Friday, October 22, 2021

பொதுநலப்பணி ஒரு வெண்பாவில்

 ஒரு சின்ன வெண்பாவில் ஓர் ஊரிற்கு அடிப்படையாய் வேண்டிய பொதுநலப் பணிகள் குறித்து சிறுபஞ்சமூலம் -

‘குளம்தொட்டுக் காவு பதித்து வழிசீத்து
உளந்தொட்டு உழுவயல் ஆக்கி - வளந்தொட்டுப்
பாகு படுங்கிணற்றோடு என்றிவை பாற்படுத்தான்
ஏகும் சுவர்க்கம் இனிது.’
சொற்களைப் பாருங்கள். குளம் தொடுவது. சோலை வளர்ப்பது என்றெல்லாம் சொல்கிறோமே அதற்கு ‘காவு பதிப்பது’. போகின்ற வருகின்ற வழிகளை உண்டாக்குதல் என்பதற்கு ’வழிசீத்து’. கரடு முரடான நிலத்தை ஆழ உழுது உழுவயல் ஆக்கி. எங்கு நீர்வளம் இருக்கிறது என்று பார்த்து அங்கு கிணறு தோண்டி வைத்து - இத்தனையும் செய்தவன், வாழ்க்கையை சுவர்க்கம் ஆக்கிவிட்டான் என்பது தன்னடையே தெரியும் ஒன்று. மறுமையிலும் அவன் மிக இனிதாக சுவர்க்கம் சென்றடையும் என்று சொல்கிறது பாடல்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

No comments:

Post a Comment