க: ஸ்ரீ: ச்ரிய: பரமஸத்த்வஸமாச்ரய: க:
க: புண்ட3ரீக நயந: புருஷோத்தம: க: |
கஸ்ய அயுதாயுத சதைக கலாம்சகாம்சே
விச்வம் விசித்ர சித3சித்ப்ரவிபா4க3வ்ருத்தம் ||
*
உலகில் சித் அசித் எதுவாயினும் திகழ வேண்டுமாயின், தன்னுருவு கொண்டு நிலவ வேண்டுமாயின் அஃது ஸ்ரீதேவியைச் சார்ந்து நடைபெறுவது. அந்த ஸ்ரீதேவியும் யாரைச் சார்ந்து திகழ்ச்சி, இருப்பு கொண்டு நிலவுகிறாரோ அவர் யார்? பரம ஸத்வம் ஆகிய சுத்த ஸத்வமான திருமேனியைக் கொண்டவர் யார்? தாமரைக்கண்ணர் என்று கொண்டாடப்படுபவர் யார்? புருஷோத்தமன் என்று வேதங்களிலும் தானே திருவாய் மலர்ந்த ஸ்ரீகீதையிலும் கொண்டாடப்படுவோன் யார்? யாருடைய பல்லாயிரம் கோடி பாகங்களில் ஒன்றாக இந்த விசித்ரமான சித அசித் என்னும் விபாகத்தைக் கொண்ட பிரபஞ்சம் அனைத்தும் இருக்கிறது?
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment