Friday, June 10, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 29

உதீ3ர்ண ஸம்ஸார த3வாசுசுக்ஷணிம் 

க்ஷணேந நிர்வாப்ய பராம் ச நிர்வ்ருதிம் | 

ப்ரயச்ச2தி த்வச்சரண அருணாம்பு3ஜ 

த்3வயாநுராகா3ம்ருதஸிந்து4 சீகர: || 


* 

ஒரு துளி என்ன எல்லாம் செய்கிறது! உனது செந்தாமரைச் சோதித் திருவடிகளில் அன்பு என்பதோ பெரும் அமுதக் கடல். அந்த அமுதக் கடலில் ஒரு துளி, உன் திருவடிகளில் அன்பின் ஒரு துளி போதும் பற்றியெரிகிற ஸம்ஸாரமாகிற இந்தப் பெரும் காட்டுத்தீயை ஒரே கணத்தில் அவித்துவிட்டு, மேலான பரம ஆநந்தத்தையும் தந்துவிடுகிறது. ஒரு துளி அன்பு! ஒரு கணம் தீர்வு! உன்னத ஆனந்தம்! 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment