உபரி உபரி அப்3ஜபு4வோSபி பூருஷாந்
ப்ரகல்ப்ய தே யே சதமிதி அநுக்ரமாத் |
கி3ர: த்வதே3கைக கு3ணாவதீ4ப்ஸயா
ஸதா3 ஸ்தி2தா நோத்3யமதோSதிசேரதே ||
*
திருநாபிக்கமலத்திலே தோன்றின பிரம்மனை ஓர் அளவையாக வைத்து மேன்மேலும் இவ்வளவு நூறு மடங்கு இவ்வளவு நூறுமடங்கு என்று பிரம்மாக்களைக் கல்பித்து உன் ஒரு குணமான ஆநந்தத்தை எல்லைகாணும் விழைவால் முயன்ற வேத வாக்கானது என்ன ஆயிற்று? தொடங்கின தொடக்கத்திலேயே தொடர்ந்து நிற்கிறதே அன்றி அந்தத் தொடக்கத்தைத் தாண்டி மேலும் போக முடியவில்லையே!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment