Thursday, October 21, 2021

விசாரம் விவாதம் நெறிபற்றிய கருத்து

விசாரம், விவாதம் என்று எது சரியான கருத்து என்று தேடும் போது ஒரு விதத்தில் நம் பிரச்சனை மிகவும் சுலபமான ஒன்று. அதாவது ஒரு மாலுமியைப் போல் நாம் நடந்துகொண்டால் போதுமானது. மாலுமி என்ன செய்கிறார்? மேற்கு திசையை நோக்கி அவர் போக வேண்டும் என்றால் தம்மிடம் இருக்கும் காம்பஸ்ஸில் பார்க்கிறார். முள் மேற்கு திசையைக் காட்டினால் அப்பாடா என்று வேறு வேலைகளைக் கவனிக்கிறார். சற்று நகர்ந்து காணப்பட்டாலும் உடனே அதை இழுத்து இதைத் திருகி மிகுந்த முயற்சி எடுத்து கலத்தை முள் தாம் செல்ல வேண்டிய திசையைக் குறிக்கும்வரை முயன்று கொண்டு வந்துவிடுகிறார். அது போல் நாம் கவனிக்க வேண்டியது எல்லாம் உண்மையின் பக்கம் நமது வாதமோ விசாரமோ இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ள வெண்டியதுதான். அது சரியாய் இருக்கும்வரை எந்த விசாரமும் எந்த விவாதமும் நமக்கு லாபக் கணக்குதான். அவ்வாறு இல்லை என்னும் போதுதான் நாம் மிகக் கவனம் கொண்டு நாம் கருத்தில் எங்கு தவறு செய்தோம் என்று சரி பார்த்து மாற்றிக் கொள்ள வேண்டும். அங்கு சரி செய்து விட்டால் பின்னர் என்ன சோம்பல் சொகுசுதான்!

***

No comments:

Post a Comment