Sunday, July 17, 2022

ஸ்ரீஆளவந்தார் ஸ்தோத்ர ரத்நம் சில குறிப்புகள்

பிரபத்தி என்பது தனக்குப் பேறு தன்னால் அன்று அவனால் என்னும் திடநம்பிக்கையும், தன்னை ரக்ஷிப்பது தான் அன்று அவனே என்னும் திடமும், தன்னை நினைந்தால் இயலாமையே நிதர்சனமாய் இருப்பதும், தன்னால் இயல்வதாக நினைப்பதெல்லாம் தன்னை அவனிடமிருந்து அகற்றிக் கொள்ளும் வழியாக முடிவதையும் கண்டு, என்றும் தன்னுடைய தோஷங்களையும், தான் அவன் அருளினாலன்றி கடைத்தேற இயலாது என்பதையும் விண்ணப்பிக்கும் பிரார்த்தனை நிறைந்த மனநிலை பிரபன்னரின் தன்மையாக இருப்பது. இதை அறிவுக்கு விஷயமாக்கிப் புரிந்துகொள்வது ஒருவிதம் என்றால் ஸ்தோத்ர ரூபமாக இதை உணர்வு பூர்வமாக உள்ளம் கலந்து கரைவது என்பது மிகவும் சிறந்தது. இதைத்தான் ஸ்ரீஆளவந்தார் நம் அனைவரின் நன்மைக்காகவும் இயற்றி நமக்குக் கொடுத்திருக்கிறார். இதனால் பிரபன்ன குலத்தின் என்றென்றைக்குமான நன்றிக்கு உரியவர் அவர் ஆகிறார். இதை நாம் பகவானைப் பிரார்த்திப்பதற்கு முன் மாதிரி என்று கொள்வது மிகுந்த நன்மை பயக்கவல்லது. கூடவே விசிஷ்டாத்வைத தத்துவக் கூறுகளையும், பிரபத்தி நெறியின் நுட்பங்களையும் ஆழமாகப் பொதிந்து ஸ்ரீஆளவந்தார் அருளியிருப்பது நமக்கு இந்த ஸ்தோத்ர ரத்நம் நித்யம் ஆன்மிக அனுஷ்டானமாக, தியானமாக அமையும் போது புரியவரும். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment