Friday, October 22, 2021

பிளேட்டோவும் திருவாய்மொழியும்

பிளேட்டோ எழுதிய சம்பாஷணைகளில் ஒன்று தியாயிடீடஸ். அதில் சாக்ரடிஸ் தியோடோரஸ் என்பவரிடமும், தியாயிடீடஸ் என்பவரிடமும் பேசுவதாக சம்பாஷ்ணையின் போக்கு. ஓரிடம் வந்தவுடன் பேச்சில் தியாயிடீடஸிடம் சொல்கிறார் சாக்ரடிஸ். ‘போ போ போய்ப் பார். வேறு யாராவது புரியாத மாந்தர்கள் எவரும் இங்கு இல்லையே என்று ஒருதரம் நன்கு பரிசோதித்துப் பார். மேற்கொண்டு நாம் இந்த விஷயத்தைப் பேசுவதற்கு முன்!”

ஏனாம்? அந்தப் புரியாத மாந்தர் எப்படிப் பட்டவர்களாம்? ‘கண்ணுக்குத் தெரிகிற, கைகளால் கெட்டியாகப் பிடிக்க முடிகிற விஷயங்களைத் தவிர வேறு எதுவுமே உண்மை இல்லை’ என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள்தாம் அவர் அஞ்சுகிற புரியா மாந்தர். 

அவருடைய வார்த்தை - “Take a look around then and make sure no one of the uninitiated can overhear. They are those who believe that nothing else is except whatever they are capable of getting a tight grip on with their hands, but actions, becomings, and everything invisible they don't accept as in the class (part) of being.”

அன் இனிஷியேடட் என்ற பதத்தைச் சொல்கிறார். சிரத்தை இல்லாதவருக்குச் சொல்லாதே! தவம் இல்லாதவருக்குச் சொல்லாதே! என்று ஸ்ரீகிருஷ்ணன் சொல்கிறார்.

‘எம்மா வீட்டுத் திறமும் செப்பம்’ எனும் திருவாய்மொழியை ஆரம்பித்தவுடனேயே எம்பார் இருந்தவர்களை யார் என்று விசாரித்து ஊர்ஜிதம் செய்து கொண்டு, கதவையும் அடைத்துவிட்டுத்தான் சொல்வார் என்கின்றன பகவத் விஷய வியாக்கியானங்கள்.

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment