Friday, October 22, 2021

சித்தர்களின் புலம்பல்

 எல்லாப் புலம்பலையும் கேட்க முடியுமா? சித்தர்களின் ஞானப் புலம்பல் என்பது நம்மை ஆடுகின்ற மனத்தை ஒரு கணம் நிறுத்திக் கவனிக்க வைப்பது. அதுவும் அந்த வார்த்தைகளை கூர்ந்து கவனிப்பதில்தான் இருக்கிறது எத்தனை நமக்குக் கொள்முதல் என்பது.

’அல்லும் பகலும் என்றன் அறிவை அறிவால் அறிந்து
சொல்லுமுறை மறந்து தூங்குவதும் எக்காலம்’
’இயங்கு சராசரத்தில் எள்ளும் எண்ணெயும் போல்
முயங்கும் அந்த வேத முடிவறிவது எக்காலம்’
‘ஊனாகி ஊனில் உயிராகி எவ்வுலகும்
தானாகி நின்ற தனை அறிவது எக்காலம்’
‘என்னைவிட்டு நீங்காமல் என்னிடத்து நீ இருக்க
உன்னைவிட்டு நீங்காமல் ஒருப்படுவது எக்காலம்’
‘இன்னதென்று சொல்லவொண்ணா எல்லையற்ற வான்பொருளை
சொன்னதென்று நானறிந்து சொல்வதினி எக்காலம்’
‘மனதை ஒருவில்லாக்கி வான்பொருளை நாணாக்கி
எனதறிவை அம்பாக்கி எய்வது இனி எக்காலம்’
‘என்னை இறக்க எய்தே என்மதியை ஈடழித்த
உன்னை வெளியில் வைத்தே ஒளித்து நிற்பது எக்காலம்’
‘நின்றநிலை பேராமல் நினைவில் ஒன்று சாராமல்
சென்ற நிலை முத்தி என்று சேர்ந்தறிவது எக்காலம்’
‘இருளை வெளிவிழுங்கி ஏக உரு கொண்டாற்போல்
அருளைவிழுங்கும் இருள் அகன்று நிற்பது எக்காலம்’
‘மின்னெழுந்து மின்னொடுங்கி விண்ணில் உறைந்தால் போல்
என் உன் நின்றது என்னுள்ளே யானறிவது எக்காலம்’
(பத்திரகிரியார் புலம்பல்)
நல்லாத்தான் இருக்கு. ஆனால் எங்கயோ உசரக்க இருக்கு. எப்படி ஏறுவது! ஆனால் ஏறித்தானே ஆவணும்...
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

No comments:

Post a Comment