Friday, October 22, 2021

செய்துகூட்டிய அறிவியக்கம் -- ஏ ஐ

'செய்து கூட்டிய அறிவியக்கம்’ என்று சொன்னால் சரியாக இருக்குமா? ஆர்டிஃபிஷியல் இண்டலிஜன்ஸ். ஏஐ. சில பல ஆண்டுகளுக்கு முன்னால் விநோதம், ஆர்வம் என்பதற்கு மட்டும் இலக்காக இருந்த ஒரு விஷயம் இன்று அன்றாடத்தை வியாபித்திருக்கும் நிதர்சனம் என்பதற்குப் பொருந்திய உதாரணம் இந்த ஏஐ. ஆன்லைனில் விற்பனை, சமூக வலைத்தளச் செயல்பாடுகளில் கண்காணிப்பு, உங்கள் தனிப்பட்ட சொந்தமான விவரங்கள் மேலும் மேலும் பொதுவான டிஜிட்டல் செயலிகளால், இணைய ப்ரதேசங்களில் கண்காணிக்கப்படுமா, காக்கப்படுமா, இருந்த இடத்திலேயே ஆன்லைனில் புக்பண்ணாப் போதும் வாசலில் வந்து நிற்கும், நீங்கள் என்ன வேணுமின்னாலும் செய்ங்க, அதெல்லாம் டேட்டாவாக மாறி ஓரிடத்தில் படிக்கப்படும். படிப்பின் நிகர முடிவுகள் பல வியாபாரங்களுக்கு மூலவிஷயம் ஆகும். டேட்டா என்பது சக்தி, ஆற்றல் என்று ஆன நிலைமை. இதில் டேட்டாவைக் காப்பதற்கான வழிமுறைகள், என்க்ரிப்ஷன். என்ன என்க்ரிப்டு பண்ணாலும் குவாண்டம் கம்ப்யூட்டிங் வந்தா படிச்சுடுமாமே என்ற நிலைமை. கொரியா குவாண்டம் கம்ப்யூட்டிங்கில் 14 செகண்ட் சாதனை. சைனா சாதனை. என்ன அக்கறை என்று பார்த்தால் சாதாரண கம்ப்யுட்டரை விட பலமடங்கு வேகத்தில் டேட்டாவை அலசும் திறன். டேட்டவில் பூட்டு போட்டிருந்தால் தன் அதிவேகப் பலமடங்கு இயக்கத்தால் மிகக் குறைந்த நேரத்தில் ஏகப்பட்ட சாத்தியங்களை முயன்று திறக்கும் வல்லமை. அதனால் ஏற்படும் ராணுவ அதிகார மேட்டிமை. இது எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருப்பது இந்த ’செய்து கூட்டிய அறிவியக்கம்’ என்னும் ஏஐ. ஏஐ என்பது பவர் என்னும் அதிகாரம், ஆட்சிவல்லபம் என்பதன் கருவியாகப் போகும் நிலைமை. சமுதாய இயங்கு வழக்கங்களே மாறிவிடக் கூடிய சாத்தியம். யாரும் இதிலிருந்து பிரிந்து நின்று ஒதுங்கித் தப்பித்துக் கொள்ள முடியாத யதார்த்தம். இதைப் பற்றியெல்லாம் யோசித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் நமது வாசலில் வந்து நின்றே பலகாலம் ஆகிவிட்டது. இதில் சுய அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றாலும் கூட நீங்களும் இந்த வித்தையில் கைதேர்ந்து உங்கள் அளவில் உற்பத்தி வல்லமை பெற்றால்தான் உண்டு. இல்லையேல் பிறருக்குக் கூலியுழைப்பு என்றபடிதான் உங்கள் நடவடிக்கைகள் ஆகிவிடக்கூடும். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு வருகிறது திரு ராஜீவ் மல்ஹோத்ராவின் இந்தக் காணொலி - 


அவருடைய நூல் ஏஐ பற்றியது ஒன்று வெளிவந்துள்ளது. அதைப் பற்றிய விவாதம். மிக நல்ல விவாதம். திறமையாக அனைவரும் இந்த ப்ரச்சனையின் பலவேறு கோணங்களை முன்னிறுத்துகின்றனர். அந்த நூல் பற்றிய தளமும் இங்கே - 

***

No comments:

Post a Comment