Saturday, June 25, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 44

அபூர்வ நாநாரஸ பா4வநிர்ப்ப4ர

ப்ரபத்3த4யா முக்3த4 வித3க்3த4 லீலயா |

க்ஷண அணுவத் க்ஷிப்த பராதி3காலயா

ப்ரஹர்ஷயந்தம் மஹிஷீம் மஹாபு4ஜம் || 

* 

முன்னெப்பொழுதும் இல்லாத புதுப்புதுப் பலவித சுவைகளாலும், உள்ளபா4வங்களாலும் நிறைந்ததும் நெருங்கியமைந்ததும், கணத்தின் ஒரு கூறான நேரத்தில் பிரம்மனின் ஆயுட்காலமான பரமே கழிந்துபோனது போன்ற அழகியதும், விதவிதமான ஸாமர்த்யத்துடன் கூடிய லீலைகளால் பெரிய பிராட்டியாரை மகிழ்விப்பவனாகவும், பெருத்த தோளுடையவனாகவும் (இருக்கும் அந்த நிலையில் நான் கண்டு தொண்டு செய்யும் நாள் எந்நாளோ) 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment