தஸ்மை நமோ மது4ஜித3ங்க்4ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாந அநுராக3 மஹிமாதிசய அந்தஸீம்நே |
நாதா2ய நாத2முநயே S த்ர பரத்ர சாபி
நித்யம் யதீ3யசரணௌ சரணம் மதீ3யம் ||
*
பகவானை நமக்குக் காட்டித்தரும் சாத்திரக் கண்ணாய் இருப்பது வேதம். அதை அழிக்க நினைத்த மது என்னும் அசுரனை அழித்தவர் திருமால். அவ்வாறு அழித்து நமக்கு அவரைக் காணும் கண்ணாகிய வேதத்தைக் காப்பாற்றிக் கொடுத்தார். அந்தப் பகவானின் திருவடித் தாமரைகளில் உண்மையான சிறந்த தத்வஞானமாவது அவருடைய அவதாரத்தைப் பற்றியும், அவதாரம் எடுத்து அவர் புரியும் லீலைகளைப் பற்றியும் உள்ளபடி அறிவதே ஆகும். அத்தகைய தத்வஞானமும், திருமாலின் திருவடித் தாமரைகளில் நிறைந்த தூய பக்தியும் தொடர்ந்து பெருகும் மிகுந்த அதிசயமான மகிமையின் எல்லை நிலம் ஆனவை நாதமுனிகளின் ஞானமும் பக்தியும். எங்களுக்கோ இந்த உலகில் ஆகட்டும் அன்றி அவ்வுலகில் ஆகட்டும் யாருடைய திருவடிகள் புகலாக இருக்கின்றனவோ அந்த எங்கள் நாதராகிய நாதமுனிகளுக்கு எங்கள் வணக்கங்கள்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment