Tuesday, June 14, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 33

சகாஸதம் ஜ்யாகிணகர்க்கசை: சுபை4

சதுர்ப்பி4: ஆஜாநுவிலம்பி3பி4: பு4ஜை: | 

ப்ரியாவதம்ஸ உத்பல கர்ண பூ4ஷண 

ச்லத2 அலகாப3ந்த4 விமர்த்த3ம்ஸிபி4: || 



பகவானின் தோளழகைப் பற்றிப் பேசுகிறார். சுபமான தோள்கள், வில்லின் நாண் தழும்பு ஏறியிருக்கும் தோள்கள், ஒன்றுக்கு நான்காகக் காப்பதற்கு விளங்கும் தோள்கள், முழங்கால்வரை நீண்ட கைகளை உடைத்தான தோள்கள், பிராட்டியின் திருச்செவி மலரான நீலோத்பலமும், காதின் அணிகுழை என்ன, அலையும் திருக்குழல் சுருளென்ன இவை அழுந்தியிருக்கும் அடையாளங்களை தெரிவிக்கும் விதமாகப் பிரகாசிக்கும் சதுர்புஜங்களைக் ( கண்டு என்று கைங்கரியம் செய்யப் பெறுவேன்). 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment