நமது நாட்டில்தான் எத்தனை மகான்கள், எத்தனை யோகிகள், எத்தனை சித்தர்கள் வாழ்ந்து அருள் புரிந்திருக்கின்றனர்! தோபா சுவாமிகள் என்னும் மகானின் அருட்செயல்களை வேளச்சேரியிலும், வேலூரிலும் நிகழ்த்திய அதிசயங்களைத் தொகுத்து ஸ்ரீபானுகவி என்பார் சரித்திரச் செய்யுளாகப் பாடியதையும், மற்றும் பலர் தோப்பா சுவாமிகளின் அருள்பெற்ற அடியாரின் அனுபவங்களையும் வைத்து வேதங்களைத் தமிழில் செய்யுளாக இயற்றியருளிய கா சிவாநந்த யதீந்திரர் வசன நடையில் செய்த தோபா ஸ்வாமிகளின் சரித்திரம் மிக்க வியப்பான ஒன்று. இயற்கையின் விதிகளைக் கடந்த யோகிகளின் செயல்களைப் புரிந்து கொள்ளும் பக்குவம் நமக்கு வாய்க்க வேண்டும். அதற்கும் அவரே அருள் புரிய வேண்டும். தமிழ்ப்புலவர் வீரபத்திரப் பிள்ளை தோபா ஸ்வாமிகள் மீது பாடிய பாக்கள் அருள் நிறைந்தவை.
சித் என்பது அறியும் மெய்ப்பொருள். அஃது உயிர். எல்லையற்றது. உணர்வின் உயிர்ப்பே எண்ணங்கள். மூன்று முக்கியம். பிறப்பால் மனிதரில் உயர்வு தாழ்வு இல்லை. பெண்ணும் ஆணும் சமமான மனித உயிர். கடவுளை அடைய அன்பே வழி. மனித குலத்தை நேசிப்பவர் சிறந்தவர். உயிர்க்குலத்தை நேசிப்பவர் உத்தமர். மதம், சாதி, மொழி, இனம் எதனாலும் மனிதரில் பிரிவினைப் பகையும், வெறுப்புப் பிளவும் ஏற்படாவண்ணம் ஒழுகுதல் நல்லொழுக்கம்.
Tuesday, September 1, 2020
தோபா ஸ்வாமிகள்
’அறிந்தவன் நீயே அறிவித்தால் அடியேன்
அறிகுவன் நின்றனது இயல்பை
அறிந்துநன் கேத்தித் துதிசெயாக் குறைநீ
அறிவியாக் குறையெனக் கொண்டு
மறிந்துவெம் பிறவிக் குழியிடை வீழ்த்தி
வருந்துபாழ் வினைக்கொடும் வேரைத்
தறிந்துநீ யருளாய் சைதைவாழ் தோபாச்
சாமியே ஞானநா யகனே.’
‘கண்ணினால் நின்றன் திருவுருக் கண்டார்
காதினால் நின்புகழ் கேட்டார்
எண்ணினால் நின்றன் நாமம் சிந்தித்தார்
இருகரம் உச்சிமேல் குவித்தார்
மண்ணின்மேல் புரிந்த வல்வினை ஓட்டி
வான்கதி சேர்வரீ துண்மை
தண்ணிலா முடியோய் சைதைவாழ் தோபாச்
சாமியே ஞானநா யகனே.’
‘வாக்கினைக் கடந்து மெய்யினைக் கடந்து
மனத்தினக் கடந்துநின் றாலும்
பூக்குமெய் யடியார் அன்பினில் கடவாப்
புண்ணியா தண்ணளி கூர்ந்து
காக்கும தல்லால் கைவிடேல் எனைநீ
கதிரவன் நகையற மேனாள்
தாக்கிய முதலே சைதைவாழ் தோபாச்
சாமியே ஞானநா யகனே.’
***
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment