கஸ்யோத3ரே ஹரவிரிஞ்சிமுக2: ப்ரபஞ்ச:
கோ ரக்ஷதீமமஜநிஷ்ட ச கஸ்ய நாபே4: |
க்ராந்த்வா நிகீ3ர்ய புநருத்3கி3ரதி த்வத3ந்ய:
க: கேந வைஷ பரவாநிதி சக்யசங்க: ||
*
யாருடைய வயிற்றில் ஹரன், பிரம்மா முதலிய படைப்பு அனைத்தும் காப்புண்டிருந்தது? நாபியிலிருந்து உண்டான இந்தப் படைப்பை யாரோ காக்கின்றனர்? ஒரு பொருளும் மிச்சமின்றி அனைத்தையும் அளந்து தன் திருப்பாதம் சாத்தியும், உண்டாய பொருளை ஒரு காலத்தில் விழுங்கியும் பின் மீண்டும் வெளிநாடு காண உமிழ்ந்தும் போருகின்றவர் நின்னையன்றி வேறு யார்? வேறு யாரை இவ்வுலகிற்கு நாதன் என்று சந்தேகமாவது படமுடியும்?
***
No comments:
Post a Comment