Monday, June 13, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 32

விராஜமாந உஜ்ஜ்வல பீதவாஸஸம் 

ஸ்மித அதஸீஸூந ஸம அமலச்ச2விம்

நிமக்3நநாபி4ம் தநுமத்4யம் உந்நதம் 

விசா வக்ஷஸ்ஸ்த2சோபி4லக்ஷணம் || 



இந்தச் சுலோகம் தொடங்கி 46ஆம் சுலோகத்தளவும் 15 சுலோகங்கள் ஒரே வாக்கிய அமைப்பில்  இருப்பவை. அதாவது பகவானின் அவயவங்கள், ஆபரணங்கள், ஆயுதங்கள், தேவிமார், பரிஜனங்கள் என்று விவரித்து இந்தச் சேர்த்தியழகுடன் திகழும் நிலையில் பகவானுக்குக் கைங்கரியம் புரிந்து அதனால் வரும் அனுபவத்தால் உவகையுற்ற நிறைவில் பிறக்கும் தொண்டின் நிறைவில் பகவான் மகிழத் தாம் காண்பது என்றோ என்று 15 சுலோகங்களின் கருத்துத் தொடர்ச்சியாகும். எனவே ஒவ்வொரு சுலோகத்தோடும் சேர்த்து என்று இந்தச் சேர்த்தியான நிலையில் நான் கைங்கரியம் செய்யப் பெறுவனோ என்பது நினைக்கப்படும். 

நிறங்கலந்து பிரகாசமாய் விளங்கும் பீதாம்பர ஆடையும், மலர்ந்த காயாம் பூவையொத்துத் திகழும் காந்தியும், உள்ளடங்கிய நாபியும், இடைசிறுத்து மேலெழும் அழகும், அகன்ற திருமார்பில் விளங்கும் திருமறுவும் (கண்டு கைங்கரியம் புரியும் பேறு என்று எனக்குக் கிட்டுமோ?) 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment