Thursday, May 2, 2019

சில தமிழாக்க முயற்சிகள்

தமிழாக்கத்தில் நான் பயின்றவை 

Reachless Thou art for lingua is spellbound
And winding words of mine are last blossoms 
Language-kid lisps with its biteless gums 
Where's the parent stem I ask the hound 
It tells that vocabulary is bound 
And intertwined with structured mumps. 
The vocal word is known to Pasu's jumps 
Into the genera of birth crowned or drowned 
The verbal is a charactered preform 
O! Philology! Aaroor is more numen! 
A placement profound within a felt charm 
Of joy of proximity leaping again 
Upward as a might grazing on a calm 
Plummeting into the hill-let in my ken . 

திரு சங்கர நாராயணன் என்னும் சிசு என்பவர் தஞ்சை பிராந்தியத்தில் ஆங்கிலப் பேராசிரியர். திரு டி என் ஆர் மூலமாகப் பழக்கம். ஆளைப் பார்த்தாலேயே ஏதோ mystic அலைகளிலேயே மிதந்து கொண்டிருப்பவர் போலத் தோன்றும். அவரது ஆங்கிலக் கவிதை நூல் ஒன்றிலிருந்து மேற்கண்ட பகுதியை என் நோட் புக்கில் குறித்து வைத்திருந்தேன். என் கையெழுத்து இவ்வளவு வருஷங்கள் கழித்து எனக்கே பிரச்சனையாக இருக்கிறது. ஒரு தொல்லியல் நிபுணரின் சாமர்த்தியத்தோடுதான் இந்தப் பகுதியைப் பார்த்துப் பார்த்து அடித்திருக்கிறேன். தவறுகள் இருப்பின் என் கையெழுத்தின் கோளாறுதான். 

Aaroor என்ற அவரது நூலில் இருந்தது இது. எதற்கு இதைப் போட்டேன் எனில் இந்தப் பகுதியை மட்டும் அப்பொழுதே தமிழாக்கம் பண்ணி வைத்திருந்தேன். அதையும் தருகின்றேன். என்னைச் செமத்தியாகத் திட்டித் தீர்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டியிருப்பவர்களுக்கு நல்ல சான்ஸ். 
*


தமிழாக்கம் 

அடையொணா மூர்த்திநீ! 
அடங்கியதென் வாய்ச்சொல்லே. 
ஆர்ப்படங்கும் என்வார்த்தை 
அந்திமத்துப் புறவிதழாய்ச் 
சொற்குழவி பிதற்றும் 
மழலைப்புன் சொல்லே. 
உற்பவிக்கு மையத்து 
உண்மைசொலும் வேட்டைநாய் 
சொற்றொகை பந்தித்துச் 
சுழல் மோனக் கொப்புள்கள் 
பம்புமுயிர் பிறவிப் 
பரம்பரையில் பயின்றிடுசொல் 
முடிகவித்து முன்னியெழ 
முற்றும் அமிழ்ந்துவிட 
முடியாப் புணையாய் 
மொழிதருசொல் தொடர்வதுவால். 
உருவுக்கு முன்னருவில் 
உருக்கரந்த உள்ளுரையாய்ச் 
சொல்லியலே! சொல்லொணா 
ஆரூரும் சோதியறிவே காண்! 
சாந்தத்துப் பைங்கால் 
மேய்ந்துவரும் வல்லமையாய் 
மீப்பாய்ந்து மண்டியெழச் 
சுகாநந்த சாமீப்யம் 
சொக்கும் சுந்தரமாய்ச் 
சுயத்தின் தொழுவத்துள் 
புக்குப் பாய்ந்தோடும் 
பிலத்தின் ஆழத்துள் 
பரமநிலையாய்ப் 
பேரியல்வாய் நிற்பதுவே. 

*** 

சில தமிழாக்கங்கள்

செய்து வைத்த சில தமிழாக்கங்கள் இவை. 
தாகூரின் Fruit Gathering நூலிலிருந்து.


XLII
I cling to this living raft, my body, in the narrow stream of my
earthly years.

I leave it when the crossing is over. And then?

I do not know if the light there and the darkness are the same.

The Unknown is the perpetual freedom:

He is pitiless in his love.

He crushes the shell for the pearl, dumb in the prison of the
dark.

You muse and weep for the days that are done, poor heart!

Be glad that days are to come!

The hour strikes, O pilgrim!

It is time for you to take the parting of the ways!

His face will be unveiled once again and you shall meet.  


புவிவாழ்வோ ஒரு சிற்றாறு 
உயிர்ப் புணையாம் பூதவுடல். 
கரையேறியதும் இதைக் கைவிடுவேன் 
பிறகு? 

இருளும் ஒளியும் அங்கே 
ஒன்றே தானோ அறியேன் 

அறியாப் பெருநிலை அதுவே 
மன்னும் விடுதலை 
அன்பைப் பொழிந்திடுவான் 
அதன் வேகத்தில் சற்றும் இரக்கமிலான் 

மோன இருட்சிறையில் 
முத்தினை நத்தி அவன் 
மூடும் சிப்பி உடைத்தெறிவான் 

கழிந்த அந்நாட்களுக்காய்க் 
கருத்தழிந்தே கண் கலங்குகிறாய் 
கண்ணான என் உளமே! 
காலம் இருக்கிறதே. 
களிகொள்! நாட்கள் இன்னும் வரும். 

யாத்திரை செய்வோனே! 
நேரத்தில் மணி அடித்தது பார்! 
போகிற வழித் தடத்தில் 
சாலை பிரிகிறது 
சீக்கிரம் வழி தேர்வாய் 

முகத்திரை விலக்கிடுவான் 
மீட்டும் ஒரு முறை திருக்காட்சி 
மலரும் உங்கள் சந்திப்பே. 

*** 

LXVI

Listen, my heart, in his flute is the music of the smell of wild
flowers, of the glistening leaves and gleaming water, of shadows
resonant with bees' wings.

The flute steals his smile from my friend's lips and spreads it
over my life.  

கேளாய் என்னுளமே! அவன் 
குழல்தரும் ஓசையிலே 
கானில் கமழ் பூவின் 
கனிவாய் எழும் கானம் 
சலசலத்திடும் இலைகள் 
தெளிந்தோடிடும் ஆறு 

திரிதரு வண்டின்சிறை மருங்கில்புணர் 
நிழலவை விரிகீதம் அவன் 
குழல்தரும் ஓசையிலே 

நண்பன் அவன் அதரம் 
இழையோடிடும் புன்னகைதான் 
கவர்ந்து கொணர்ந்திங்கென் 
வாழ்வின் மிசையெல்லாம் 
விரிக்கும் குழலிசையே. 


***

சில தமிழாக்கங்கள் 

கலீல் கிப்ரன் -- Song of Love 

I am the lover's eyes and the spirit of wine and the heart's nourishment. 
I am a rose. My heart opens at dawn and the virgin kisses me and places me upon her breast. 

காதலர் களிவிழியும் 
கிளர்ந்தெழும் உயிரின் கள்வெறியும் 
கூடும் நல் இதயங்களில் 
கொள்ளைச் செழிப்பும் நானே காண்! 

பட்டு ரோஸா நான் 
வைகறை திறந்தது என் இதயம் 
கன்னி மலரெழிலாள் 
முத்தம் பொருத்தியெனைத் 
தன் முலைக்குவட்டில் சேர்த்தாள். 

*** 
தாகூரின் கனித்திரட்டு -- 

XX

Make me thy poet, O Night, veiled Night!

There are some who have sat speechless for ages in thy shadow;
let me utter their songs.

Take me up on thy chariot without wheels, running noiselessly
from world to world, thou queen in the palace of time, thou
darkly beautiful!

Many a questioning mind has stealthily entered thy courtyard and
roamed through thy lampless house seeking for answers.

From many a heart, pierced with the arrow of joy from the hands
of the Unknown, have burst forth glad chants, shaking the
darkness to its foundation.

Those wakeful souls gaze in the starlight in wonder at the
treasure they have suddenly found.

Make me their poet, O Night, the poet of thy fathomless silence. 


இரவே! திரைத்த நள்ளிரவே! 
எனை உன் பாவலன் ஆக்குதியே! 

இருளாம் உன்னிரு நிழலில் 
மோனத்தமர்ந்தவர் பலரே 
அவருள் நிலவிய பாடல் 
அடியேன் மொழிந்திட அருளே 

சக்கரமில்லா உன் ரதத்தில் 
உலகு தோறுலகுகளெங்கும் 
ஓசையிலா அதன் பயணத்தில் 
உன்னொடு எனையும் ஏற்றிக்கொள்ளே 
காலத்தின் அரண்மனை ராணீ 
காரிருள் அழகியாம் நீ 

எண்ணற்ற கேள்விகள் சுமந்தே 
நின் முற்றத்தில் நுழைந்திடலானார் 
விளக்கொளி காணா நின் பவனத்திலே 
விடைகளைத் தேடியலைந்தார் 

பலப்பல இதயங்கள் அங்கே 
கண்டிடா கரங்கள்தாம் தொடுத்த 
களிக்கணை தம்முளம் கதுவ 
ஆனந்த கானமாய்ப் பொங்கி 
ஆரிருள் அடித்தளம் அசைத்தார் 

விழித்தநல் உயிர்களாம் அவரே 
நித்தில ஒளிதனில் வியந்தார் 
எத்தகு தனக்குவை பெற்றோம் 
சடுதியில் என்றவர் அயிர்த்தார் 

எனையவர் பாவலனாக 
ஆக்குதி ஓ நனி இரவே! 
அளந்திடற்கரிதாம் நின் மௌனம் 
அதன் பாவலனாகவே எனையே.  

*** 

( veiled night. 

பொதுவாக 'திரைத்த' என்ற சொல் அலை போன்ற சுருக்கங்களை உணர்த்தும். இங்கு திரை போன்ற மறைப்பு என்னும் பொருளில் பயன் படுத்துகிறேன் 

நரை திரை என்னும் சொலவில் திரை என்பது தோலின் சுருக்கங்களை உணர்த்தும் ) 

***


No comments:

Post a Comment