ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
சித் என்பது அறியும் மெய்ப்பொருள். அஃது உயிர். எல்லையற்றது. உணர்வின் உயிர்ப்பே எண்ணங்கள். மூன்று முக்கியம். பிறப்பால் மனிதரில் உயர்வு தாழ்வு இல்லை. பெண்ணும் ஆணும் சமமான மனித உயிர். கடவுளை அடைய அன்பே வழி. மனித குலத்தை நேசிப்பவர் சிறந்தவர். உயிர்க்குலத்தை நேசிப்பவர் உத்தமர். மதம், சாதி, மொழி, இனம் எதனாலும் மனிதரில் பிரிவினைப் பகையும், வெறுப்புப் பிளவும் ஏற்படாவண்ணம் ஒழுகுதல் நல்லொழுக்கம்.
Sunday, July 17, 2022
ஸ்தோத்ர ரத்நம், ஸ்ரீஆளவந்தார் அருளியது - பொருளடக்கம்
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
ஸ்ரீஆளவந்தார் ஸ்தோத்ர ரத்நம் சில குறிப்புகள்
Saturday, July 16, 2022
ஸ்ரீஆளவந்தாரும் ஸ்தோத்ர ரத்நமும்
லக்ஷ்மீநாதா2க்2ய
ஸிந்தௌ4 சட2ரிபு ஜலத3:
ப்ராப்ய காருண்ய
நீரம்
நாதா2த்3ராவப்4யஷிஞ்சத்
தத3நு
ரகு4வராம்போ4ஜ
சக்ஷுர்ஜ2ராப்4யாம் |
க3த்வா
தாம் யாமுநாக்2யாம் ஸரிதமத2
யதீந்த்3ராக்2ய
பத்3மாகரேந்த்3ரம்
ஸம்பூர்ய ப்ராணிஸஸ்யே
ப்ரவஹதி
ப3ஹுதா4 தே3சிகேந்த்3ர ப்4ரமௌகை4: ||
திருமால் என்னும் லக்ஷ்மீநாதனாகிய கருணையம் பெருங்கடல். அதில் கருணை என்னும் நீரைப் பருகியது நம்மாழ்வார் என்னும் சடகோபராகிய மேகம். ஸ்ரீநாதமுநிகள் என்னும் மலையின் பேல் அந்த நீரைப் பெய்தது. மலையின் மீது பெய்த கருணை என்னும் நீர், புண்டரீகாக்ஷர் என்னும் உய்யக்கொண்டார், ராமமிச்ரர் என்னும் மணக்கால் நம்பி ஆகிய இரு அருவிகளின் வழியே யாமுநாசார்யர் என்னும் ஸ்ரீஆளவந்தாராகிய பெரிய ஆற்றில் புகுந்தது. அங்கிருந்து யதீந்த்ரர் என்னும் இராமாநுசராகிய பெரும் ஏரியில் வந்து சேர்ந்தது. அந்த ஏரியினின்றும் ஆசார்யர்கள் என்னும் வாய்க்கால்கள் மூலம் உயிர்கள் என்னும் பயிர் செழிக்கப் பாய்கிறது.ஸ்வாத3யந்நிஹ
ஸர்வேஷாம்
த்ரய்யாந்தார்த்த2ம்
ஸுது3ர்க்3ரஹம் |
ஸ்தோத்ரயாமாஸ
யோகீ3ந்த்3ர:
தம் வந்தே3 யாமுநாஹ்வயம் ||
அறிதற்கு அரிதான வேதாந்த நுண்பொருளை எந்த ஒரு யோகீந்த்ரர் இவ்வண்ணம் அனைவரும் இனிதே அனுபவித்துப் பயில வாய்ப்பாக ஸ்தோத்ரமாக ஆக்கினாரோ அந்த யாமுநர் என்று அழைக்கப்படும் ஸ்ரீஆளவந்தாரை வணங்குகிறேன்.நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: |
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: ||
ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 65
அக்ருத்ரிம
த்வச்சரணாரவிந்த3
ப்ரேமப்ரகர்ஷாவதி4ம்
ஆத்மவந்தம் |
பிதாமஹம் நாத2முநிம்
விலோக்ய
ப்ரஸீத3
மத்வ்ருத்தம் அசிந்தயித்வா ||
*
நிறைவு சுலோகம்:
என்னுடைய நடத்தையை நோக்காதீர்! என் நடத்தையைச் சிந்தனையில் கொள்ளாதீர்! என்னுடைய தாத்தா (பிதாமஹமர்), உமது சரணாரவிந்தங்களில் இயல்பான பிரேமை எல்லையற்றுப் பிரவாகமாய் இருந்தவர், ஆத்மஞானத்தில் சிறந்தவர், ஸ்ரீநாதமுனிகளையே கண்ணால் பார்த்துக்கொண்டே என்னையும், என் நடத்தையையும் கிருபை கூர்ந்து மன்னித்துவிடும்.Friday, July 15, 2022
ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 64
நநு ப்ரபந்நஸ்
ஸக்ருதே3வ நாத2
தவாஹமஸ்மீதி
ச யாசமாந: |
தவாநுகம்ப்ய:
ஸ்மரத: ப்ரதிஜ்ஞாம்
மதே3கவர்ஜம்
கிமித3ம் வ்ரதம் தே ||
*
நாதனே! ’ஒரே முடிவாய் உன்னைச் சரணடைந்துவிட்டேன்’, ‘நான் உனக்கே ஆட்பட்டவன் ஆகவேணும்’ என்றெல்லாம் வேண்டி உன்னை யாசிக்கின்ற நான், (சரணாகதி அடைந்தோர் குறித்து) நீ செய்துள்ள பிரதிஜ்ஞையை என்றும் நினைவுகொண்டிருக்கும் உனக்குத் தயையுடன் அருள்செய்யத் தக்கவன் அன்றோ? (சரணாகதி அடைந்தோரைக் கைவிடேன்) என்ற உன்னுடைய விரதம் என் ஒருவனைத் தவிர்த்துவிட்டு இயலுமோ?Thursday, July 14, 2022
ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 63
ரகு4வர
யத3பூ4ஸ்த்வம் தாத்3ருசோ வாயஸஸ்ய
ப்ரணத இதி த3யாளுர்யச்ச
சைத்3யஸ்ய க்ருஷ்ண
ப்ரதிப4வம்
அபராத்3து4ர் முக்3த4 ஸாயுஜ்யதோ3Sபூ4:
வத3
கிமபத3மாக3ஸ்தஸ்ய தேSஸ்தி க்ஷமாயா: ||
*
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
Wednesday, July 13, 2022
ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 62
அமர்யாத3:
க்ஷுத்3ரச் சலமதி: அஸூயாப்ரஸவபூ4:
க்ருதக்4நோ
து3ர்மாநீ ஸ்மரபரவசோ வஞ்சநபர: |
ந்ருசம்ஸ:
பாபிஷ்ட2: கத2மஹமிதோ து3:க்க3ஜலதே4:
அபாராது3த்தீர்ண:
தவ பரிசரேயம் சரணயோ: ||
*
வரம்புகளை மீறியவன், நீச விஷயங்களில் சபலம் உள்ளவன், நிலையற்ற நெஞ்சம் கொண்டவன், பிறருடைய நல்லவற்றைக் கண்டு பொறாத அசூயைக்கே பிறப்பிடமானவன், செய்நன்றியைக் கொன்றவன், தீயகர்வம் மிக்கவன், காம எண்ணங்களில் என்னை இழப்பவன், வஞ்சனையே செய்பவன், கொடிய காரியங்களைச் செய்பவன், பாபத்திலேயே நிலைபெற்றவன், இப்படிப்பட்ட நான் இந்தக் கரைகாண முடியாத துக்கக் கடலிலிருந்து கரையேறி உன்னுடைய திருவடிகளுக்கு அடிமை செய்யும் பேறு பெறுவது எங்ஙனம்?