மம நாத2
யத3ஸ்தி யோSஸ்ம்யஹம்
ஸகலம் தத்3தி4
தவைவ மாத4வ |
நியதஸ்வமிதி
ப்ரபு3த்3த4தீ4:
அத2வா
கிந்நு ஸமர்ப்பயாமி தே ||
*
என்னை உன் உடைமையாய்க் கொண்ட என் நாதனே! என்னுடையது என்று எதை நினைக்கிறேனோ, எந்த ஒன்றாய் நான் இருக்கிறேனோ, அஃது அனைத்தும் உன்னுடையதே அன்றோ திருமகள் கேள்வ! முக்காலத்தும் இஃது இப்படியேதான் உன்னுடைய உடைமை என்பதை உணர்ந்த புத்தியுடைய நான் (முன்னர் ஸமர்ப்பித்து விட்டேன் என்று சொன்னாலும் உண்மையில் பார்த்தால்) உனக்கு எதைத்தான் ஸமர்ப்பிக்க முடியும்?ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment