வில் ட்யூரண்ட் பிறந்தது மாசசூசட்ஸ், நார்த் ஆடம்ஸ். 1885. 1907 ரிப்போர்டர் ந்யூயார்க் ஜர்னல். பிறகு லத்டீன், பிரெஞ்சு, இங்கிலீஷ், ஜ்யாமெட்ரி கற்பிக்கும் ஆசிரியர். ஸெமினரியில் இரண்டு வருடம். பின் வெளி வந்து நவீனத்தின் உலகில் வளையவருதல் ஆல்டன் ஃப்ரீமன் சஹ்யத்தில். மாணவியே காதலி. தத்துவத்தில் டாக்டரேட். The Story of Philosophy பெரும் வெற்றி ஆனதால் ஆக்க பூர்வமான ஓய்வு. ஆழ்ந்த அமைதியான கடும் உழைப்பு கணவன் மனைவியாக இணைந்து கடும் உழைப்பு The Storyof Civilization 11 Volumes. கொடுத்து வைத்த புண்யாத்மா! வில் ட்யூரண்டின் 11 வால்யூம் சரித்திர நூல் தொகுதி ஒரு பக்கம். சரித்திரத்தின் பாடங்களைச் சுருக்கி ஒரு 120 பக்க நூலாகத் தந்திருக்கிறார் பாருங்கள். அழகு. அதற்குப் பெயரே The Lessons of History. The Lessons of History, Will and Ariel Durant, Simon and Schuster, New York 1968.
பத்து வால்யூம்கள் சரித்திரம். இந்தக் குட்டி நூல் அந்தச் சரித்திரம் தரும் பாடங்களின் சாரம். தம்பதிகள் பத்து வால்யூம் நூலை முடித்த பின்பு எல்லா தொகுதிகளையும் ஓர் ஓட்டு ஓட்டியிருக்கிறார்கள். அதன் விளைவுதான் இது.
எடுத்ததுமே மனித அனுபவத்தின் மொத்த பயனும் என்ன, எந்த வகைகளில் அவற்றைப் படிக்கலாம். வரலாறு என்பது என்ன? -- இந்த ரீதியில் செல்லும் அவருடைய வரிகளைப் பாருங்கள் :
Obviously historiography cannot be a science. It can only be an industry, an art, and a philosophy -- an industry by ferreting out the facts, an art by establishing a meaningful order in the chaos of materials, a philosophy by seeking perspective and enlightenment. "The present is the past rolled up for action, and the past is the present unrolled for understanding" -- or so we believe and hope.
"History smiles at all attempts to force its flow into theoretical patterns or logical grooves; it plays havoc with our generalizations, breaks all our rules; history is baroque"
மானிடத்தின் மொத்த அனுபவப் பயன் என்ன?
Since man is a moment in astronomic time, a transient guest of the earth, a spore of his species, a scion of his race, a composite of body, character, and mind, a member of a family and a community, a believer or doubter of a faith, a unit in an economy, perhaps a citizen in a state or a soldier in an army, we may ask under the corresponding heads--Qstronomy, geology, geography, biology, ethnology, psychology,
morality, religion, economics, politics, and war-what history
has to say about the nature, conduct, and prospects of man.
It is a precarious enterprise, and only a fool would try to compress a hundred centuries into a hundred pages of hazardous conclusions. We proceed.
ஆனால் டாயின்பீயும் challenge and response என்ற கருதுகோளை முன்வைத்து தத்வார்த்தமாக வரலாற்றுச் சிந்தனை செய்தவர்தாமே! கட்டாந்தரை வரலாறு என்பது வெறும் களப்பணி மட்டும்தான். களப்பணியில் கிடைத்தவற்றை சிந்தனையின் மூலம் தொடர்பு படுத்திப் பார்க்கும் போது தத்வார்த்தம்தான் வரும் என்று தோன்றுகிறது. களப்பணி மட்டும் என்றால் அது எதையுமே சொல்லாதே. குப்பல் குப்பலாக கூறுகட்டி வைக்கும் அவ்வளவுதான்.
சார்! சரித்திரத்துக்கும் புவி அமைப்பியலுக்கும் என்ன சம்பந்தம்? காலம் நெடுக ஓடிவந்திருக்கும் மனிதன் ஓடிவந்த மைல்கற்கள் புவி அமைப்பின் சிணுங்கல்களைத் தாண்டித்தான். இது ஆச்சரியமாயில்லையா? சார் அதுவரைக்கும் நிலம் இருந்துச்சு. எல்லாம் இப்ப கடலுக்குள்ளாற போயிடுத்து.
எனக்கு முதல் அனுபவம் பெங்களூர் க்ளைமேட் பயங்கர சில்ல். என் நேரமும் ரெயின் கோட் ஸ்வெட்டர் போட்டுதான் சமாளிப்பு. ஆனால் சில வருஷங்கள் கழித்து அதே பருவத்தில் அதே பெங்களூர் புழுக்கம்.
மண்டிப் புதர்களாக வளர்ந்த பெரிய மேட்டில் ஆடுகள் மேய்ந்து புளுக்கையிடுகின்றன. ஆட்டிடையன் நிழலாகப் பார்த்து அமர்ந்து பொழுது போக்காக ஏதோ குழி பறிக்கிறான். ஒரு வேளை கழி ஒன்று நட்டு ஆடுகளைக் கட்டி வைத்துவிட்டுப் போகலாம் என்றோ? ஆனால் ஏதோ தட்டுப் படுகிறது. வினோதமான வஸ்துகள். விளைவு 5000 ஆண்டுகளுக்கு முந்தைய பெரிய நகரம் ஒன்று, நாகரிகப் பரப்பு ஒன்று கீழே ஆடுகள் மேயும் நேர் கீழே புதையுண்டு பல காலங்கள் ஆகிவிட்டன. ஆனால் ஒற்றை வார்த்தையில் எழுதுகிறார் வில் ட்யூரண்ட்.
History is subject to geology.
Generations of men establish a growing mastery over the earth, but they are destined to become fossils in its soil.
Human history is a brief spot in space, and its first lesson is modesty.
Geography is the matrix of history, its nourishing mother and disciplining home.
***
Generations of men establish a growing mastery over the earth, but they are destined to become fossils in its soil.
Human history is a brief spot in space, and its first lesson is modesty.
Geography is the matrix of history, its nourishing mother and disciplining home.
***
No comments:
Post a Comment