Thursday, September 17, 2026

’குமாரு ஆசான்’ அவர்களின் கவி த்ருஷ்டியில் பக்தி

பொதுவாகவே கவிகள் என்றால் தற்காலம் பக்திக்கும் தங்களுக்கும் ஜன்ம ப்ராப்தி கூடக் கிடையாது என்பது போல் ஓர் அந்நியபாவம் காட்டுவதுதான் நவீன சைலியாகத் தமிழ் இலக்கிய உலகில் இருக்கும் பெருவழக்கம். மத நிறுவனங்கள், மத ரீதியான கெடுபிடிகள் என்பவற்றால் மனித சிந்தையானது சிறைபட்டுவிடக் கூடாது என்னும் அக்கறைதான், பக்தி என்பதையே அயல்பாவத்தோடு ஒதுக்கிவிடக் காரணம் என்று நம்புவது பெரும்பாலும் மூடநம்பிக்கையாகத்தான் போய் முடிகிறது. காரணம் நல்லது, தீயது இரண்டும் எதில் எது கலந்து கிடக்கிறது என்று அறிவதே சில சமயம் கடினமாக இருக்கும் நம் உலகில், எதையும் அணுகும் விதத்திலும் நல்லவிதம், தீயவிதம் என்ற அணுகுமுறை பிரித்தறிவும் தேவை என்று ஆகும் பொழுது, கண்மூடித்தனமாக ஒன்றை வறட்டு அடியாக நல்லது என்றோ, கெட்டது என்றோ எதிர் இயங்குவது சிறுபிள்ளைத்தனம் என்னும் போக்கு பிரபலமாக ஆகும் காலகெட்டம் நம்முடையது. இதில் பக்தி என்றால் மட்டும் இந்த முன்சாக்கிரதை உணர்த்திகள் எதுவுமின்றி, பழைய பஞ்சாங்கப் புளிக்காய்ச்சலாக நம் அந்நியப்படும் மனப்பான்மைக்கு இயல்பான நியாயம் எதுவும் இருக்கச் சாத்தியமில்லை. 

பழைய மூடநம்பிக்கைகள்தாம் அறிவுக்கு விரோதி, புதிய மூடநம்பிக்கைகள் அறிவுக்குத் தடையில்லை என்று இயற்கை விதி எதுவும் மாறி அமைந்துவிடவில்லை என்று ஓர்மைப் படுத்தும் விதமாகத்தான் குமரன் ஆசானின் முன்னுரை, அவர் எழுதிய சிவ ஸ்தோத்ரங்களுக்கு அவரே எழுதிய முன்னுரை, அமைந்திருக்கிறது. அந்த முன்னுரையில் அவர் இடும் கையெழுத்து ‘குமாரு ஆசான்’ என்றே இருக்கிறது. நூல் - ஆசான்டெ பத்யக்ருதிகள், அதில் ஆசான்டெ ஸ்தோத்ரக்ருதிகள் 1901 அவதாரிக என்று முகவுரை எழுதியிருக்கிறார் ஸ்ரீ கே அய்யப்பன் பி ஏ அவர்கள். 

சிவஸ்தோத்ரங்கள் முன்னுரையில் குமரன் ஆசான் எழுதுகிறார்: 

“ஈச்வரன்டெ அமேயங்களாய மாஹாத்ம்யங்களெ லளிதமாயி ஹ்ருதயத்தில் ப்ரகாசிப்பிச்சு நிஷ்கன்மஷமாய ஒரு அந்தராச்வாசத்தேயும் ஆநந்தத்தேயும் அநுபவிக்குன்னதின் ஆஸ்திகன்மார்க்கு மதுரங்களாய ஸ்தோத்ரங்கள்போலெ விக்ரஹங்களோ தேவலாயங்களோ ப்ரக்ருதியில் காணப்பெடுன்ன அஸங்க்யேயங்களாய அத்புதங்கள் தன்னெயுமோ அத்ர ஸுகரங்களாய ஸஹாயங்கள் அல்லென்னு பலர்க்கும் அனுபவமாயிரிக்கான் இடயுண்டு. விசிஷ்ய, தேவாலயங்கள், தீர்த்தங்கள் முதலாய பாஹ்யாலம்பனங்கள்க்குபோலும், ஈச்வரவிபூதிகளுடெ காடகளாய பரிசிந்தனகளால் வ்யாஸாதிகளாய திவ்யகவிகளுடெ ஹ்ருதயத்தில்நின்னும் ஸ்தோத்ரரூபமாயி வெளியில் ப்ரவஹிச்ச சைதன்யலஹரிகளாகுன்ன ஸர்வாராதனீயமாய ஒரு விசேஷத்தெ ஆதானம் செய்யுன்னு என்னுள்ளதும் விவேகத்ருஷ்டியில் ப்ரத்யக்ஷமாணல்லொ. 

“நித்யக்ருத்யங்களில் வ்யாபரிச்சு வின்னஹ்ருதயனாயிரிக்குன்ன ஒருவன் சாந்தங்களாய பத்யங்களேயோ கானங்களேயோ கேள்க்கும்போழ் உத்யானத்திலெ மந்தவாயு ஏல்க்குன்னதினேக்கால் எத்ரயோ அதிகவும் அப்ரதீக்ஷிதவும் ஆய ஒரு ஆச்வாசவும் ஸுகவும் அவன்டெ ஹ்ருதயத்தில் உடனே உண்டாகுன்னதும் சிலப்போழ் ம்லானமாயிருன்ன அவன்டெ முகம் ஆனந்தாச்ரு தாரகளால் தர்சனீயமாகும்வண்ணம் ஆப்லம்விதமாயிப் போககூடியும் செய்யுன்னதும் நாம் காணாருண்டல்லோ ! துக்கபூயிஷ்டமாய ஈ ஜீவலோகத்தில் அப்ரகாரம் உள்ள ஆனந்தபாஷ்பத்தின்டெ ஒரு கணம்தன்னெ எத்ர துர்லபவும், அத்தர், பன்னீர் முதலாய ஸுகோபசார த்ரவ்யங்களேக்கால் எத்ர விலயேறியதும் ஆயிரிக்கணம்.!” 

இதன் கருத்து : 

‘ஈச்வரனுடைய அறியவொண்ணா மாகாத்மியங்களைச் சுலபமாக இதயத்தில் பிரகாசப்படுத்தி, கள்ளம்கபடற்ற ஓர் உள் ஆறுதலையும், ஆனந்தத்தையும் அனுபவிப்பதில் ஆஸ்திகர்களுக்கு இனிமை நிறைந்த ஸ்தோத்ரங்கள் போலே விக்கிரகங்களோ, தேவாலயங்களோ, இயற்கையில் காணப்படுகின்ற கணக்கற்ற அற்புதங்களோ அவ்வளவு சுகமான சகாயங்கள் அல்ல என்பது பலர்க்கும் அனுபவத்தில் தெரியவந்திருப்பதற்கு இடமுண்டு. சிறப்பாக, தேவாலயங்கள், தீர்த்தங்கள் முதலான பாஹ்யமான (மன) பிடிப்புகளுக்குப் போலும், ஈச்வரனுடைய விபூதிகளின் அடியாழம்வரை பாயும் ஆழ்ந்த சிந்தனைகளால் வியாசர் போன்ற திவ்ய்கவிகளின் இதயத்தில் நின்றும் ஸ்தோத்திர ரூபமாக வெளியில் பிரவாஹம் எடுத்துப் போந்த சைதன்ய அலைகளாம், அனைவராலும் அனைத்து விதத்தாலும் ஆராதிக்கப்படும் ஒரு விசேஷத்தை மனித உள்ளத்தில் நிலைநிறுத்துமவை என்பதும் விவேகம் கூடிய பார்வையில் பிரத்யக்ஷமாய்த் தெரியுமன்றோ! 

நித்தியமான தினசரி கார்யங்களில் விழுந்துபோன இதயம் உள்ள ஒருவன் சாந்தம் மிக்க செய்யுள்களையோ, கானங்களையோ கேட்கும் போது தோட்டத்தில் நின்றவாறு தென்றல் வீசவும் படும் சுகத்தை விட எத்தனையோ அதிகமாகவும், எதிர்பார்க்காததாகவும் ஆன ஓர் ஆறுதலும், சுகமும் அவனுடைய இதயத்தில் உடனே உண்டாகும் என்பதும், சில நேரங்களில் சோர்ந்து வாடியிருந்த அவன் முகம் ஆனந்தக் கண்ணீர் பெருக்குகளால் பார்க்கத் தெவிட்டாத காட்சியாகிப் போகும் அளவிற்கு (ஸ்தோத்ரங்கள்) செய்யும் என்பதும் நாம் பலரும் கண்டு அனுபவித்ததுதானே! துக்கமே நிறைந்த இந்த ஜீவ லோகத்தில் இந்தப் பிரகாரம் ஆனந்தக்கண்ணீர் ததும்பும் ஒரு கணம் தானும் எத்தனை துர்லபமானது! அத்தர், பன்னீர் முதலான சுகத்திற்கு உதவும் திரவியங்களை விடவும் எத்தனை விலையுயர்ந்ததாக இருக்க வேண்டும் !’ 

இது குமரன் ஆசான் தாம் எழுதிய சிவஸ்தோத்திரங்கள் என்பதற்கு முன்னுரையாக எழுதியதில் சில வரிகள். ஆசானுடைய இத்தகையதான சைதன்ய அதிர்வுகள் எதன் காரணமாக உருப்பெற்றிருக்க வேண்டும் என்று ஊஹம் செய்யும் ஸ்ரீ கே அய்யப்பன் தமது முகவுரையில் அஃது ஆசான் தம் பால்யம் தொட்டே ஸ்ரீநாராயண குருவின் சிஷ்யனாக இருந்ததுதான் என்று  கருதுகிறார். ஸ்ரீஅய்யப்பன் எழுதுவது: 

“ ஆசானும் ஒரு பக்தனாயிட்டு ஜீவிதயாத்ர துடங்கி. அது ஈழவருடெ இடயில் ஒரு வலிய மத உணர்வ்விண்டெ காலமாயிருன்னு. அது ஸ்ரீநாராயண குருஸ்வாமியுடெ உல்க்ருஷ்டவும் நிர்ம்மலவுமாய ஸன்னியாஸத்தின்டெ த்ருஷ்டாந்தம் ஜனங்களெ சக்தியாயி ஆகர்ஷிச்சு துடங்கிய காலவுமாயிருன்னு. ஆசான் பால்யத்திலேதன்னெ ஸ்வாமியுடெ சிஷ்யனாயி. ஸ்வாமியுமாயுள்ள பந்தம் ஆசான்டெ ஜீவிதத்தெ ஆகெ ஸ்பர்சிச்சு அதினு கதிமாற்றம்தன்னெ உண்டாக்கியிரிக்கணமென்னாணு ஊஹிக்கேண்டது.” 

மலையாளத்தின் மூன்று கவியரசர்களில் ஒருவராகக் கருதப்படும் குமரன் ஆசான் நவீன இலக்கியத்திற்குச் சொல்ல வருவது என்ன? பழைய மூடநம்பிக்கைகளைத் தவிர்த்து அறிவை அதன் நேரிய பாதையில் செலுத்துவது முக்கியம் என்பதைப் போன்றே அந்த அளவுக்கு முக்கியமானது நவீன மூடநம்பிக்கைகளிலிருந்தும் அறிவையும், ஆன்மத் தெளிவையும் காத்து நிறைவை நோக்கிப் பயணிப்பதும் மிக மிக முக்கியமானது ஆகும் என்பதுதானே? அதுதானே ஸ்ரீநாராயண குருவின் சந்தேசம் பலன் தரும் மார்க்கமும்? 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

Monday, September 14, 2026

புனித கங்கையும் பிள்ளையாரும்

புராணங்களில் வம்சாவளிகளை வைத்தும், காலநிரலை வைத்தும் ஆய்நது பார்த்து, காலத்தால் முந்தைய புராணங்கள் எவையாக இருக்கலாம் என்று ஒரு கருத்தை உருவாக்கும் ஸ்ரீ பி எல் பார்க்கவா என்னும் அறிஞரின் கருத்துப் படி, காலத்தால் முந்தைய புராணங்களில் ஒன்றாக பல அம்சங்களில் தெரிய வருகின்ற புராணம் பிரம்ம புராணம் எனலாம். மிகப் பழையது என்றால் மார்கண்டேய புராணம், அதற்கடுத்து வாயு புராணம், அடுத்து விஷ்ணு புராணம் என்று வரும். புராணங்களின் காலநிரலை மிகத் துல்லியமாகச் சொல்லிவிடவும் முடியாது. ஆனால் அல்பரூனி 1000 கி பி யில் எழுதும் நூலில் புராணங்களின் ஒரு நிரலைத் தருகிறார். அதில் பிரம்ம புராணம் இருக்கிறது. 

பிரம்ம புராணத்தில் ஒரு பகுதி கௌதமீ மாஹாத்ம்யம் என்பது. கௌதமீ என்றால் கங்கையைக் குறிக்கிறது. அதாவது கௌதம ரிஷியால் கொண்டுவரப் பட்ட கங்கை என்னும் பொருளில் கங்கைக்குக் கௌதமீ என்று பெயரும், அந்தக் கங்கையின் பெருமையைக் கூறுவதால் இந்தப் பகுதிக்குக் கௌதமீ மாஹாத்ம்யம் என்றும் பெயர். கௌதம ரிஷியும் தன்னைப் போல் கங்கையைக் கொண்டு வந்துவிடவில்லை. அவரைக் கொண்டுவரும்படிச் செய்தது நமது பிள்ளையார் என்பதுதான் பழம்புராணம் தெரிவிக்கும் விஷயம். அதைப் பற்றிச் சில குறிப்புகளையும், உட்கருத்துகளையும் இங்குப் பார்ப்போம் என்பதுதான் இந்த ‘புனித கங்கையும், பிள்ளையாரும்’ என்னும் கட்டுரை. 

பொதுவாகப் புராண இதிகாசக் கருத்துப்படிக் கங்கையைக் கொண்ரந்தது பகீரதன் என்னும் அரசன் என்றும், எனவேதான் கங்கைக்கே பாகீரதி என்றும் பெயர் வந்தது என்றும் படித்திருப்போம். ஆனால் கங்கையைக் கௌதமர் கொணர்ந்த செய்தியும், அதற்குக் கணேச பகவான் காரணமாக இருந்ததையும் பழம்புராணமான பிரம்ம புராணம் சொல்கிறது. ஹரஹர மஹாதேவரின் ஜடாமகுடத்தில் அடைபட்டுக் கிடந்த கங்கையென்றும், அந்தக் கங்கையை மண்ணகமும், மனிதர்களின் ஆன்மிகமும் ஒருங்கே பயனுற வேண்டிப் பார்வதி தேவி, இமயத்து அன்னை உமாதேவி பிள்ளையாரை அதற்கான ஆவன செய்யுமாறும், தம் இளவல் குஹனாரைக் கலந்து ஆலோசித்துக் கணேச பகவான் கௌதம ரிஷியை அதற்காக ஊக்கப் படுத்தினார் என்றும் பிரம்ம புராணம் சொல்கிறது. 

பெரும் வறட்சி நிலவிய காலம். ‘சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு’ என்று திருவள்ளுவரின் வாக்குப்படி, வேள்வியோ, பூசனையோ எங்கும் நின்று போன காலத்தில் அவற்றை விடாமல் செய்து புகழ் பெற்றவர் கௌதமர். அவற்றோடு தானம், தவம் இரண்டும் தங்கிய தளராத வாழ்க்கையை வாழ்ந்தவரும் அவரே. எனவே அவருடைய வேண்டுதலைத்தான் சிவனார் செவி மடுப்பார் என்று கருதிய பிள்ளையார் கௌதமரைச் சிவனாரிடம் சென்று கங்கையை மக்களுக்குப் பயனுறப் பெற்றுத்தருமாறு மூட்டினார். சிவனாரும் கௌதமரின் பொதுநல ஊக்கத்தில் மனம் மகிழ்ந்து என்றென்றும் புனிதம் நல்கும் பொன்னதியாகக் கங்கையைத் தந்தார் என்பது பிரம்ம புராணம். 

தவம் என்று தனிப்பட்ட ஆன்மிகம் தழைத்திருந்த காலத்தில் தீர்த்தாடனம் என்ற மக்கள் பொதுவான ஆன்மிக நன்மைக்காக வழிவகுத்தவர் பிள்ளையார் எனலாம். எனவேதான் நதிக்கரையே பெரும்பாலும் தமது இடமாகக் கொண்டு விளங்குகிறார் போலும்.! சிவனாரின் ஜடாமுடி தவம் என்னும் ஆன்மிகத்தைக் குறிக்கிறது என்றால், தவத்தில் ஊறிக் கனிந்த தயையான உமாதேவியின் கருணை தீர்த்தாடனம் என்னும் பொது ஆன்மிக வாய்ப்பாட்டிற்குக் காலம் மாறுவதை ஆசி கூறித் தடை அகற்றும் பெருங்கருணையாகப் பிள்ளையாரை நியமிக்கிறது என்றுதான் கருதத் தோன்றுகிறது. பொது ஆன்மிகத்தின் ஊற்றுக் கண்ணிலேயே பிள்ளையார், விநாயகர், கணேசர் கோயில் கொண்டு விடுகிறார். 

விநாயகரால் ஊக்கப்படுத்தப்பட்ட கௌதமர் கேட்டதற்கு இணங்கி கங்கை தன்னை மூன்று பிரிவாகப் பிரித்துக் கொண்டது. மண்ணுலகத்திற்கு ஒன்று, பாதாளத்திற்கு ஒன்று, தேவ லோகத்திற்கு என்று ஒன்று. கண்ணுக்குத் தெரிவது ஒரு கங்கை ஆனாலும் உண்மையில் மூன்று கங்கை. தொடக்கம் முதல் கடைசி வரை தெய்வத்துவம் குறையாமல் ஓடுகிறது கங்கை. அஞ்ஞானிகளுக்கு அதன் தெய்வத்தன்மை கண்ணில் தெரியவில்லை. ஓடும் நதியெல்லாம் கங்கைதான் தீர்த்தாடனம் என்னும் பார்வையில். தீர்த்தாடனம் என்னும் புனிதம் நிகழும் இடமெல்லாம் கோயில் கொண்ட பிள்ளையாகக் காட்சி தருவது விநாயகர். 

’த்ரேதாSத்மாநம் விபஜ்யாத ஸ்வர்கமர்த்யரஸாதலே |... ஸர்வத்ர ஸர்வபூதைவ ஸர்வபாப விநாசினி | ஸர்வகாம ப்ரதா நித்யம் ஸைவ வேதே ப்ரகீயதே |’ (பிரம்ம புராணம், 76ஆவது அத்யாயம்) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***