Tuesday, June 21, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 40

நிவாஸ ய்யாஸந பாது3காம்சு

உபதா4ந வர்ஷாதப வாரணாதி3பி4: |

ரீரபே4தை3: தவ சேஷதாம் க3தை:

யதோ2சிதம் சேஷ இதீரிதே ஜநை: || 



திருவநந்தாழ்வானின் கைங்கரியம் எப்படிப்பட்டது! இருக்கும் இடமாகவும், பள்ளிகொள்ளும் படுக்கையாகவும், அமரும் ஆஸநமாகவும், நடக்கும் போது அணியும் பாதுகையாகவும், தலையில் திருப்பரியட்டமாகவும், அணையாகவும், மழை வெயில் தாங்கும் குடையாகவும் நினக்குற்ற சேஷத்வம் நிறம்பெற வேண்டிப் பலப்பல சரீரங்கள் எடுத்து, உரிய தொண்டுகள் அனைத்தும் இயற்றுவதால் அனைவராலும் சேஷன் என்றே அழைக்கப்படும் திருவநந்தாழ்வான் மீது நீ அமர்ந்திருப்பக் (கண்டு நான் தொண்டு செய்யும் நாள் எந்நாளோ) 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment