Thursday, September 17, 2020

காலைத் தேநீரின் அதிசயங்கள்

 அறிவது என்பது நமக்குப் புரியும். கண்டு அறிவது, கேட்டு அறிவது அதுவும் புரிகிறது. ஆனால் இதயத்தால் அறிவது என்றால் என்ன? ‘இதயத்தால் அறிவது’ என்ற கருத்தைக் கூறுகிறார் ஸ்ரீதாயுமானவர்.

’கண்டு அறியேன்
கேட்டு அறியேன்
காட்டும் நினையே
இதயம் கொண்டு அறியேன்
முக்தி குறிக்கும் தரமும் உண்டோ?
தொண்டு அறியாப் பேதமையேன்
சொல்லேன் நின் தொன்மை எலாம்
பண்டு அறிவாய்
நீயே பகராய் பராபரமே’
’இதயம் கொண்டு அறியேன்’ - இன்றைக்கு மனம் இதையே அரற்றிக்கொண்டு இருக்கப் போகிறது. நல்ல சொற்கோவை தேநீர் வேளையில்!
*
’சித்தினை அசித்துடன் இணைத்தாய் அங்கு
சேரும் ஐம்பூதத்து வியனுலகு அமைத்தாய்’
சாஃப்ட்வேரை ஹார்ட் வேருடன் இணைக்கும் கம்ப்யூட்டர் அதிசயத்தைக் காட்டிலும் காக்னிஷன் வித் மேட்டர் இணைப்பது எத்தனை விந்தை! இங்கும் சாஃப்ட்வேர் இருக்கிறது. அது அந்தக்கரணம் நால்விதம். ஆனால் அந்தர் பஹிர் கரணங்கள் அனைத்தையும் பயன்கொண்டு, அர்த்தப்படுத்தும் ஞாத்ரு என்பது பெரும் விந்தை.
இதில், இதையெல்லாம் பொருளுள்ளதாக்கும் வகையில்
பக்தி என்றொரு நிலை வகுத்தாய்..!!!!
பரமா பரமா பரமா
‘நானும் நீயும் ஒன்றாகத்தானே பள்ளிக்கூடம் படித்தோம். எனக்குப் புரியாத சாத்திர நுட்பங்கள் உனக்கு மட்டும் புரிகிறதே, என்னமா அது?’ - இதைக் கேட்டது திருதராஷ்ட்ரன்.
சஞ்சயன் அளித்த பதில் --
‘பக்தியுடன் கூடிய ஞானத்தால் அறிந்தேன் ராஜா!’
பக்தி என்றால் என்ன? ...
காலையில், புலர்ந்தும் புலரா வேளையில் ஆயிரம்தான் இருந்தாலும், தேநீர் ஒரு கிறக்கம்தான் தருகிறது. ‘தேநீர் சஹக்ருத ஞானம்’ ஆக இருக்கிறது நம் பிழைப்பு !
***

No comments:

Post a Comment