Wednesday, July 13, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 62

அமர்யாத3: க்ஷுத்3ச் சலமதி: அஸூயாப்ரஸவபூ4:

க்ருதக்4நோ து3ர்மாநீ ஸ்மரபரவசோ வஞ்சநபர: |

ந்ரும்ஸ: பாபிஷ்ட2: கத2மஹமிதோ து3:க்க3ஜலதே4:

அபாராது3த்தீர்ண: தவ பரிசரேயம் சரணயோ: || 

வரம்புகளை மீறியவன், நீச விஷயங்களில் சபலம் உள்ளவன், நிலையற்ற நெஞ்சம் கொண்டவன், பிறருடைய நல்லவற்றைக் கண்டு பொறாத அசூயைக்கே பிறப்பிடமானவன், செய்நன்றியைக் கொன்றவன், தீயகர்வம் மிக்கவன், காம எண்ணங்களில் என்னை இழப்பவன், வஞ்சனையே செய்பவன், கொடிய காரியங்களைச் செய்பவன், பாபத்திலேயே நிலைபெற்றவன், இப்படிப்பட்ட நான் இந்தக் கரைகாண முடியாத துக்கக் கடலிலிருந்து கரையேறி உன்னுடைய திருவடிகளுக்கு அடிமை செய்யும் பேறு பெறுவது எங்ஙனம்? 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment