Saturday, October 24, 2020

இருத்தல், உணர்தல்

 ’இருத்தல்’ ~ ‘உணர்தல்’ ~~~ தத்துவப் பள்ளிகள் நெடுக இதன் விசதீகரணம் என்று சொல்லி விடலாம். ஒன்றுதான் இருவிதத்தில் நோக்கப் படுகிறது. இருத்தல் என்னும் கணத்தில் உணர்தல் கருதுபொருளாக ஆகிறது. உணர்தல் என்னும் கணத்தில் இருத்தல் கருதுபொருளாக ஆகிறது. ஸத் என்னும் பொழுது சித் ஆச்ரயமாகவும், சித் என்னும் பொழுது ஸத் ஆச்ரயமாகவும் ஆகிநிற்கும் ஒரு ஜேனஸ் ஸ்திதி இந்தத் தத்துவச் சிந்தனை. இதை அகப்படுத்தி, செறிவுடன் செம்மி உரைத்தவர்களும் உண்டு. சமீபத்தில் ட்ரிஸ்டன் கார்ஸியா என்னும் ப்ரெஞ்சு தத்துவ ஆசிரியர் என நினைக்கிறேன்.

”Being is being comprehended. Comprehending is being been -- être été. The active sense of one is the passive sense of the other.” (Form and Object, by Tristan Garcia, pp 105)
***

No comments:

Post a Comment