1929 ஆம் ஆண்டு ஒரு நல்ல காரியம் நடந்தது. ஹிந்து பத்திரிகாசிரியராய் இருந்த ஸ்ரீமான் ஏ ரங்கசாமி அய்யங்கார், ஸ்ரீ என் கோபால்சாமி அய்யங்கார் ஆகியோர் தமது சகோதரியான ஸ்ரீ ருக்மணி அம்மாளுக்கு ஞாபகமார்த்தமாக ஒரு சொற்பொழிவுத் தொடர் ஏற்படுத்தினார்கள். அந்த வருஷாந்திர வரிசை எற்பாட்டில் முதன்முதல் 1929ல் வித்யாரத்னாகரம் பண்டிட் வி ஆர் நரஸிம்ஹாசாரியரைக் கொண்டு ஒரு சொற்பொழிவுக் கோவையைச் செய்ய ஏற்பாடாயிற்று. ஸ்ரீ நரஸிம்ஹாசாரியர் செய்த பிரசங்கத் தொடரின் பொருள் என்னவென்றால் பாரத மண்ணில் பெரும்பான்மையாக வழங்கிவரும் வைதிக மதங்களை மட்டும் விளக்கிப் பேசாமல், சார்வாகம், தார்க்கிகம், பௌத்தம், ஜைனம் என்று அனைத்து தர்சனங்களைப் பற்றியும் விளக்கமாகப் பேசியிருப்பது ஒரு விசேஷம். அதைவிடச் சிறப்பு என்னவென்றால் தாம் விசிஷ்டாத்வைத மதத்தில் ஈடுபாடு கொண்டிருந்தும் அந்த தத்வத்தின் ரீதியாகவே மற்ற மதங்களையும், தத்வங்களையும் பார்த்துக் கண்டனம் தெரிவித்துப் போகாமல் பொதுவாக அனைத்து மதங்களுமே மக்களுக்கு ஒவ்வொரு விதத்தில் நல்ல அம்சங்களைப் போதிக்க வந்தவையேயாம்; எனவே ஒவ்வொரு மத்தினரும் தம்தம் மதத்தில் ஈடுபாடு கொண்டுள்ள போதும் மற்ற மதங்களின் நல்ல அம்சங்களை வண்டு தேன் சேகரித்துக் கொள்வதைப் போல அல்லாதவற்றைக் கண்டுகொள்ளாமல் அவ்வவற்றில் உள்ள நல்ல அம்சங்களை மாத்திரம் தாம் கொண்டு அவற்றின் பால் கௌரவ புத்தியோடு அணுகுவது சரியான வழி என்று நல்ல நிதானம் பேசுகிறார். அதையே தமது சொற்பொழிவின் அணுகுமுறையாகவும் கைக்கொண்டு பேசியுள்ளார்.
உதாரணமாக பௌத்த மதத்தைப் பற்றிக் கூறும்பொழுது வைதிகர்கள் பொதுவாக புத்தாவதாரம் அசுரர்களை மயக்குவதற்காக ஸ்ரீமந் நாராயணன் எடுத்த அவதாரம் என்று சொல்வதை மறுக்கிறார் ஆசிரியர். ஏன் அவ்வாறு கூற வேண்டும்? அது ஸ்ரீமந் நாராயணனுக்கே பெருமைதரும் விஷயம் அல்லவே என்கிறார். எல்லாவற்றிலும் சாரமான அம்சங்களைப் போற்ற வேண்டும்; வேண்டாத அம்சங்கள் இருந்தால் தூற்றாமல் விலக்கிவிட வேண்டும் என்பது உதயணாசாரியரிடமிருந்து ஆசிரியர் தாம் பெற்ற வழிநடத்தும் கருத்து என்றும், அதையே அனைவரும் கொள்ளத்தகும் என்றும் கூறுகிறார். பழைய சம்பிரதாயத்தைச் சேர்ந்த ஒருவர் இவ்வளவு நடுநிலையோடு பொதுவாக மதம் என்ன என்பதையும், பிறமதங்களையும் நன்கு நிதானத்துடனும், அமைதியான புரிந்துணர்வுடனும் நன்கு விளக்கமாகவும் எளிமையாகவும் பேசியிருப்பது அருமை. அதுமட்டுமின்றிப் பல தர்சனங்களையும் பற்றிப் பேசுமிடத்து மிக நுணுக்கமாகச் சில விஷயங்களை ஆசிரியர் அலசும் விதம் அறிஞர்களுக்கும், பொது மக்களுக்கும் ஒரு சேர விருந்தாகும்.
அந்தச் சொற்பொழிவுகளை அப்படியே 'நவநீதம்' என்னும் நூல்வடிவில் The Rukmini Lectures 1929 என்னும் உபதலைப்புடன் 1930ல் வெளியிட்டுள்ளார்கள்.
அப்படியே நூலைச் சிறிது தற்காலத் தமிழுக்குத் தக்கவாறு சீர்படுத்தி மீண்டும் வெளியிட்டால் எவ்வளவோ உபகாரமாய் இருக்கும். 283 பக்க நூலுக்குக் குறிப்புகள் தனியாக 68 பக்கங்களுக்குத் தந்திருக்கிறார் ஆசிரியர்.
***
சித் என்பது அறியும் மெய்ப்பொருள். அஃது உயிர். எல்லையற்றது. உணர்வின் உயிர்ப்பே எண்ணங்கள். மூன்று முக்கியம். பிறப்பால் மனிதரில் உயர்வு தாழ்வு இல்லை. பெண்ணும் ஆணும் சமமான மனித உயிர். கடவுளை அடைய அன்பே வழி. மனித குலத்தை நேசிப்பவர் சிறந்தவர். உயிர்க்குலத்தை நேசிப்பவர் உத்தமர். மதம், சாதி, மொழி, இனம் எதனாலும் மனிதரில் பிரிவினைப் பகையும், வெறுப்புப் பிளவும் ஏற்படாவண்ணம் ஒழுகுதல் நல்லொழுக்கம்.
Saturday, October 23, 2021
Hindu Polity
பண்டைய பாரதத்தின் வரலாறு என்பதைப் பலரும் சிந்தித்துப் பார்த்திருக்கலாம். ஆனால் பண்டைய பாரதத்தின் அரசியல் சட்ட ரீதியான வரலாறு என்பதை எத்தனை அறிஞர்கள் அன்று சிந்தித்திருக்கக் கூடும்!
ஏனெனில் அரசியல் சட்டம் என்பதே நவீனம், மேற்கு கிழக்குக்குத் தந்த கொடை என்றெல்லாம்தானே நினைத்திருக்கத் தோன்றும். பண்டைய காலத்தில் சட்டம் என்பது என்ன தெய்விக நூல்களில் ரிஷிகளால் சொல்லப்பட்டு என்றும் மாறாத சநாதன தர்மங்களாகத்தானே இருந்திருக்கும். நடுவில் சில மாற்றங்கள் மீண்டும் அதே மாறா நியதி. அவ்வளவுதானே - என்று நினைத்தவர்கள் மத்தியில் பண்டைய பாரதத்தின் அரசியல் சட்டம் என்பதையும், அது எப்படிக் காலத்துக் காலம் மாறியது என்பதையும் ஆழ்ந்த ஆய்வுகளின் பலனாக அறிவுலகம் மெச்ச நிறுவியவர் டாக்டர் காசி ப்ரசாத் ஜெயஸ்வால். 1881ல் மிர்ஸாப்பூரில் பிறந்தவர். 1937ல் அவரது மறைவு. சிறு வயதில் அவரது தந்தை சாஹு மஹாதேவ ப்ரசாத் அவரை லண்டன் மிஷன் ஹைஸ்கூலில் படிக்க விட்டாலும், சம்ஸ்க்ருதக் கல்வியை வீட்டிலேயே ஹண்டியாபாபா என்னும் சாதுவிடம் கற்க வைத்தார். ஹண்டியா என்றால் மட்பாண்டம். வாழ்வின் கடைசி வரை சாதுவிடம் கற்ற வடமொழிக் கல்வியை நினைத்து மிகவும் நன்றி பாராட்டினார் ஜெயஸ்வால். காரணம் மூல நூல்களின் உள்ளே நெடுகப் போகும் சௌகரியம் அவருக்கு இந்தக் கல்வியால் மட்டுமே கிடைத்தது. 1906ல் 25 வயதில் இரு குழந்தைகளுக்குத் தந்தையான நிலையிலும் ஜெயஸ்வால் இங்கிலாந்திற்குப் பயணமானார் மேல்படிப்பிற்கு. அங்கு சியாம்ஜி கிருஷ்ண வர்மா, சாவர்கர் போன்ற இந்திய தேசிய புரட்சியாளர்களின் நட்பு கிடைத்தது. மேலும் சிங்கள அறிஞர் பெருமகனாரான டான் மார்ட்டினோ டி சில்வா விக்ரமசிங்கே என்பவரின் நட்பால் ஜெயஸ்வாலுக்கு பண்டைய நாணயங்களை ஆயும் பயிற்சியும், தொல்பொருள் ஆய்வில் திறமையும் ஏற்பட்டன. ஹண்டியாபாபாவிற்குப் பிறகு தனக்குப் பெரும் ஊக்கம் விக்ரம்சிங்கே என்று நினைத்தார் ஜெயஸ்வால். லண்டனில் பெரும் மொழியியல் வல்லுநரான ஜ்யார்ஜ் ஏ க்ரியர்ஸன், வரலாற்று ஆசிரியர் வி ஏ ஸ்மித் போன்றவர்களின் தொடர்புன் கிட்டியது. பண்டைய இந்தியாவின் அரசியல் சட்ட ரீதியான வரலாறு எழுத வி ஏ ஸ்மித் பெரும் தூண்டூக்கமாக இருந்தார்.
1933ல் History of India 150 AD to 350 AD என்ற நூலை எழுதி இந்திய வரலாற்றில் இருண்ட காலம் என்று கருதப்பட்ட காலப் பகுதி உண்மையில் தெளிவுகள் உள்ள ஆவணப்படுத்தப்பட்ட பகுதியே என்று ஆக்கினார். 1934ல் ஒன்பதாம் நூற்றாண்டு பௌத்த காலவிவரண நூலான ஆர்ய மஞ்சுஸ்ரீ மூலகல்பம் என்ற பிரதியை அடிப்படையாகக் கொண்டு அதை விளக்கி An Imperial History of India என்ற நூலை எழுதினார். 1936ல் நேபாலிய வரலாறு 600கிமு தொடங்கி 800 கிபி வரை என்ற நூல். ஜயசந்த்ர வித்யாலங்கார், மஹாபண்டித ராஹுல சாங்க்ருத்யாயன ஆகிய இருவரின் தொடர்பும் அவருக்குப் பெரும் உதவிகளாக இருந்தன. சாங்க்ருத்யாயனரின் தொடர்பால் திபெத்திய நூல்களின் மூலம் தர்மகீர்த்தியைப் பற்றிய முழுமையான தகவல் அவருக்குக் கிடைத்தது.
Hindu Polity, A Constitutional History of India in Hindu Times (Parts I and II), IInd Ed, The Bangalore Printing and Publishing Co Ltd, Bangalore City 1943
அவருடைய இந்த ஹிந்து பாலிடி என்னும் நூல் அரசியல் சட்ட ரீதியிலான சரித்திரம் என்பது எந்த இனத்திற்கும் ப்ரத்யேக உரிமையான ஒன்றன்று என்ற தெளிவில் உதித்த நூல் என்பதைப் பார்ப்போம்.
*
1924ல் இந்த நூல் வெளிவந்த போது அநேகமாக அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டதாகக் கூறுகிறார் திரு ஜெயஸ்வால் அவர்கள். நான்கு பகுதிகளாகத் திட்டம் போட்டு நூல் அமைந்திருக்கிறது.
Scheme of the Work
I Introductory: Scope and Sources
II Vedic Assemblies
III Hindu Republics:
a) Rise and Prosperity
b) Decline and Disappearance
c) Their System and Ethnology
IV Hindu Monarchy and Imperialism
பகுதி ஒன்று அறிமுகமும், நோக்கமும், ஆதாரங்களும் என்பன பற்றியது. அவற்றைப் பற்றிய விவரமான பொருளடக்கம் -
1) Scope and Sources
2) Samiti - The Sovereign Assembly of Vedic Times
3) The Sabha
4) Rise of Hindu Republics and Hindu Terms of Republics
5) Republics in Panini
6) Republican Origin of Buddhist Sangha and Republics in Buddhist Literature (500 - 400 B C )
7) Republics in the Artha - Sastra (325 - 300 B C )
8) Hindu Republics in Greek writers (c 325 B C )
9) Constitutional Survey of the Hindu Republics in Greek Writers
10) Technical Hindu Constitutions
11) Procedure of Deliberation in Hindu Republics
12) Franchise and Citizenship
13) Judicial Administration and Laws of Republics
14) Characteristics of Republics according to the Mahabharata
15) Formation of New Republics
16) A retrospect of the period of Rise (Aitareya Brahmana to Kautilya)
17) Republics under the Mauryas
18) Republics in Sunga Times and Later
19) Disappearance of the Republics
20) Criticism on Hindu Republican Systems
21) Ethnology of the Republics
இவையனைத்தும் முதல் பகுதியின் விரிவான பொருளடக்கம். இவ்வாறு நான்கு பகுதிகள். தாம் இந்த நூலில் முக்கியமாகக் கருதுவதற்கு எடுத்துக்கொண்ட விஷயங்களைப் பட்டியல் இடுமிடத்தே இந்த நிரலைத் தருகிறார்.
1) the Sovereign Assembly of the Vedic Times
2) the Judicial Assembly of the Vedic Times
3) Hindu Republics (1000 BC - 600 AC)
4) Hindu Kingship (from the Vedic Times to 600 AC)
5) the Janapada or Realm Diet, and the Paura Assembly of the Capital(600 BC - 600 AC)
6) the Council of Ministers under Hindu Monarchy (1000 BC - 600 AC)
7) Judiciary under Hindu Monarchy (700 BC - 600 AC)
8) Taxation (1000 BC - 600 AC)
9) The Hindu Imperial Systems (1000 BC - 600 AC)
10) Decay and Revival of Hindu constitutional traditions (650 AC - 1650 AC)
அர்த்த சாஸ்த்ரம் என்னும் நூல் கௌடில்யர் எழுதியது. அப்படியென்றால் பொருள் நூலா? எகனாமிக்ஸா? அந்த நூல் நுவலும் பொருளோ அரசியல், ஊரை ஆளும் முறைமை, நாட்டின் நிர்வாகம். திரு ஜெயஸ்வால் சரியாக கௌடில்யர் எந்த அர்த்தத்தில் தமது 'அர்த்த' என்னும் சொல்லைக் கையாளுகிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறார்.
Kautilya defines Artha - Sastra - "Artha is human population, that is to say, territory with human population. The Code of Artha (Common-wealth) is a code dealing with the means(art, upaya) of acquisition and growth of that territory.
(மநுஷ்யாணாம் வ்ருத்தி: அர்த்த: மநுஷ்யவதோ பூமி: இதி அர்த்த:, தஸ்யா: ப்ருதிவ்யா லாபபாலன உபாய: சாஸ்த்ரம் அர்த்த சாஸ்த்ரம் இதி)
திரு ஜெயஸ்வாலின் நூல் பண்டைய பாரத அரசாங்க இயலைப் பற்றிய மூல எடுத்துக்காட்டுகள் நிறைந்த பேழை என்று சொல்லத்தகும். முடிவுரையாகக் கூறும்போது திரு ஜெயஸ்வால் கூறுவது -
This is a brief survey, in fact too brief a survey, of a polity which had a free career of at least thirty centuries of history - a career longer than that of all the politics known to history. Babylon probably lived a few centuries longer, but unfortunately Babylon is no more. Against this we have India still existing, and in this respect China - another civil polity - is her only parallel.
The test of a polity is its capacity to live and develop, and its contribution to the culture and happiness of humanity. Hindu polity judged by this test will come out very successfully.
அரசியல் சட்ட அமைப்பின் உள்ளடக்க வடிவ முன்னேற்றம் (constitutional progress) என்பது ஹிந்து அடைந்ததைப் போல வேறு எங்கும் பழைய அரச அமைப்புகளால் அடையப்படவில்லை. அத்துணை பழமை வாய்ந்ததாய் இருந்தும் இன்றும் ஹிந்து உயிர்த் துடிப்புடன் தொடர்கின்றானே அன்றி காலத்தில் உறைந்த உடற்கல்லாய் (fossil) ஆகிவிடவில்லை. Duncker என்னும் சரித்திர ஆசிரியர் கூறியதற்கேற்ப ஹிந்துவின் தாங்கிநிலைக்கும் ஆற்றல் வளையுமே அன்றி ஒடியாது. ஹிந்துவின் அரசியல் சட்ட அமைப்பின் முன்னேற்ற வரலாற்றின் பொற்காலம் அவனுடைய எதிர்காலத்தில் வரவிருக்கிறதே அன்றி வந்து கடந்த காலத்தில் கழிந்து போனதாய் ஆகிவிடவில்லை. -- இவ்வாறு அழகுற சொல்லிச் செல்லும் ஆசிரியர் -
Constitutional or social development is not a monopoly of any particular race.
என்று தமது அருமையான நூலை நிறைவு செய்கிறார் டாக்டர் திரு காசி ப்ரஸாத் ஜெயஸ்வால் அவர்கள். இந்தத் துறையில் இத்தகைய சான்று வளம் செறிந்த நூல்கள் மிகவும் குறைவு. எனக்கு நினைவுக்கு வரும் இன்னொரு நூல் India in the Vedic Times by Bhargava.

The Mind of Mahatma Gandhi
மகாத்மா காந்தியைப் பற்றிய இந்தச் சிறு நூல் பெரும் சிறப்பு வாய்ந்தது. காந்தியின் காலத்திலேயே வந்த நூல். முழுதும் காந்தியே பார்த்து ஒப்புதல் அளித்தது. காந்தியின் தத்துவங்களைப் பல தலைப்புகளில் தொகுப்பு நூலாகப் பெருந்தொகை ஒன்று தயார் செய்தார்கள். அது கடைசியில் பல சூழ்நிலைகளின் நெருக்கடியில் இந்தத் தேர்ந்தெடுத்த ரத்தினச் சுருக்க வடிவிற்கு வந்துவிட்டது. தேர்வு சும்மா சொல்லக் கூடாது. அருமை. ஒவ்வொரு காந்தி மொழிக்குப் பின்னும் பெரும் விவாதம் அடங்கியிருக்கிறது. பெரும் விசாரம் உள்ளோடித்த்தான் அந்த மொழி வந்திருக்கிறது என்பது நன்கு தெரியும்படியான மொழி முத்துகளாகப் பார்த்துத் தொகுப்பது ஒரு கலை. அந்தக் கலையில் நன்கு தேர்ந்தவர்கள் R K Prabhu and U R Rao. வெளிவந்த ஆண்டு மார்ச் 1945. இரண்டாவது பதிப்பு அக்டோபர் 1946. ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்ஸிடி பிரஸ், இந்தியா கிளை அன்று இதைக் கொண்டிவந்திருக்கிறது. முன்னுரை சர்வபள்ளி ஸ்ரீராதாகிருஷ்ணன் அவர்கள். Neither Saint nor Sinner, My Mahatmaship, I know the Path, The Gospel of Truth, Truth is God, Prayer, the food of my soul, The Inner Voice, Truth and Beauty, My Inconsistencies என்று இவ்வண்ணமாக 36 தலைப்புகளில் காந்தியின் கருத்துலகத்தை நமக்கு ஸ்படிகப் படுத்துகிறார்கள் தொகுப்பாசிரியர்கள்.
முன்னுரையில் ஒரு முக்கியமான கருத்தைக் கவனப்படுத்துகிறார் சர் ராதாகிருஷ்ணன். திறமையான அரசியல்வாதிக்கும், தீர்க்கதரிசியான அரசியல்வாதிக்கும் உள்ள வேறுபாட்டை விளக்குகிறார்.
There are many who dismiss Gandhi as a professional politician who bungles at critical moments. In one sense politics is a profession and the politician is one trained to transact public business in an efficient manner. There is another sense in which politics is a vocation and the politician is one who is conscious of a mission to save his people and inspire them with faith in God and love of humanity. Such a one may fail in the practical business of government but succeed in filling his fellows with an invincible faith in their common cause. (Pp V)
காந்தி எனக்குப் புரியாத ஒரு புதிர் என்று முன்னம் ஓர் இழையில் எழுதியுள்ளேன். அதை இங்கு மீண்டும் பகிர்கிறேன்.
"அவதாரம் அன்று. கடவுளிடமிருந்து வந்த தூதரும் அன்று. நம்மைப் போல், நம்மைப் போல் என்றால் நம்மைப் போலவேதான், ஒரு மனிதன். அவனுக்கும் பிறந்தவுடன் ஏதோ சங்கேதங்கள் எல்லாம் எந்த சமிக்ஞைகளாலும் தெரிவிக்கப் படவில்லை. அவன் நான் தான்; நீங்கள்தான்; தோ அவர்தான்.
ஆனால் என்ன! திடீரென்று சத்தியம், அஹிம்சை என்ற இரண்டை முரட்டுத்தனமாகப் பற்றிக் கொண்டான். Total Committment இத்தனைக்கும் ராஜ யோகத்தின் படி அஷ்டாங்க யோகாரூடத்தில் முதல் படிக்கட்டு சமம் தமம்.
உள்ளே தோன்றும் புலனிச்சைகளைச் சமனப் படுத்தல்; வெளியில் சென்று பாயாதபடி புலன்களைக் கட்டில் நிறுத்துதல். இந்தப் படிக்கட்டில் சம தமங்களில் சேர்ந்த ஓரிரு நியமங்கள்தாம் சத்தியம், அஹிம்சை. ஆன்மிக உச்சிக்குப் போய்ச்சேர கடைசி நிலை சமாதி நிலைக்குப் போக இன்னும் ஏகப்பட்ட படிக்கட்டு. அதில் அநாயசமாக ஏறி விளையாடிய மகனீயர்கள் எனக்குப் புதிராகத் தெரியவில்லை. ஆனால் மோகன் தாஸ கரம் சந்திர காந்தி எனக்கு இன்று வரையிலும் புதிராகத்தான் இருக்கிறார். இனியும் அப்படித்தான் இருப்பாரோ அறியேன். எதில் புதிர்? அவரை மகாத்மா என்பதில் புதிரா? அல்லது திரு எம் கே காந்திஎன்பதில் புதிரா? அவரை மகாத்மா என்பதில் எந்தப் புதிரும் எனக்கு எழவில்லை. செயற்கரிய செய்வர் பெரியோர் ஆகலின் அப்பெற்றியர் யாவரே ஆயினும் மகாத்மா என்று சொல்வது ஒன்றும் இடைஞ்சல் இல்லை. அதை அவர் மறுத்தார் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் அதை 'அவர்' மறுத்தார் என்னும் பொழுதுதான் என் கவனம் முழுதும் அந்தப் பதத்தின் பால் குழிகிறது. காரணம் வெறுமனே அடக்கமாய் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக ஒன்றை மறுதலிக்கும் நபர் இல்லை அவர். அப்பொழுது அவர் மறுதலிக்கிறார் என்றால் அந்த மகாத்மா என்ற பதத்திற்கு இருக்கும் உண்மையான பொருள் ஆழம் என்னை அவர் பார்வையில் ஒன்றச் செய்கிறது.
ஆனால் இந்த மனிதன் தன்னிடம் இருக்கும் 'அந்த நொய்ந்த போக்கினை'த் தாமேதான் ஒளிவு மறைவின்றி ஒரு மருத்துவத் தூய்மையோடு எழுதுகிறார். தாம் அதனோடு போராடுவதாக அவர் கூறும் பொழுது நாம் எதையோ செயித்து விட்டோம் என்ற உணர்வினை அடைகிறோம். ஆம் கள்ளம் கபடம் சூது மறைமுகம் என்ற இருட்டுகளுக்கு ஆடுகளமாக ஆக்கப்பட்ட காமம் என்பது அவருடைய சத்திய சோதனையின் முன் மீண்டும் எரியுண்டு கட்புலனாகி நடுங்குகிறது. ராமனாக வேடம் பூண்டு நீ சீதையிடம் போய்ப் பேசிப் பாரேன் என்று யாரோ ராவணனுக்கு உத்தி கூற அதற்கு ராவணன், "அந்தோ! நான் என்ன செய்வேன்? ராமனாக வேடம் பூண்டால் என் மனத்தை விட்டுக் காம உணர்ச்சி முற்றிலும் மறைந்து விடுகிறதே! உலகத்தை எல்லாம் பிரம்ம பாவமாகக் காணும் பார்வைதான் மிஞ்சுகிறது. எனவே அந்த வேடம் மட்டும் போட மாட்டேன்' என்றானாம். இது உண்மையில் நடந்திருக்கும் என்று எனக்குக் காந்தியைப் படிக்கும் பொழுதுதான் தோன்றுகிறது.
கோட் சூட் போட்டவர் திடீரென்று கதராடை, முழங்கால் வேட்டி, மேலே போர்த்தியபடி ஒரு மேல் துணி என்ற உடையலங்காரத்துக்கு மாறினார். 'பாதி நிர்வாண பக்கிரி' பிரிட்டிஷ் சாம்ராஜ்ய அஸ்தியில் புளியைக் கரைத்தார்.
இங்கு முனியன் குடிசையில் ராட்டினம் சுத்தினால் மான்செஸ்டரில் ஆலைகள் நிக்கும் என்று எப்படிக் கண்டுபிடித்தார்? பாதயாத்திரையாய் நடந்து சென்று ஒரு பிடி உப்பை அள்ளினால் அது யுனைடெட் கிங்டம் வாயில் போட்ட வாக்கரிசியாய் ஆகும் என்று எந்த யட்சிணி இவருக்கு வந்து சொல்லியது.?
ஆள்கட்டு, அடிதடி, கொள்ளை, தகிடுதத்தம், அநியாயம் இவையில்லாமல் அரசியல் நடத்த முடியாது என்பதை அறிவாளிகளே ஒரோவழி ஒப்புக்கொண்டு மாக்யவில்லியையும், கௌடின்யரையும் சப்பைக் கட்டுக்குக் காட்டிக் கொண்டிருந்த காலத்தில் ஆத்ம பலத்தை மட்டுமே நம்பி, சத்யம், அஹிம்சை ஆகிய இரண்டை மட்டுமே ஆயுதமாகவும், கவசமாகவும் கொண்டு சத்யத்தின் ஆக்ரஹத்தை போர்முறையாய் அறிவிப்பான் ஒருவன் என்றால், அதன்படியே தானும் நடந்து, அதுமட்டுமில்லாது பல்லாயிரக் கணக்கான பிரிவினைகள் உள்ள பல கோடி மக்களையும் 'உஸ்' உஸ்' என்று ஒற்றை விரலை அசைத்தே ஒருமிப்பான் அந்த வழியில் என்றால், எனக்குப் புதிரானவன் என்பதில் என்ன ஐயம்? The riddle of Gandhiji's mind is the riddle of his soul. - என்று தொகுப்பாசிரியர்கள் கூறுவது அருமையான வாசகம்.
மகாத்மா என்ற பட்டம் அவரை மிகவும் படுத்தியிருக்கிறது.
The only virtue I want to claim is Truth and Non-violence. I lay no claim to superhuman powers. I want none. I wear the same corruptible flesh that the weakest of my fellow-beings wears, and am, therefore, as liable to err as any. My services have many limitations, but God has up to now blessed them in spite of the imperfections.
கடவுள் மீதும், மனித இயல்பின் மீதும் அவருக்கு இருந்த நம்பிக்கையின் அடிப்படை என்ன?
Somehow I am able to draw the noblest in mankind, and that is what enables me to maintain my faith in God and human nature.
ராமநாமத்தைப் பற்றியும், துளஸிதாஸரைப் பற்றியும் மகாத்மா கூறுவது -
When a child, my nurse taught me to repeat Ramanama whenever I felt afraid or miserable, and it has been second nature with me with growing knowledge and advancing years. I may even say that the Word is my heart, if not actually on my lips, all the twenty-four hours. It has been my saviour and I am ever stayed on it. In the spiritual literature of the world, the Ramayana of Tulsidas takes a foremost place. It has charms that I miss in the Mahabharata and even in Valmiki's Ramayana. (pp 33)
பிரார்த்தனை பற்றி -
Prayer is the key of the morning and the bolt of the evening.
It is better in prayer to have a heart without words than words without a heart.
காந்தி என்றால் நினைவுக்கு வருவது உண்ணாவிரதம், சத்தியம் - அஹிம்சை என்ற இரட்டை நன்மைகளுக்கு அடுத்தபடியாக. எப்பொழுது வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் உண்ணாவிரதம் கடைப்பிடிக்கலாம் என்பது காந்தியின் எண்ணமா? இல்லை -
Fasting can only be resorted to against a lover, not to extort rights but to reform him, as when a son fasts for a father who drinks. My fast at Bombay and then at Bardoli was of that character. I fasted to reform those who loved me. But I will not fast to reform say, General Dyer, who not only does not love me, but who regards himself as my enemy. (pp 114)
சுதந்திரத்திற்காகப் போராடிய காந்திக்கு நோக்கம் சுதந்திரத்தோடு முடிந்து விடவில்லை. -
My ambition is much higher than independence. Through the deliverance of India, I seek to deliver the so-called weaker races of the earth from the crushing heels of Western exploitation. (pp 169)
மிக அருமையான தொகுப்பு நூல் என்பது நூல் முழுவதும் தெரிகிறது.

நளவெண்பா
நளவெண்பா இதற்கு ஒரு விருத்தியுரை எழுதியுள்ளார் ஸ்ரீ ஆறுமுகஞ் சேர்வை அவர்கள். மதுரை ஜில்லா செம்பூர் வித்வான். இதற்கு உறுதுணை உதவி மதுரை அமெரிக்கன் காலேஜ் தலைமைத் தமிழாசிரியர் ஆ கார்மேகக் கோனாரவர்களும், மதுரை ஸௌராஷ்ட்ர ஹைஸ்கூல் தலைமைத் தமிழாசிரியர் பு சிதம்பர புன்னைவனநாதமுதலியாரவர்கள். அச்சிட்டது மதுரை கோபாலகிருஷ்ண கோனாரால் 1929ல். அன்றைய விலை ரூ2ம் எட்டு அணாவும். உண்மையிலேயே என்ன அருமையான உரை! எவ்வளவு விஷயங்கள் மாணக்கர்களுக்குச் சொல்கிறார்கள், தமிழ்க் கல்வி அன்று இருந்த நிலை.
புகழேந்திப் புலவரின் வெண்பா கேட்கவா வேண்டும்! ஒட்டக்கூத்தருக்கும், புகழேந்திக்கும் நடந்த புலமைச் சண்டைகள், ஒட்டக்கூத்தரின் அடாவடித்தனம் எலலாம் முன்னுரையில் கூறுகின்றார்கள். அதுவே ஒரு தமிழ்க்கல்விதான். அந்தக் கால அரசனுக்கு இரண்டு புலவர்களுக்கிடையில் மூட்டிவிட்டுக் கவிதை வாங்குவது ஒரு பொழுது போக்கு போலும்!
ஒட்டக்கூத்தரோ புகழழேந்தியைச் சிறையில் போடச் செய்துவிட்டார். ஒரு நாள் பவனி. சிறைச் சாலையின் சன்னலிலிருந்து வேடிக்கை பார்க்கிறார் புகழேந்தி. அரசனோ அவரைக் காட்டி ஒட்டக்கூத்தருக்கு 'ஓ வித்வானே! அதோ நிற்கும் புகழேந்தி புலமையி மிகச் சிறந்தவரல்லவா!' என்றார். உடனே கூத்தர்,
மான் நிற்குமோ, இந்த வாளரி வேங்கை முன்?
வற்றிச் செத்த கான் நிற்குமோ இவ்வெரியும் தழல் முன்?
கனைகடலின் மீன் நிற்குமோ இந்த வெங்கட் சுறவமுன்?
வீசுபனி தான் நிற்குமோ இக்கதிரோன் உதயத்தில்?
தார்மன்னனே!
என்று பாடினார். அரசனை நோக்கிப் புகழேந்தி, 'மன்னா! இதை நான் வெட்டிப்பாடவா? ஒட்டிப் பாடவா?' என்றார். ஒட்டிப்பாடுக என்றதும்,
மான் அவன்.
நான் அந்த வாளரி
வேங்கையும் வற்றிச் செத்த கான் அவன்.
நான் அவ்வெரியும் தழலும்.
கனைகடலின் மீன் அவன்
நான் அந்த வெக்கட் சுறவமும்
வீசுபனி தான் அவன்
நான் அக்கதிரோன் உதயமும்.
தார்மன்னனே!
என்று பாடினார் புகழேந்தி.

தர்க்காம்ருதம்
தர்க்காமிருதம் - என்று ஒரு நூல். வடமொழியில் செய்தவர் ஜகதீச பட்டாசாரியார். (16 - 17 நூற்) இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யாழ்ப்பாணத்து ஸ்ரீதிருஞானசம்பந்தப் பிள்ளை அவர்கள். இவர் ஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களுக்கும், அவரது மருகரும், மாணாக்கருமாகிய ஸ்ரீபொன்னம்பலம் பிள்ளை அவர்களுக்கும் மாணவர். தருக்காமிருதத்தை அவர் அச்சிட்ட காலம் கி பி 1883. அதனை திருவாவடுதுறை ஆதீனம் 1967ல் வெளியீடு எண் 225 ஆக வெளியிட்டது. 32 + 75 பக்கங்கள் கொண்ட சிறு நூலாயினும் மிகச் சிறந்த மொழிபெயர்ப்புப் படைப்பு நூல். நியாய வைசேஷிகம் ஆகிய இரு தரிசனங்களும் இணைந்து 16 ஆம் நூற் பிறகு தருக்கம் என்று அழைக்கப்பட்டது. அதாவது தருக்கம் என்பது இரு தரிசனங்களின் கூட்டுப் பெயர் எனலாம். இந்தத் தருக்க சாத்திரத்தை 300 வருடங்களாக நம் தமிழகத்தில் பலர் பல வடமொழி நூல்களைத் தமிழில் ஆக்கி உதவினர்.
தர்க்க பரிபாஷை என்னும் நூல் 1040 வருடங்களுக்கு முன்னர் கௌதமரின் நூலை முதல் நூலாகக் கொண்டு கேசவ மிசிரர் என்னும் மைதில கௌடரால் செய்யப்பட்டது. இதற்கு கௌரீகாந்தீயம், தாமோதரீயம், கோவர்த்தனீயம் என்னும் உரைகளோடு சுமார் 23 உரைகள் ஏற்பட்டுள்ளன. இந்த தர்க்க பரிபாஷையைத் தமிழில் மொழிபெயர்த்தவர் துறைமங்கலம் சிவபிரகாச சுவாமிகள் 17ஆம் நூற். இனி தர்க்க சங்கிரகம் என்னும் நூலைத் தமிழில் 'பதார்த்த தீபிகை' என்னும் பெயரால் தமிழ்ச் செய்யுள் வடிவில் செய்தவர் யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் ஸ்ரீமுருகேச பண்டிதர் என்பவர் 20 ஆம் நூற் தொடக்க காலத்தில். இந்த செறிந்த மரபில் 'தர்க்காமிருதத்தை' தமிழாக்கி உதவியவர் திருஞானசம்பந்தப் பிள்ளை.
ஆதீனம் இது போன்ற நூல்களை காலத்தில் மறைந்து விடாமல் மீண்டும் அச்சிட்டுக் காக்க வேண்டும், ஏற்கனவே அச்சில் இல்லாமல் இருந்தால்.
நூல், முகவுரை, அகத்தியத் தருக்கச் சூத்திரம், தர்க்க நூல் வரலாறு, மொழிபெயர்ப்பாசிரியர் வரலாறு, தருக்கக் கண்ணாடி, பதிவணக்கம், ஆரம்பம், பதார்த்தம், திரவிய நிரூபணம், குண நிரூபணம், கரும நிரூபணம், சாமானிய நிரூபணம், விசேட நிரூபணம், சமவாய நிரூபணம், அபாவ நிரூபணம், பிரத்தியக்க நிரூபணம், அநுமான நிரூபணம், உபமான நிரூபணம், சத்த நிரூபணம், சொற்பொருளகராதி என்ற தலைப்புகளில் சுருக்கமாகவும் நிறைவாகவும் நியாய வைசேஷிகக் கலவையாகிய தருக்க நெறியைப் பற்றிய வடமொழிச் சுருக்க அறிமுகத்தைத் திறம்படத் தமிழில் தருகிறது.

Weather Wisdom
Mavis Budd என்பவர் எழுதியிருப்பது. 64 பக்கம். 3 பவுண்டுக்குக் கம்மி விலை. லண்டன் Piatkus என்ற பதிப்பக வெளியீடு. கைக்கடக்கமான டயரி போன்ற நூலில் என்ன விவரம்! அக்னாலட்ஜ்மண்டில் மேவிஸ் பட் கூறுகிறார்.
I would like to acknowledge the wisdom of all the country people of the past who have been responsible for the existence of weather lore... and especially that of the farmers and gardners, the shepherds and the ploughmen and the women they were married to, known as the Old Wives.
இதற்கு மேல் இந்த நான்கு நூல்களுக்குமே என்னால் பழைய மக்களுக்கு கடப்பாடு கூறிவிட முடியாது. அவை பிழையாகப் போகக் கூடும். அது முக்கியமில்லை. ஆனால் தங்கள் காலங்களில் கருத்தூன்றிச் சில விஷயங்களைப் பதிந்து வைத்தார்களே, அவை அபிப்ராயமோ, சரியான தரவுகளோ. அந்த அறிவின்பாற்பட்ட அக்கறையும், முயற்சியும் என்றும் நம் நன்றியை வேட்பன.
தட்ப வெட்பம இருந்தே தீரும். கூடுதலோ குறைச்சலோ.
Whether it's cold or whether it's hot
We shall have weather, whether or not.
என்கிறார் மேவிஸ் பட்.
வெயில் வேண்டும் என்று ஒரு சாரார் விரும்பினால், மழை வேண்டும் என்று ஒரு சாரார் விரும்புவர். எல்லாருக்கும் ஒவ்விய தட்ப வெட்பம் எங்குமே ஆகாது.
The farmer and the gardner
Are both at church again
One to pray for sunshine
One to pray for rain.
காற்றைப் பற்றிச் சில சொலவடைகள் --
If a gusty wind blows the trees about so the undersides of the leaves are revealed, it is a sign of rain.
இலைகளைப் புரட்டிக் காட்டுவது போல் பெருங்காற்று அடித்தால் மழை வரும்.
If dry leaves swirl round on the path, or in a yard, it is certain that rain is about.
நடுச்சாலையில், குறட்டில் இலை தட்டாமாலை ஆடினால் தட்டாமல் மழை வரும்.
சாவித் துவாரத்தில் காற்று சீழ்கை அடித்தால் மழை வரும் -- இது நம் நாட்டில் எவ்வளவு பொருந்தும் தெரியவில்லை. கிராமங்களில் சில அறிகுறிகள் மழை வருவதற்கு --
Ducks and geese are unusually noisy.
The pigs are uneasy.
Spiders crawl about on the walls of the house.
Ditches and drains smell.
Old wounds ache.
ஒரு பாட்டி இடி வரும் என்று எப்படிக் கண்டுபிடிப்பாளாம் -- வயத்தைக் கலக்கறது என்னமோ. நிச்சயம் இடி வரும். நாமே, மனிதர்களே ஒரு விதத்தில் தட்ப வெட்ப அறிகுறிகளாகச் செயல்படுகிறோமாம். மழை வரும் எப்பொழுது நமது --
bones and joints ache
scalps itch
noses irritate
scars and old wounds ache
ears drum
noises develop in the head
மிருகங்கள் கேட்கவே வேண்டாம்
sheep bleat persistently
cats will wash themselves more carefully, bringing their paws right over ears and noses.
மழை காலத்தில் சிலந்தி கூட்டைச் சரி செய்தால் நிச்சயம் மழை நின்று வெயில் அடிக்கத் தொடங்கும் என்று பொருள். பறவைகள், பூச்சிகள் எல்லாம் அறிகுறிகள் காட்டுகின்றன. அதாவது உலகமெங்கும் தகவல், முன்கூட்டிய ஜோதிடக் கணிப்புகள் எல்லா உயிரினங்களும் பரிமாறியவண்ணம் இருக்கின்றன. பாழாய்ப் போன மனித இனம் மட்டும் வெட்டி வேலைகளில் காலத்தை வீணடிக்கிறது. ஒன்றுமில்லை வெங்காயம் என்கிறோம். அந்த வெங்காயம் கூட என்ன தகவல் களஞ்சியம் தெரியுமா?
Onion skins very thin
Mild winter coming in
Onion skins thick and tough
Coming winter cold and rough.
அருமையான ஒரு வெதர் பாரோமீட்டர் பற்றி மேவிஸ் பட் கூறுகிறார் -- பாட்டிக்கை பாரோமீட்டர். Seaweed ஒன்றைக் கட்டித் தொங்க விட்டால் -- மழை வரும் என்றால் தோய்ந்து துவண்டு போகும். நல்ல க்ளைமேட் என்றால் காய்ந்து சருகாகும்.
Weather Wisdom, Mavis Budd, PIATKUS 1986.

குதிரை நூல்
குதிரைகளைப் பார்த்து அதன் துள்ளல்களையும், விரைந்த பாய்ச்சல்களையும், லாகவமான நடைகளையும் கண்டு வியக்காதவர் இருக்க முடியுமா?
சாண்டில்யன் நாவல்களில் குதிரை வீரர்களின் உலகங்கள் மலைச்சரிவுகளில், பிரதான சாலைகளில், காடுகளில் அற்புதமாக வர்ணிக்கப்படும் போது, அடேயப்பா...! குதிரைகளைப் பற்றிய சாத்திரம் ஏதாவது இருக்குமா என்று யோசித்ததுண்டு. இருக்கிறது அப்படி ஒரு சாத்திரம். அசவ சாஸ்த்ரம். - தஞ்சை சர்ஸ்வதி மஹால் தொடர் வெளியீடுகளில் நம்பர் 56. 1952 ஆம் ஆண்டு வெளியானது. தஞ்சை மஹாராஜா சர்ஃபோஜி சரஸ்வதி மஹால் நூலகம் வெளியிட்டுள்ளது.
இந்த அச்வ சாஸ்த்ரம், நகுலன் என்பவரால் எழுதப்பட்டது. இவர் பாண்டவர்களில் ஒருவரான நகுலனே என்கிறது நூல். சாலிஹோத்ரர், ஸுச்ருதர், கர்கர் ஆகியோரின் நூல்களிலிருந்து கருத்துகளைப் பாமரர்களும் எளிதில் அறிந்துகொள்ளும் படியாக இந்த நகுலரின் நூல் கூறுவதாக முகப்பில் தெரிவிக்கப்படுகிறது. வடமொழியில் உள்ள இந்த நூலை பதிப்பித்தவர் திரு கோபாலன். திரு ஸ்வாமினாத ஆத்ரேயன் அவர்களின் கடும் உழைப்பு நூலை நன்கு உருவாக்கியிருக்கிறது. திரு சுப்ரமண்ய சாஸ்திரிகளின் தமிழாக்கம் மிக எளிமையாக இருக்கிறது. ஆங்கிலத்திலும் நூலின் சுருக்கம் தரப்பட்டு சிறப்படையச் செய்கிறது. இந்தச் சுவடி வண்ணப் படங்களுடன் கூடிய சுவடி. எனவே பலவித குதிரைகளின் வண்ணப் படங்கள், குதிரை உபகரணங்களின் படங்கள் எல்லாம் சேர்ந்து நூலை மிகவும் பயனுள்ளதாக ஆக்குகின்றன.
குதிரைகளின் பெருமை, ரைவதர் துதி, குதிரை இறக்கை இழந்த வரலாறு, உடலமைப்பு, அங்கங்களின் இலக்கணம், அசுவ இலக்கண வகுப்பு, வயது முறையும் அங்க வகுப்பும், ஆவர்த்தங்கள், சித்திரவர்ணக் குதிரைகள், புண்டிர லக்ஷணங்களும் பலன்களும், புஷ்ப லட்சணம், குதிரை கனைப்பின் பலன், குதிரையின் மணமும் பலனும், குதிரை சாயையும் பலனும், நடை இலக்கணம், ஸத்துவ (தன்மை) இலக்கணம், முற்றும் தவிர்க்க வேண்டிய தோஷங்கள், கன்னத்தின் நிறமும் பலனும், ஜாதிக் குதிரைகள், வயதறியும் வகை, நிற இலக்கணம், அரசனுக்கேற்ற குதிரை, ஆயுள், குதிரை உணர்த்தும் பெருங்கேடுகள், குதிரைகளைப் பழக்கும் விதம், குதிரைகளின் நடை, க்திரை ஏற்றம் ஆகிய தலைப்புகளில் நூல் குதிரையைப் பற்றித் தெரிவிக்கின்றது.
குதிரைகளின் மனோதத்துவம் பற்றி அநுபந்தம் கூறுகிறது. சாலிஹோத்திர வைசம்பாயனீயம் என்ற ஸாரஸிந்து என்ற நூலிலிருந்து தொகுத்துத் தந்திருக்கிறார்கள். சில விஷயங்கள் மிக சுவாரசியமானவை.
-- குதிரையில் ஏறியவன் ஒருவித ஆபத்தும் நேராத பொழுது கீழே விழுந்தால் குதிரை சிரிக்கும்.
அரசன் முடிசூடும் பொழுதும், கொள்ளு தின்னும் பொழுதும், மாலை கொள்ளு தின்னும் பொழுதும், மணி ஓசை கேட்கும் பொழுதும், நல்ல மனதுடையோன் ஏறும் பொழுதும் குதிரை சந்தோஷமடையும்.
கலவி, ருதுகாலம், யுத்தம், வெற்றி, யாகம், தீனி, திறமையுள்ளவனின் ஏற்றம், கூட்டத்தை விட்டுப் பிரியும் காலம், புதுக்குதிரையைக் காணும் சமயம் இவைகளில் குதிரை கனைக்கும்.
தனக்குச் சமமான வேகமற்ற குதிரையுடன் ஓட நேரும் போது வெட்கம் கொண்டு புழுதியை வாரி இறைக்கும்.
-- இவை சில மாதிரிக்கு.
இப்படி ஒரு நூல் என் சேகரிப்பில். இதைப் போல் கஜ சாத்திரம் என்று ஒன்று. அது எங்கு போயிற்றோ தெரியவில்லை. கண்ணில் பட்டால் சொல்கிறேன்.

குதிரைகளின் வயது பற்றி சாலிஹோத்திரர் கூறுவது - மனிதனுக்கு நூறு, யானைக்கு நூற்றி இருபது, பசுவிற்கு 24, கழுதை ஒட்டை - 25, நாய் - 16, நரி - 25, புழு - 7 நாள், ஈ - 14 நாள், குதிரை -- 32 வருஷங்கள்.
மத்தம், அவி, காச்யம், அச்மகேயம், மாலிகம், சுவேதவாகனம், மேசகம், சுவேதகிரிஜம், வைதர்பம் ஆகிய ஒன்பது ஜாதிக் குதிரைகளும் 'கோடகம்' என்னும் வகையில் அடங்கும்.
மத்தம், அவி, காச்யம், அச்மகேயம், மாலிகம், சுவேதவாகனம், மேசகம், சுவேதகிரிஜம், வைதர்பம் ஆகிய ஒன்பது ஜாதிக் குதிரைகளும் 'கோடகம்' என்னும் வகையில் அடங்கும்.
இப்படி ஒரு நூல் என் சேகரிப்பில். இதைப் போல் கஜ சாத்திரம் என்று ஒன்று. அது எங்கு போயிற்றோ தெரியவில்லை. கண்ணில் பட்டால் சொல்கிறேன்.
***
Subscribe to:
Posts (Atom)