Sunday, July 3, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 52

வபுராதி3ஷு யோSபி கோSபி வா

கு3ணதோSஸாநி யதா2ததா2வித4: |

தத3யம் தவ பாத3பத்3மயோ:

அஹமத்3யைவ மயா ஸமர்ப்பித: || 

தத்துவ நிலைப்பாடுகள் எப்படி இருந்தாலும் அவனுடைய திருவடிகளில் பக்தி மிக முக்கியம் என்கிறார். தேஹமே ஆத்மா. இந்திரியங்களே ஆத்மா, பிராணனே ஆத்மா, மனோமயனே ஆத்மா, விஞ்ஞானமயனே ஆத்மா, இவையெல்லாம் எதுவுமில்லை பிரகிருதியைத் தாண்டியதாய், ஞானம், ஆனந்தம் என்னும் அவற்றையே தன் இலக்கணமாய்க் கொண்ட எதுவோ அதுவே ஆத்மா இப்படி ஆத்மா என்பதன் வபு, வடிவைப் பற்றிப் பலபடியான கொள்கைகள் உண்டு. ஆத்மாவின் ஸ்வரூபம் எப்படிப் பட்டது என்பதிலும், அணு ஸ்வரூபம், விபு, உடலளவு பரிமாணம் உள்ளது, நித்யன், அநித்யன், ஞாத்ருத்வம் உண்டு என்று பலபடியான பேச்சுகள் உண்டு. இவற்றில் ஏதோ ஒன்று ஆத்மாவின் இயல்பு என்று ஆகிவிட்டுப் போகட்டும். இப்பொழுது முக்கியம், அறிவுக்குப் புலப்படும் பொருளைக் காட்டிலும் வேறாய், தனக்கே அர்த்தம் ஆகும் இயல்புடைய வஸ்துவாய், பிரத்யக்ஷத்திற்கு எட்டுபவனாய்ப் பிரகாசிக்கின்ற இந்த நான் ரக்ஷகரான தேவரீருடைய பாதபத்மங்களில் இந்தக் கணமே என்னால் ஸமர்ப்பிக்கப்பட்டுவிட்டேன். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment