Saturday, June 4, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 23

நிந்தி3தம் கர்ம தத3ஸ்தி லோகே 

ஸஹஸ்ரசோ யந்ந மயா வ்யதா4யி

ஸோSஹம் விபாகாவஸரே முகுந்த3 

க்ரந்தா3மி ஸம்ப்ரதி அக3திஸ் தவாக்3ரே || 



இதான். பெரியவர் பெரியவர்தான்! உயர்ந்த சாத்திர நுட்பங்களுக்குப் பாசுரம் போடுவது இருக்கட்டும். நம்மைப் போல் விழி பிதுங்கி நிற்கும் ஜீவன்கள் என்ன சொல்லிக் கதறணும் என்று நினைக்கிறோமோ அதற்கும் கச்சிதமான பாசுரம் போடுகிறார் பாருங்கள் ! 

முக்தியைத் தரும் முகுந்தா! நிந்திக்கப்பட்ட செயல் என்று உலகத்தில் ஒன்றைக் காட்டு. அதை ஆயிரம் மடங்கு ஆயிரம் தடவை ஆயிரம் விதத்தில் என்னால் செய்யப்படாத ஒன்று இருக்காது. அதெல்லாம் நன்கு பக்குவப்பட்டுப் பலன் கொடுக்க இருக்கும் இப்பொழுது, இந்தச் சமயத்தில், அப்படிச் செய்த நானாகப் பட்ட அந்த நான் என்ன செய்கிறேன்? கதியே இல்லாதவனாக, உனக்கு முன்னாடி நின்று கொண்டு கதறுகிறேன், முகுந்தா! முக்தி கொடுக்கும் முகுந்தா! 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment