ஸ்வவைச்வரூப்யேண ஸதா3Sநுபூ4தயாSபி
அபூர்வவத்3 விஸ்மயம் ஆத3தா4நயா |
கு3ணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை:
ஸதா3 தவைவ உசிதயா தவ ச்ரியா ||
*
இந்த விச்வம் அனைத்தும் உன் உருவமே என்னும் நிலையில் எப்பொழுதும் உன்னோடு பிரிவின்றி அநுபவிக்கப்படுகின்றவளாயிருந்தும், தம் குணங்களாலும், உருவத்தாலும், எழில்மிகு செயல்களாலும் என்றும் புதுமையாய் உனக்கு ஆச்சர்யத்தை விளைவிப்பவளும், எப்பொழுதும் எந்நிலையிலும், (பரம், விபவம், வியூஹம், அர்ச்சை முதலிய எல்லா நிலைகளிலும்) உனக்கு உசிதமானவளாய், உன்னுடைய ஸ்ரீதேவியானவளை (உன்னுடன் கண்டு அந்நிலையில் நான் தொண்டு செய்யும் நாள் எந்நாளோ)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment