Friday, October 22, 2021

கரிய குருவிக் கணங்கள்..

காலை எழுந்திருந்து கரிய குருவிக் கணங்கள். என்ன செய்கின்றன? யாரோ வருகிறார் வருகிறார் என்று யாருடைய வரவையோ அவை சேதி சொல்கின்றன. யாருடைய வரவு? 

மாலின் வரவு சொல்லி

மாலின் வரவு சொல்வார் தெளிந்திருந்து வார்த்தை சொல்ல முடியுமா? முழுப் பேச்சு கூட வராமல் நா குழறும். அப்படித்தானே ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்வில் படிக்கிறோம். கடவுள் நாமங்களைச் சொன்னதும் அவருக்கு நா குழறி, நடை தள்ளாடிப் பின்னும் என்று படிக்கும் போது என்ன தோன்றும்?

மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ?

அதை நாம் நன்கு புரிந்து கொண்டு விட்டால் பின்னர் அவை என்ன பாடுகின்றன அல்லது சொல்ல வந்து முடியாமல் மருள்கின்றன என்று பார்த்தால் அவை மூன்று பேருடைய வார்த்தைகளைச் சொல்வன போல் தெரிகின்றன.

சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான் ஆலின் இலைப் பெருமான் அவன் வார்த்தை உரைக்கின்றதே.

ஒருவனே தான் என்று கொண்டால் அவனுடைய வார்த்தை என்ன? மூன்று பேர் என்று கொண்டால் அந்த மூன்று வார்த்தைகள் என்ன என்ன?


அடேயப்பா! என்ன வார்த்தைகள் ! -

இருள் அகற்றும்
எறி கதிரோன்
மண்டலத்தூடு
ஏற்றி வைத்துஏணி வாங்கிஅருள் கொடுத்திட்டுஅடியவரை ஆட்கொள்வான்அமரும் ஊர்அணி அரங்கமே.


ஓர் ஊர்.அது நெடுமாலின் ஊர்;அதன் நிறம் என்ன?

குன்று ஆடு கொழு முகில் போல்குவளைகள் போல்குரைகடல் போல்நின்று ஆடு கண மயில் போல்நிறம்.

அந்த ஊரிலே தென்றல் ஒரு குறும்பு செய்கிறது. என்ன அது?

குன்றூடு பொழில் நுழைந்துகொடியிடையார் முலை அணவிமன்றூடு தென்றல் உலவுகின்றது.

தென்றலுக்கு ஏன் இந்த வேலை?

ஆமாம் அது என்ன ஊர்?

மதில் அரங்கம் என்பதுவே.


என்னய்யா இது..ஓர் ஊர் என்றால் அதன் நெடுநிலை மாடக் கதவை மூட, திறக்க சங்கூதிகள் இருப்பார்களே!

சமயம் சொல்ல சங்கூதுவார்களே!

ஊரின் தலைவன் புறப்படுகிறான் என்றால் சங்கு ஊதும் முறையும் உண்டே!

இந்த ஊருக்கு அப்படி யார் சங்கூதிகள்? இது என்ன வினோதமான சங்கூதிகள்..எந்த ஊருக்கும் இப்படி இருக்குமா...இவர்களையா சங்கூதிகளாக நியமிப்பது! அதுவும் என்ன சொல்லி எந்தச் சங்கை ஊதுகிறார்கள்?

எல்லியம் போது
இருஞ்சிறை வண்டு
எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண்சங்கு ஊதும்

எந்த இடத்தில் இப்படி ஒரு வினோதம்?

மதில் அரங்கம் என்பதுவே.
அப்படியென்றால் மல்லிகைப் பூ அக்ரஹாரம் என்பதை அப்பொழுதே இருந்தது என்கிறாரா?

***

No comments:

Post a Comment