ப்ரபு3த்3த4 முக்3தா4ம்பு3ஜ சாரு லோசநம்
ஸவிப்4ரமப்4ரூலதம் உஜ்ஜ்வல அத4ரம் |
சுசிஸ்மிதம் கோமளக3ண்ட3ம் உந்நஸம்
லலாடபர்யந்த விலம்பி3த அலகம் ||
*
அன்றலர்ந்து மலராநிற்கும் தாமரை போல் அழகிய கண்கள், நெறிப்பினால் கொடிபோன்று வளைந்ததான திருப்புருவங்கள், மனத்தைக் கவரும் இதழ்கள், தூய புன்சிரிப்பு, அழகிய கன்னக் கதுப்புகள், உயர்ந்து விளங்கும் நாசி, நெற்றிவரையில் அலையும் திருக்குழல் கற்றைகள் (இவற்றைக் கண்டு அந்த ஆனந்தத்தில் தொண்டு செய்யக் கூடும் நாள் எந்நாளோ?)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment