ஆம் நூற்றாண்டு முதல் 300 வருஷங்கள் செழித்திருந்தது.
பிரான்ஸின் இலக்கிய மாமேதை விக்டர் ஹ்யூகோ ஸ்ரீராமாயணத்தையும், மஹாபாரதத்தையும் கண்டு வியந்தார்.
யூஜின் புர்னோஃப் கொடுத்த வகுப்பு உரைகள் நெடும் பாரதப் படிப்புகளுக்கு வழி வகுத்து, மாக்ஸ் முல்லரைத் தூண்டிவிட்டு ரிக் வேதம் சாயண பாஷ்யத்துடன் திறனாய்வுப் பதிப்பாக வெளிவர வழிவகுத்தது.
பதினெட்டாம் நூற் ரஷ்யாவிலிருந்து கப்பல் ஊழியராய் வந்தவர் சென்னையில் தங்கி இந்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டுப் பின்னர் கல்கத்தா சென்று அங்கு வங்காள மொழியை நன்கு கற்று புதுவிதமான நாடக இயக்கத்தையே தோற்றுவித்தார்.
மீண்டும் மீண்டும் இந்தியாவும் ஐரோப்பாவும் இதயப் பார்வைகள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன பண்பாட்டின் மொழிகளில்.
*
கலையை மனிதன் உண்டாக்குகிறான்.
கலை மனிதனை உண்டாக்குகிறது.
முதல் கலையின் அங்குரார்ப்பணத்தை அவன் மூளையின் இயக்கம் போடுகிறது.
முடிந்த கலையின் முகையிலும் அவன் மூலக்கலையின் மணம் அவிழ்கிறது.
படிந்து வந்த காலம் எல்லாம் அவன் பாவை விளக்காய் ஆகிறது.
கடிந்துவிட்ட வடிவமெல்லாம் அவன் களிப்பின் மிகுதியைச் சொல்கிறது.
கலையின் மொழி அவன் பெருமிதத்தின் பிரதி.
அலையும் அவன் ஆர்வப் புனல் பெருகி வந்த நதி.
35000 ஆண்டுகளுக்கு முந்தைய பெண்குலப் பேரெழில் இன்றைய பூசைப் புன்னடிக்குள்ளும் ஒளிந்து மயக்குகிறது.
மனிதன் அன்றிலிருந்து இன்றுவரை ஒன்றைத்தான் காதலித்திருக்கிறான்.
கண்கள் மயங்க கருத்து தியங்க ஒன்றுதான் அவன் பித்து.
மனித உடல்.
அன்றாடம் காணும் உடம்பு அன்று.
என்னாளும் நின்று அவனை ஆளும் மனித உடல்.
தன்னிலும் விஞ்சி, தானதை விஞ்சி, தமரிலும் விஞ்சித் தளராமல் மனித குலம் வனையும், புனையும், வடிக்கும், எழுப்பும், நடிக்கும், தீட்டும், பாடும், இசைக்கும் அத்தனை அத்தனை கலை வடிவங்களின் ஒற்றை ஸ்டூடியோ - மனித உடல்.
குகை ஓவியங்களின் மர்மம் என்ன? ஏன் குகையில் வரைவதை நிறுத்தினர்? மூளையின் வண்ணத் திசுக்களைப் பற்றிய மன வைத்தியச் சோதனை தொழில் நுட்பங்களுக்கும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பிரான்ஸு, ஸ்பெயின் குகை ஓவியங்களுக்கும், ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஆஃப்ரிக்க பழங்குடிகளின் ஓவியத்திற்கும் என்ன சம்ப்ந்தம்?
காட்டுக் கோதுமை அவிழ்க்கும் மர்மம் என்ன?
பூமிக்குள் ராக்ஷஸ தூண்கள் சுழல் படிக்கட்டு போல் போகும் அமைப்பின் மர்மம் இரவில் வெளிச்சமாகும் விந்தை - இவையெல்லாம் பிபிசியின் கலை உலகைச் செய்தது எப்படி என்ற வீடீயோ வெளியீடுகள்.
*
ரஷ்ய கிளாஸிகல் இசைப்பாட்டுகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
என்னவோ ஓர் எண்ணம். அங்கு எங்கோ பிறந்திருக்க வேண்டியவன் தவறிப் போய் இங்கு பிறந்துவிட்டேனோ என்று. என்னவோ உள்ளம் மிகவும் சொந்தம் கொண்டாடுகிறது அதைப் பார்க்கும் பொழுது. பைத்தியக்காரத் தனமான எண்ணம். பரவாயில்லை. ஆனால் அங்கு பிறந்திருந்தால் நமது பண்பாட்டை நன்கு புரிந்துகொண்டிருக்க முடியுமா? இங்கு பிறந்தால் எந்தப் பண்பாட்டையும் நன்கு புரிந்துகொள்ள முடிகிறதே. அதுவோ நமது சிறப்பு! இருக்கலாம். தேவ ரகசியங்களை மிகவும் நோண்ட முடியாது.
அது போகட்டும் நல்ல டீ! இதமாக நன்கு இலைகள் பாந்தமாக நன்கு கொதித்திருக்கின்றன. தொண்டைக்கு நன்கு இதமாக இருக்கிறது. அப்படி ஒ ரு ஸொப்ரேனோவில் எடுத்து விட்டால் எப்படி இருக்கும்! வோவ்....
*
இசை என்பது என்ன?
ஆத்மா என்னும் பறவை தன் சிறகுகளைக் கோதிவிட்டுக்கொண்டு அவ்வப்பொழுது பறந்து, நெட்டுகுத்த நேர்விண் புள்ளியில் குறியாய் விரைந்து, மடங்கி, சிறகுகளைக் கீழே போட்டு மல்லாக்க மண்ணை நோக்கி வீழ்வதைப் போல் வந்து பின் நிரந்து திசை பூசிச் செல்லும் பல் வேறு வேகத் திரை அபிநயங்களால் தன் மகிழ்வில் திளைக்கும் அற்புதமான தனிமைக் கணம்.
இவ்வாறு எந்த இசை நம்மை உணர வைக்குமோ அது இசை. அல்லாதது வசை என்க.
உண்மையான இசைக்கு,
உண்மையின் இசைக்குச்
சொற்கள் வேண்டா.
தடைப்படாத உள்ளத்தின் அவகாசம்தான் வேண்டும். அந்த உள்ளம் என்னும் உள்வானின் பல கதுப்புகளைத் தன்னுள் அமிழ்த்தித் திறக்கும் வல்லபம் இசையின் சுராவளிகளுக்கு இருக்க வேண்டும்.
சில இசைகளைக் கேட்டால் ஏதோ 10 ரூ கைமாத்து விஷயமாக இரண்டு பேருக்கு நடுவில் பயங்கர சண்டை போன்று தோற்றம் அளிக்கும். நீதான் இல்லை நீதான் இல்லை நீதான் என்று மாற்றி மாற்றி லாவணியாகத் திட்டித் தீர்ப்பதற்குள் மனிதனின் பிராணனே ஓய்ந்திருக்கும் பொழுது இசையின் பிராணனைக் கேட்பானேன். அது தான் மிகவும் மானஸ்தன் என்று முன்னரே முடிந்திருக்கும். (கர்நாடக சங்கீதப் பிரியர்கள் என்னைத் தவறாக நினைக்க வேண்டாம், அவர்களின் இசையைப் பற்றித்தான் நான் மறைமுகமாகக் குறிப்பிடுகிறேனோ என்று).
பனியில் ஸ்கேட்டிங் விளையாடுவார்கள். தான் தான் என்று தன்னை நிலைநாட்டிக் கொள்ளத் துடிக்கும் வரை தடுக்கி, விழுந்து, தட்டுக் கெட்டுக் கஷ்டம். ஆனால் அந்த பனிப்பாதைகளின் பல்வேறு நோக்குகளையும் வளைவுகளையும் மனத்தில் வாங்கிக் கொண்டு கொஞ்சம் தான் என்பதைக் கழட்டி கிளம்பும் முன் அந்த ஹாங்கரிலேயே விட்டுவிட்டால் போதும் அப்புறம் ஸிம்பனியின் இசைக் கோலமாகத்தான் இழைந்து குழைந்து விர்ரென்று எழுந்து மூவ்மெண்ட்ஸ் போய்க்கொண்டிருக்கும். கடல் நீர் ஸர்ஃபிங் கேட்கவே வேண்டாம்.
இதெல்லாம் இல்லாமல் பாசிபடிந்த குளப்படிக்கட்டுகளில் உட்கார்ந்துகொண்டு ஒரு காலால் மறுகாலின் பின்னத்திக் காலைத் தேய்த்தபடியே குளப்படிக்கட்டுகளில் தேங்கிய நீரில், பார்க்கிறியா பார்க்கிறியா இப்ப நீயா நானா பார்க்கிறியா என்றபடியான இசை மூர்ச்சனைகள் எப்படி இருக்கும். நான் பொதுவாகச் சிறகு முளைக்காத சங்கீதங்களைச் சொன்னேன். யாரும் என்னை முறைக்க வேண்டாம்.
அப்படி என்னய்யா நீ இசையைக் கண்டே? என்று கேட்கிறீர்களா... அப்படிக் கேளுங்க அப்பு... அதுக்குத்தானே இத்தினி பீடிகை....
எனக்குப் பிடித்த இசைத் துறைகள் என்ன எனில் கான்ஸர்டோ, ஸிம்ஃபனி, ராப்ஸொடீஸ் என்னும் ரஷ்ய, ஜெர்மானிய பொதுவாக ஐரோப்பிய க்லாஸிகல் இசை.
மொஸார்ட், விவால்டி, பிதோவன் கேள்விப் பட்டிருக்கலாம்.
ஆனால் ரஷ்ய க்லாஸிகல் இசை என்பது ஆத்மாவின் இசைக்கான கண்வ ஆச்ரமம். ஒஸ்தியான சரக்கு மட்டுமே கிடைக்கும் என்று சொன்னால் அது ரஷ்ய க்லாஸிகல். 12 வருஷம் ஒருவர் அடைகாத்தால்தான் இசையின் குஞ்சு பொறிக்கும் அங்கே.
அந்த அணியிலும் டாப் பிரம்மாக்கள் என்று சிலர் உண்டு. அவர்கள் இசையில் ஆத்மா என்பது தன்னிச்சையாக வந்து அமர்ந்து ஜலக்ரீடை செய்யும். ஏதோ அப்ஸரஸுகள் குளிக்கும் காட்சியைப் பார்க்க நேர்ந்த அச்சுபிச்சுகள் போல் நாம் கல்லாகி உறைந்து நிற்க வேண்டியதுதான். அப்படிப்பட்ட சிலர் சைகோவ்ஸ்கி, செர்கே ரக்மனினோஃப்.
NB -
இசை என்பது பல மொழிகளை உடையது. பல இலக்கணங்கள் உடையது என்பதும் உண்மைதான். கர்நாடக இசையின் நுணுக்கங்கள் எனக்கும் மிகப் பிடித்ததுதான். அது மட்டுமின்றி ஹிந்துஸ்தானி இசை சட்டென்று ரசிப்பதற்கு மிகவும் கஷ்டம். கீழ்ஸ்தாயிலேயே பெரும்பாலான சஞ்சாரம் நடக்கும். இவர்கள் இந்தக் குழியிலிருந்து எழுந்து எப்பொழுது வெளியில் வரப்போகிறார்களோ என்று கூடத் தோன்றும். ஆனால் அந்த இசையின் நுணுக்கம் என்று அறிந்து உள்ளே போகும் போது அதில் கிடைக்கும் சுகமும் அலாதியானதுதான். சமீபத்தில் நான் கேட்ட சீன இசையின் தாக்கத்திலிருந்து நான் இன்னும் மீளவே இல்லை.
எனவே நான் கூறுவது என் கருத்தை முழுக்க நான் கூறுவதாக ஆகாது. பார்க்கப் போனால் பல இசைகளின் ரசிகன் நான்.
ஆனால் எனக்குப் பிடித்த ஒன்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் காட்ட அலங்காரமாக மற்ற இசைகளைக் குறை கண்டு பிடுத்துச் சொல்லும் அலங்கார உத்தியாக இதைக் கொள்ள வேண்டும்.
அதுவுமிலலமல் இசையைப் பற்றி பெரும் விவாதங்கள் இல்லாமல் இருப்பதைக் கொஞ்சம் தூண்டி விடலாமே என்ற எண்ணத்தாலும் நான் எழுதுவது. எனவே ஏதோ அறுதியான நிலைப்பாடு போன்று அப்படியே எடுத்துக்கொண்டு தவறாக நினைக்க வேண்டாம்.
அனுபவிக்கும் ரசனை பிரதானமான விஷயங்களில் அவ்வப்பொழுது கருத்துகள் மாறிக்கொண்டிருக்கும். இதுதான் என்று பிடித்து வைத்தது போல் சொல்ல முடியாது.

Candide என்பது வால்டேர் எழுதிய அற்புதமான விமரிசன ரீதியான எள்ளல்
இலக்கியப் படைப்பு. Optimism என்ற ஒரு கண்மூடிக் கொள்கை -- 'உலகமெல்லாம்
சௌக்கியமா இருக்கு. எல்லாரும் பேஷா நன்னா இருக்கா. அது அது நடக்குதுன்னா
எல்லாம் நல்லத்துக்குத்தான்.' - இவ்வாறு பார்வையில் சர்க்கரையைக் கொட்டிக்
கொட்டை இனிப்பாக ஒரு கொள்கையை அலெக்ஸாண்டர் போப் சொன்னதுண்டு. இன்னும்
பலரும்.
என்ன விரசம் என்றால் பெரும் இயற்கை அழிவுகள், பூமிப் பிரளயங்கள் ஏற்பட்டு மில்லியன் கணக்கான உயிர்கள் மடிந்த தருணம். அதற்குக் காரணம் மத நம்பிக்கைகளுக்கு எதிராகப் பேசும் சுயசிந்தனைக் காரக் கூட்டம் என்று கும்பல் கும்பலாக எரிக்கப்பட்ட தருணம்.
'என்னப்பா ஆப்டிமிஸ்டு? இதுவும் ஆப்டிமிஸம்தானா?'
வால்டேரின் கேள்வி உண்மையால் சுடுகிறது. இலக்கிய எள்ளல் என்ற சீமெண்ணையை ஊற்றி.
அதன் ஒலிநூலைக் கேட்டு கேண்டீட் பற்றித் தெரிந்துகொள்வதைவிட லியோனார்ட் பெர்ன்ஸ்டீன் இசையமைத்து அருமையான நடிகர்கள் பங்கேற்ற இசை நாட்டிய நாடகமான இந்த Opera - Candide அற்புதமாக வால்டேரின் உள்ளத்தைக் காட்டுகிறது.
***