ந தே3ஹம்
ந ப்ராணாந் ந ச ஸுக2ம் அசேஷ அபி4லஷிதம்
ந ச ஆத்மாநம்
நாந்யத் கிமபி தவ சேஷத்வ விப4வாத் |
ப3ஹிர்ப்பூ4தம்
நாத2 க்ஷணமபி ஸஹே யாது சததா4
விநாசம்
தத் ஸத்யம் மது4மத2ந விஜ்ஞாபநமித3ம் ||
*
பகவானுக்கு உடைமையாகவும், அவனுக்கே பெருமை ஏற்படும்படி இருக்க வேண்டியதும் இந்த ஆத்மாவின் இயல்பு ஆகும். அதற்கு சேஷத்வம் என்று பெயர். அவ்வாறு சேஷத்வம் இல்லையெனில் இந்த உடலால் என்ன பயன்? பிராணனால் என்ன பயன்? எல்லோரும் விரும்பும் சுகம் அதுதான் எதற்கு வேண்டும்? ஏன் இந்த ஆத்மா கூட சேஷத்வம் இல்லாத ஆத்மா இருந்தால் என்ன போனால் என்ன? இவை மட்டும் அன்றி வேறு எதுவுமே, சேஷத்வம் சமபந்தப்படாத எதுவும் நாசம் அடையட்டும். மதுவைக் கொன்ற நாதனே! இது சத்யம். இதுவே என் விண்ணப்பம்.ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment