அபூ4தபூர்வம் மம பா4வி கிம் வா
ஸர்வம் ஸஹே மே ஸஹஜம் ஹி து3:க்க2ம் |
கிந்து த்வத3க்3ரே சரணாக3தாநாம்
பராப4வோ நாத2 ந தேSநுரூப: ||
*
செய்ததையெல்லாம் செய்துவிட்டு அதன் பலனாகத் துக்கம் நேரும் போது தப்பிப்பதற்காக என்று இவ்வளவும் சொல்லவில்லை. ஏனெனில் இதுவரையில் எந்த துக்கம் நான் அனுபவிக்கவில்லை, இப்பொழுது என்று புதிதாக ஒரு துக்கம் ஏற்பட? எல்லாத் துக்கத்தையும் சகித்துச் சகித்துத் துக்கமே பழகியன்றோ போய்விட்டது! ஆனால் நாதா! உனக்கு முன்னால் சரணாகதி அடைந்தவனாய் வந்து நின்று கொண்டு அப்பொழுதும் எனக்குத் துக்கம் ஏற்படுமானால் அது எவ்வளவு அவமானம்! உம் ஸ்வரூபத்திற்கும் அஃது தகுந்ததில்லையே ஸ்வாமீ!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment