Saturday, July 9, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 58

து3ரந்தஸ்ய அநாதே3: அபரிஹரணீயஸ்ய மஹதோ

நிஹீந ஆசாரோSஹம் ந்ருபசு: அசு4ஸ்ய ஆஸ்பத3மபி |

3யாஸிந்தோ43ந்தோ4 நிரவதி4க வாத்ஸல்யஜலதே4

தவ ஸ்மாரம் ஸ்மாரம் கு3ணக3ணம் இதி இச்சா2மி க3தபீ4: || 

சேஷத்வத்திற்கு விரோதியாக இருக்கும் எதுவும் அழிந்து போகட்டும், ஆத்மா உள்பட என்று பிரார்த்தித்தவர், தாம் கைங்கர்ய விரோதியாக இருக்கும் எதையும் வேண்டாம் என்று வேண்டுவதைக் கண்டு, ஸம்ஸாரத்தில் இப்படிக் கைங்கர்யப் பிரார்த்தனை உள்ளவர் உண்டாவதே என்று பகவானின் முகக் குறிப்பில் ஆச்சரியம் தோன்றுவதாகவும், அதற்குப் பதில் அளிப்பது போன்றும் ஒரு மனோபாவம் இந்தச் சுலோகத்தில் அமைந்திருக்கிறது.

நானோ மனித உருவில் அமைந்த மிருகம் என்ற நிலையில் இருக்கிறேன். முடிவற்றதும், தொடக்கமற்றதுமான, போக்கவரிதான பெருப்பெருத்த அசுபங்களுக்கு மண்டுமிடமாகவும், தாழ்ந்த ஆசாரங்கள் அமைந்தவனாகவும் இருக்கின்றவன். இருந்தாலும், தயையின் பெருங்கடலாக இருப்பவரே! நித்ய பந்துவாகவும் இருப்பவரே! எல்லையற்ற வாத்ஸல்யத்தின் சாகரமானவரே! உம்முடைய கல்யாண குணக் கூட்டங்களை நினைத்து நினைத்து அதனால் பயத்தை மறந்து இப்படி விரும்பத் துணிந்துவிட்டேன். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment