உத3க்3ர பீந அம்ஸ விலம்பி3 குண்ட3ல
அலக ஆவளீ ப3ந்து4ர கம்பு3 கந்த4ரம் |
முக2ச்ரியா ந்யக்க்ருத பூர்ண நிர்மலாS
ம்ருதாம்சு பி3ம்ப3 அம்பு3ருஹ உஜ்ஜ்வலச்ரியம் ||
*
உயர்ந்து பருத்த திருத்தோள்கள்வரை தாழ்ந்து தொங்கும் குண்டலங்கள், திருக்குழல் சுருள்கள் இவற்றால் அழகுடன் மூன்று கோடுகள் படிந்த திருக்கழுத்து விளங்க, முகத்தின் ஒளியோ அன்றலர்ந்த தாமரைப் பூவின் அழகொளியையும், முழுமதியின், களங்கமற்ற ஒளியையும் வென்று விளங்க (இவ்வாறிருக்கும் நிலையில் நான் கண்டு என்று கைங்கரியம் செய்யப் பெறுவேன்!)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment