ஸ்ரீராமகிருஷ்ணர் பகவானின் அவதாரமே என்று சாஸ்திரங்களையெல்லாம் காட்டி பைரவி பிராம்மணி வித்வான்களின் சபையில் நிரூபித்து வாதம் செய்கிறார். அனைத்து வித்வான்களும் ஒருமனதாக அதை ஏற்கின்றனர். ஸ்ரீவைஷ்ணவசரண் உள்பட. அதுதான் பெரும் ஆச்சரியமாக இருக்கிறது மதுர் பாபுவிற்கு. தாம் அப்பா அப்பா, பாபா பாபா என்று அன்புடன் அழைக்கும் ஒருவர், கண்ணுக்கு முன்னால் ஐயோ பாவம் என்று நடக்கும் ஒருவர் மிகவும் உயர்ந்த சுத்த ஸத்வமான ஒருவர் என்பதுவரை அவரால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அனைத்துலகும் படைத்து அளித்து ஒடுக்கி ஆளும் பரமன் தான் நேரே தாமே வந்து இவ்வாறு பிறந்திருக்கும் பகவத் அவதாரம் என்றால், பிராம்மணிதான் கூறினால் அதை மறுபேச்சே இல்லாமல் ஸ்ரீவைஷ்ணவசரணே ஒப்புக்கொண்டு பாபாவை விழுந்து வணங்குவார் என்றால்... என்னது இது.. எப்படி... என்று குழப்பம்.
சித் என்பது அறியும் மெய்ப்பொருள். அஃது உயிர். எல்லையற்றது. உணர்வின் உயிர்ப்பே எண்ணங்கள். மூன்று முக்கியம். பிறப்பால் மனிதரில் உயர்வு தாழ்வு இல்லை. பெண்ணும் ஆணும் சமமான மனித உயிர். கடவுளை அடைய அன்பே வழி. மனித குலத்தை நேசிப்பவர் சிறந்தவர். உயிர்க்குலத்தை நேசிப்பவர் உத்தமர். மதம், சாதி, மொழி, இனம் எதனாலும் மனிதரில் பிரிவினைப் பகையும், வெறுப்புப் பிளவும் ஏற்படாவண்ணம் ஒழுகுதல் நல்லொழுக்கம்.
Tuesday, September 1, 2020
மதுர்பாபுவின் ஐயமும் மனைவியின் தெளிவும்
ஆனால் அவருடைய மனைவிக்கோ அந்த ஐயமெல்லாம் இல்லை. ஆம் நமது பாபா பகவத் அவதாரமாகத்தான் இருக்க வேண்டும். இதில் என்ன சந்தேகம். ஆனாலும் எப்படி என்று மனத்தை அலட்டிக்கொள்ளும் கணவரிடம் அவள் காட்டும் நியாயமோ அற்புதம். ‘உங்களுடைய ஜாதகத்தில் போட்டிருக்கிறதே உங்களுடைய இஷ்ட தேவதை எப்பொழுதும் உங்கள் கூடவே இருக்கும்’ என்று!
நமக்கும் பிடிகிட்டியது போல் ஏதோ ஒரு நிறைவு நமக்கும் ஏற்படத்தான் செய்கிறது.
அதாவது தெய்வ விஷயங்கள் நம் அறிவுக்குப் புரிபடுவதில்லை என்பது விஷயம்.
***
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment