சரித்திரம் என்றதும் எனக்கு எப்பொழுதும் நினைவில் வருவது வில் ட்யூரண்டின் பதினோரு வால்யூம் ஸ்டோரி ஆஃப் ஸிவிலிஸேஷன். முதல் பக்கத்தில் தூண்டப்படும் ஆர்வம் கடைசி வால்யூம் கடைசி பக்கம் முடிந்தும் எஞ்சி நிற்கும் என்றால் அவருடைய சொல்பாணிதான் அதற்குக் காரணம். அவர் நூல் குறிப்புகளாகத் தரும் மூலநூல் சான்றுகள் நம்மை எங்கோ பல உலகங்களுக்குக் கொண்டு போகும். பல இடங்களில் தாம் எந்த அவ்வக்கால சான்று குறிப்புகளை வைத்து முடிவுகளுக்கு வருகிறாரோ அந்தச் சான்றுகளையே சில வரிகளாவது நாம் படிக்கவும் கொடுக்கும் போது நாம் முற்றிலும் அவருடன்தான் பயணித்துக் கொடிருப்போம். அப்பொழுதுதான் சரித்திரச் சான்று மூலங்கள் என்பவை எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தேன்.
சித் என்பது அறியும் மெய்ப்பொருள். அஃது உயிர். எல்லையற்றது. உணர்வின் உயிர்ப்பே எண்ணங்கள். மூன்று முக்கியம். பிறப்பால் மனிதரில் உயர்வு தாழ்வு இல்லை. பெண்ணும் ஆணும் சமமான மனித உயிர். கடவுளை அடைய அன்பே வழி. மனித குலத்தை நேசிப்பவர் சிறந்தவர். உயிர்க்குலத்தை நேசிப்பவர் உத்தமர். மதம், சாதி, மொழி, இனம் எதனாலும் மனிதரில் பிரிவினைப் பகையும், வெறுப்புப் பிளவும் ஏற்படாவண்ணம் ஒழுகுதல் நல்லொழுக்கம்.
Tuesday, September 1, 2020
சரித்திரமும் சில விஷயங்களும்
இந்திய சரித்திரத்திற்குப் பல காலக் கட்டங்களுக்குமான சான்று மூலங்களை ஆகத் தொகுத்து ஒருவர் 1933ல் ஒரு நூல் செய்திருக்கிறார். அவர் திரு கே ஸ்ரீநிவாஸ் கிநி என்பவர். காஸர்கோட் போர்ட் ஹைஸ்கூலில் ஹெட்மாஸ்டராக இருந்தவர். (அந்தக் காலத்து மக்களுடைய தகவுகளை நினைத்தால்தான் பிரமிப்பாக இருக்கிறது.) எ ஸோர்ஸ் புக் ஆஃப் இண்டியன் ஹிஸ்டரி என்னும் நூல். உதாரணத்திற்கு, எங்கோ பதினைந்தாம் நூற் ல் இந்தியாவின் பகுதி ஒன்று எப்படி இருந்தது என்பதற்கு இந்த நூலில் கையாளும் வழி, அந்த நூற் ல் இந்தியாவில் பயணம் மேற்கொண்ட ஒருவர் தாம் பார்த்ததாக எழுதிவைத்த பகுதியை மொழிபெயர்த்துத் தந்து விடுகிறார். இவ்வாறு பல காலக் கட்டங்களில் நமக்கு நேரடித் தகவல்களாய் கூடியமட்டும் அமையும் பகுதிகளை நிரல்படுத்தி திரு ஸ்ரீநிவாஸ் கிநி தந்திருக்கும் பணி பிரமிப்பாக இருக்கிறது.
இஃது இப்படியென்றால், 1906ல் திரு சிந்நய நாயகர் என்பவர் அநுகீதையைத் தமிழ்ச் செய்யுளாக மொழிபெயர்த்து விடுகிறார். கோமளேசுவரன்பேட்டை, சச்சிதாநந்த அச்சியந்திரசாலையில் திரு கோ வடிவேலுச் செட்டியார் அதைக் கொண்டு வந்திருக்கிறார். இந்த சிந்நய நாயகர் திருவிசைநல்லூரில் பௌராணிகர். இருமொழிப் புலமை இல்லாமல் நடக்கும் காரியமா?
***
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment