Tolkappiyam and Astadhyayi என்பது ஓர் அருமையான இலக்கண ஒப்பாய்வு நூல். டாக்டர் கே மீனாக்ஷி என்பவரால் எழுதப்பட்ட ஆங்கில நூல். தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தின் அமைப்பு, சம்ஸ்க்ருதத்தின் ஆகச்சிறந்த இலக்கணப் பள்ளியான பாணினீயத்தின் பிரபலமான நூலான அஷ்டாத்யாயி - ஆக இந்த இரண்டு நூல்களின் அமைப்பு, கருத்தாக்கம், விதிகளின் கட்டுமானம், மொழியைப் பற்றி இவ்விரு துறைநூல்களும் கொண்ட அவதானம் ஆகியவற்றை அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொட்டுப் பேசி நெடுக நூல் இயற்றியவர்கள் உண்டு. திரு பிஎஸ் சுப்பிரமணிய சாஸ்திரி, திரு புர்னல் உட்படப் பலரும் காதந்திரம், ஐந்திரம், தொல்காப்பியம் என்று பலவிதங்களிலும் ஒப்புமை வேற்றுமைகளைப் பற்றிப் பேசி, ஒன்றிலிருந்து ஒன்று கடன் பெற்று பயனடைந்ததாக நூல் வரைந்ததுண்டு. இந்தத் துறையில் டாக்டர் மீனாக்ஷியின் நூல் தனி இடத்தை வகிப்பது. அதற்குக் காரணம் அவருடையது முழுமையான அமைப்பியல் பார்வை. முன் முடிவுகளுக்கு இடம் கொடாது இரு வேறு சுதந்திரமான இலக்கண ஆக்கங்கள் தம்மிடையே கருத்துப்பரவலால் பயன்பெற்றமை என்ற நோக்கில் மீனாக்ஷி அவர்கள் தம் நூலைக் கொண்டு செல்கிறார்கள். 500க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட நூல் 6 தலைப்புகளில் தன் நுவல் பொருளை ஆய்கிறது.
Introduction, Tolkappiyam, Astadhyayi, Grammatival methods in T
and A A Comparison, Katantra Vyakaranam, Conclusion என்னும் தலைப்புகளில் ஆய்வினைத் தருகிறார் டாக்டர் மீனாக்ஷி. தாம் இந்த நூலைக் கருதியதன் காரணத்தைப் பற்றிக் கூறுகிடத்தே அவர் கூறுகின்ற கருத்து சிந்தனைக்குரியது.
Though the question of relationship between the two grammatical
systems of the ancient Indian languages has been the topic of research for
quite some time now, their approach has always remained either to establish or
to refute the dependance of Tolkappiyar on the grammatical texts of Sanskrit
language and the conclusions arrived at by them are difficult to accept as
their findings are not based on the individual grammars as a whole, as such they
are partial and biased. Moreover the earlier studies were confined to only the
similarities found in these texts totally ignoring the differences. In fact the
number of differences is much more than the similarities. Therefore, it is
necessary to approach the topic afresh by following a new method, which would
account not only for similarities but also the differences. As many scholars
are not knowledgeable about what has been described in the individual grammars
under review, a detailed account of individual grammars should precede such
comparative analysis. (Preface)
தாம் கூறுவது போலவே இரண்டு இலக்கணங்களையும் தனித்தனியாக விரிவுபட விவரித்துக்காட்டிப் பின்னர் ஒப்புமை வேற்றுமைகளைப் பற்றி ஆராயும் போக்கை நூலில் தெளிவாகக் காட்டுகிறார். தொல்காப்பியத்தில் காணும் ஆயும் மீமொழி (meta-language) பற்றிய கவன ஈர்ப்பு, மாட்டெறிதலின் வகைகள் குறித்த குறிப்புகள் என்று நுணுக்கமாக ஆயும் டாக்டர் மீனாக்ஷி, அஷ்டாத்யாயி நூலின் அமைப்பையும் விரிவாக அலசத் தவறவில்லை. அஷ்டாத்யாயி நூலின் அமைப்பு குறித்து அலசத் தொடங்கும் முன், காலம் காலமாக அஷ்டாத்யாயி கற்போர் அதற்கு முகாந்தரமாகக் கற்க வேண்டிய துணை நூல்களான சிவ ஸூத்ரங்கள், தாதுபாடம், கண பாடம், உணாடி ஸூத்ரம், பிட் ஸூத்ரம், லிங்கானுசாஸனம், சீக்ஷா ஆகியவற்றையும் நன்கு விளக்கியிருப்பது அலசலுக்கான முழுமையைத் தருகிறது. தம் ஆய்வின் முடிவாகத் தாம் கருதுவது குறித்து டாக்டர் மீனாக்ஷி கூறுவது -
After making an exhaustive and thorough study of the individual
grammars, various views on the relationship, the conclusion arrived at in this
book is that Tolkappiyar has deviced a new method most suited to the genius of
Tamil language which is independent of Sanskrit grammatical texts, despite his
profound knowledge in both Sanskrit and Prakrit. The study also shows that it
may be possible that there was a third source as Tolkappiyar seems to follow
two different methods viz., analytical and paradigmatic in the grammar. Only
further research will prove whether that tradition was pre-Tolkappiyam. If so,
it should be purely a Tamil grammatical tradition.
இருமொழிகளிலும் ஈடுபாடு கொண்டவர்கள், பொதுவாக மொழி இயலில் ஆர்வம் கொண்டவர்கள், மனப்பால் குடிப்பதை விரும்பாது ஆய்ந்த அறிவையே விழையும் பக்குவத்தை வளர்த்துக் கொண்டவர்கள் ஆகியோருக்கு இந்த நூல் மிகவும் முக்கியமானது.
Tolkappiyam and Astadhyayi, K Meenakshi, International Institute
of Tamil Studies, C I T Campus, Tharamani, 1997.
***
No comments:
Post a Comment