ந த4ர்மநிஷ்ட்டோ2Sஸ்மி ந ச ஆத்மவேதீ3
ந ப4க்திமாம்ஸ்த்வச்சரணாரவிந்தே3 |
அகிஞ்சநோSநந்யக3திச் சரண்ய
த்வத்பாத3மூலம் சரணம் ப்ரபத்3யே ||
*
இது நம்முடைய சுலோகம். தர்மத்தில் நிலைநின்று கர்மயோகத்தில் நிலைத்தவனா என்றால் இல்லை. சரி ஆத்மஞானம் உண்டா என்றால், அது எப்படி? கர்மயோகத்தில் நிலைத்து, சித்த சுத்தியடைந்தால் அல்லவோ ஆத்மஞானம் உண்டாகும். முதலே இல்லையென்றால் அடுத்தது எப்படி இருக்கும்? இல்லை ஒரு வேளை ஜன்மாந்தரங்களில் செய்து முடித்து அதனால் பிறவியேலேயே சித்த சுத்தி பிறந்து அதனால் இயல்பாக ஆத்மஞானம் வாய்க்கலாமே, அப்படி எதுவும் உண்டா என்றால் அதுவும் இல்லை. சரி உன் சரண மலர்களில் பக்திபூண்ட பக்திமானா என்றால் அதுவும் இல்லை. சரி அருள் செய்வதற்கு ஏதாவது அடிப்படையாக ஆத்ம குணங்கள் ஏதாவது உண்டா என்றால் அருள் செய்யலாம் என்று பரிந்துரைப்பதற்குத் தோதாக என்னிடம் எதுவும் இல்லை. சரி வேறு யாராவது காப்பாற்றுவதற்குக் கதி உண்டா என்றால் வேறு எந்தக் கதியும் இல்லாத ஒரு ஜீவன். அப்படிப்பட்டவர்கள் சரணம் அடைய ஒரே புகலிடம் நீயே அல்லவா சரண்ய! உன் திருவடிகளே கதி என்று புகல் அடைந்துவிட்டவன்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment