த்வதா3ச்ரிதாநாம் ஜக3து3த்3ப4வ ஸ்தி2தி
ப்ரணாச ஸம்ஸார விமோசநாத3ய: |
ப4வந்தி லீலா வித4யச்ச வைதி3கா:
த்வதீ3ய க3ம்பீ4ர மநோநுஸாரிண: ||
*
முக்கியமான சுலோகம். அடிக்கடி மேற்கோள் காட்டப்படுவதும் கூட. திருமாலடியார்களின் ஆழமான கலக்கமற்ற மனத்தைப் பின் தொடர்ந்தே வேதங்களும் தம்மை அமைத்துக் கொள்கின்றன என்ற கருத்து நம்மாழ்வாரைக் குறிப்பதுவாய்க் கொண்டாடப் படுகிறது.
உன்னுடைய அடியவர்களுக்காகத்தான் இந்த உலகத்தின் படைப்பு, நிலை, ஒடுக்கம், ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை என்னும் அலகில்லா விளையாட்டெல்லாம் உன்னால் நடத்தப்படுகின்றன. வேதத்தின் கட்டளைகளுமே உன்னையன்றி வேறிலாத உன் அடியார்களின் கலக்கமற்ற ஆழ்ந்த மனத்தைத் தாம் அனுசரிப்பவையாய் இருக்கின்றன.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment