த்வதீ3ய
பு4க்த உஜ்ஜி2த சேஷ போ4ஜிநா
த்வயா நிஸ்ருஷ்ட
ஆத்மப4ரேண யத்3யதா2 |
ப்ரியேண ஸேநாபதிநா
ந்யவேதி3தத்
ததா2Sநுஜாநந்தம்
உதா3ர வீக்ஷணை: ||
*
நீர் உண்டு மிகுந்த சேஷத்தையே போக்கியமாகக் கொள்பவரும், நீர் அவர் மேல் வைத்த நிர்வாஹம் ஆகிய பாரத்தைச் சுமப்பவரும், அனைவருக்கும் பிரியமானவருமான விஷ்வக்ஸேநராலே எந்தக் காரியம் எவ்வண்ணம் விண்ணப்பிக்கப் படுகிறதோ அந்தக் காரியத்தை அவ்வண்ணமே நிரம்பிய கருணைப் பார்வையால் நியமித்தவாறு நீர் எழுந்தருளியிருக்க (அந்த நிலையில் நான் கண்டு தொண்டு செய்யும் நாள் எந்நாளோ)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment