ஆஃபீஸ் போகும் போது காலையில வண்டியைப் பிடிக்க ஓடணும். கூடவே மாலை வரும் போது லைப்ரரி போய்வர, திருப்பிக் கொடுக்க வேண்டிய நூல்களை ஒரு பையில் எடுத்துக்கிட்டு சுமை கழுதை கணக்கா ஓடணும். சாயந்தரம் லைப்ரரி போனா சீக்கிரம் தேடணும். குளோஒசிங் அவர்ன்னு சொல்லிடுவாங்க. அப்படியே அலவ் பண்ணாலும் திரும்பி வரப்போ வண்டிகளில் கூட்டம் எக்கச்சக்கம். உட்கார இடம் கிடைச்சுது, அடி பம்பர் லாட்டரிதான். பிரிட்டிஷ் கௌன்ஸில், அமெரிக்கன் லைப்ரரி ஓரளவுக்குப் பரவாயில்ல. கன்னிமேரா, ய்னிவர்ஸிடின்னு போனா தூசி, இல்லன்னா புத்தகம் அங்கயும் இங்கயுமா இருக்கும். அலைஞ்சு கண்டுபிடிச்சு நாம தேடுவதோ இல்லன்னா அது மாதிரி ஒண்ணோ கிடைச்சா யதேஷ்டம். சமயத்துல பழங்கால ரேர்ர்ர் புஸ்தகம் ஒண்ணு கையில மாட்டித்துன்னா... லலல்லல்லாதான். சில புஸ்தகத்துக்குத் திறப்பு விழாவே நான் பண்ணியிருப்பேன். ஆனால் அந்தப் புத்தகத்தைத் தொடணும்னா தூசிக்குப் பயந்தா வேலைக்கு ஆகாது. கை அப்படியே கன்னங்கரேல்னு ஆயிடும். புத்தகத்தை எண்ட்ரில போட்டு வாங்கி, அப்பறம் குழாயைத் தேடி கையை உத்தேசமா கழுவினா கொஞ்சம் நிம்மதி. குடிதண்ணீர் இருந்தா அதுல கொஞ்சம் வாயில ஊத்தி கொப்புளித்து தொண்டையில உருட்டித் துப்பினா வாஷ்பேஸின்ல கருந்திரவம் ஒன்று ஓடும். நமக்கே பேய்படத்தைப் பார்த்தாமாதிரி திக்குனு இருக்கும். இத்தனை கஷ்டப்பட்டதுக்கு படிக்கும் நேரம் இரண்டு வாரம்தான். அப்பற்ம் புதுப்பிக்கணும். கடந்து போய் தண்டம் கட்டறதுதான் பலநேரம். எடுக்கறதுக்கு ஒருநடை. திருப்பற்துக்கு ஒரு நடை. சரீ தேடி வந்த புத்தகம் ஒன்று. கிடைச்சது வேற. ஆனால் தேடினது ஒன்னொரு லைப்ரரியில இருக்குன்னா மறுநாளைக்கு அங்க ஓடு. மறுபடியும்... இந்த பஸ் அங்க நிப்பானா... இல்லை அடுத்த ஸ்டாப்லதான் நிக்கும்... பரவாயில்லை நடந்துக்கலாம்... ஆனால் கூட்டம். பிக்பாக்கடை சமாளிக்க முடியாது வேண்டாம். நில்லு. கால் கடுக்க. ஆட்டோ... சரி வேற வழி. அங்கயா இல்ல நான் திரும்பி வரச்சொல்லோ காலியாதானே வரணும்... இத்தனை குடுங்க.. இல்ல சார் வராது... ஒரு ஆட்டோகாரங்கிட்டா இவ்வளவு கணக்கு பார்க்கிரீங்கோ... நாட்டுல அவனவன்... சரி சரி. கொஞ்சம் சீக்கிரம் போங்க... சார் சீக்கிரம் போன்னு சொல்லிட்டீங்க... ஆனால் ஓட்டறதுக்குன்னு ஒரு ஷ்பீட் லிமிட்டு இருக்கு சார்... இத்தனையும் கேட்டுக்கிட்டு அங்க போனா.. புத்தகம் இருக்கு... ஆனால் அது ரெஃபெரென்ஸ் சீல் குத்தியிருக்கு... அதுனால கடனுக்குக் கொடுக்க முடியாது. இங்கயே ஹால்ல உட்கார்ந்து படிக்கலாமே.. உள்ள லைப்ரரியனைப் பார்த்துக் கெஞ்சி கேட்டு சரி ஒரு வாரத்துக்கு மட்டும் தருகிறோம். எக்ஸ்க்யூஸ் எல்லாம் சொல்லக் கூடாது. கரஎக்டா அதுக்குள்ள கொண்டு வரணும். .. சரி... ஏதான முக்கிய பக்கங்களை மட்டும் செராக்கிட்டு அதைத் தூக்கிக்கிட்டு மறுபடியும் ஓடு. இப்ப ஒழுங்கா டையத்துக்குள்ள கொடுக்கலைன்னா அடுத்ததடவை கெஞ்ச முடியாது. செராக்கறதுக்குப் போனா அங்க நாளன்னைக்குத்தான் கிடைக்கும்... ஏற்கனவே ஆர்டர் குவிஞ்சிருக்கு... சரி போய்ப் புதுசா தேடு கடையை. ஈயோடினாலும், கடைக்காரருக்குன்னு ஒரு கெத்து இருக்குல்ல... போய் ஒரு மணீ நேரம் கழிச்சு வாங்க... சரின்னு போனா... இம்ப்ரஷன் டல்லா ஏனோ தானோஒன்னு சில பக்கம் படிக்கவே முடியாம... ஒரு சத்தம் போட்டப்பற்ம், கடைக்காரரும் முழுச்சிக்கிட்டு சார் புத்தகமே அப்படித்தான் சார் இருக்கு.. இந்தப் பக்கம் மட்டும் வேற எடுங்க... அந்தப் புள்ள போயிடிச்சிங்களே... அதுக்கு நான் என்ன பண்றது... வெட்டிவேலைக்குக் காசு கொடுக்க முடியுமா... எந்தப் பக்கம்னீங்க... இதுவா... எங்க சார்.. அதுங்க சும்மா செல்லுல பேசிக்கிட்டு... எத்தனை தடவை சொல்றது.... ஆமா நீங்க சொல்றது சரிதான் படிக்கவே முடியலையே... அப்பன்னு பார்த்து .. ஏய் என்ன இங்க இருக்க... நண்பர்.. செராக்... ஏன் அங்க ;லைப்ரரியிலேயே வைத்திருப்பானே சொன்னா எடுத்துக் கொடுத்துடப் போறான்... நீ வேற ஒரு பக்கத்துக்கு அவன் சொல்ற ரேட்டு நமக்குக் கட்டுப் படியாகுமா? இத்தனையும் முடிச்சி வீட்டுஇக்கு வந்தா அசந்து தூக்கம். அப்பறம்தான் படிக்க உட்காரணும். இத்தினி பட்டு நொந்து நாங்க வந்திருக்கோம். இந்தம்மா என்னடான்னா நெட்டுல கஷ்டப்பட்டுத் தேடி ரெஃபெரென்ஸுல்ல செஞ்சி தயார் பண்ணுதாம்மாம்... போங்கப்பா... ஒரு நியாயம் வேணாம்.
***
No comments:
Post a Comment