ஸ்பு2ரத்கிரீடாங்க3த3 ஹாரகண்டி2கா
மணீந்த்3ர காஞ்சீகு3ண நூபுராதி3பி4: |
ரதா2ங்க3 சங்க2 அஸி க3தா3 த4நுர்வரை:
லஸத்துளஸ்யா வநமாலயா உஜ்ஜ்வலம் ||
*
ஒளிவிடும் கிரீடம், தோள்வளைகள், ஹாரம், திருக்கழுத்தில் அணியும் அணி, ஸ்ரீகௌஸ்துப மணி, திருஅரைநாண், திருச்சிலம்பு முதலிய ஆபரணங்களும், சக்கரம், சங்கம், கத்தி, கதை, வில் முதலிய ஆயுதங்களும், அழகொளி மிக்க துளஸியுடன் பிரகாசிக்கும் வநமாலையுடனும் சுடர்மிக ஒளிர்பவனாய் (இருக்கும் இருப்பைக் கண்டு தொண்டு செய்யும் நாள் எந்நாளோ )
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment