Friday, October 22, 2021

ஒரு ஸென் கதை !

ஸென் கதைகளுக்கு என்று ஒரு தனி... தன்மை உண்டு.

அமைதியாய் இருக்கும். ஆனால் திடீரென்று முகத்தில் குத்து விழும். யார் குத்தினார் என்ன குத்தினார் என்று பார்ப்பதற்குள் ஒரு முக்கியமான யதார்த்தம் புரிய ஆரம்பிக்கும். அதுவும் அந்த திடீர் காரணமாகத்தான் புரியும். அந்த அதிர்ச்சியின் கணத்தில் நம் மனம் வழக்கப்படியான தற்காப்புகள் போட்டுக் கொள்வதைத்தாண்டி ஒரு முக்கிய கருத்தைக் கொண்டு வந்து நம் கவனத்தில் பதிவு பண்ணிவிடும்.

அப்படி ஒரு கதை. ஒரு நல்ல விஷயம் என்னவெனில் ஸென் கதை எதுவும் ஐந்து ஆறு வரிகளுக்கு மேல் இருக்காது.

(இவ்வளவு முன்னுரை வளவள என்று அறுக்கிறேன் என்று தெரிந்தாலே கூட கொஜுகட்ஸு முதுகில் பிரம்பால் அடித்து விடுவார். கோபத்தால் அன்று. கதைவிடுவதில் தன்னை இழந்த மனத்தைக் கவனத்தில் கொண்டு வர சில ஸென் குருமார் பயன்படுத்தும் முறை அது. )

ஒரு ஸென் ஆசிரியரிடம் பலர் பயின்றனர். அவரோ புதிதாகச் சேர்ந்த ஒரு இளம் மாணவரைக் குறித்து அவர் ஞானம் பெற்று விட்டார் என்று அறிவித்து விட்டார்.

வயதான பழம் தின்னு பழகிப் போன முதிய மாணவத் தாத்ஸுக்கெல்லாம் ஒரே மூளையில் அரிப்பு!

என்னது.... நாம் எத்தனை மாமாங்கம்.... (மோகனரங்கன் கூட இணையத்தில் எழுதி முடித்துவிட்டார்!) ...எவ்வளவு நாளா நாமும் இருக்கோம். ஏதோ இப்ப வந்த பையன்.... கேட்டா ஞானம் அடைந்து விட்டார் என்று... !!!

சரி என்று மிகவும் கரிசனத்துடன் போய், 'என்னப்பா.... ஞானம் அடைந்து விட்டாயாமே..... ?'

ஆமாம்

இப்பொழுது எப்படி உணர்கிறாய்?

'பழையபடி பேஜாராகத்தான் இருக்கிறது'


*** 


No comments:

Post a Comment