கவியோகி சுத்தாநந்த பாரதியார்
சுத்தாநந்த நூலகம்
யோக சமாஜம்
இரண்டாம் பதிப்பு 1969
பெருங்காவியம். 1015 பக்கங்களுக்குச் சற்று அதிகம். பாடல்வரிகள் 50000 சொச்சம். இதைப் பார்த்துப் பாராட்டியவர்கள் நிரலே ஒரு சரித்திரம் பேசும். பாரதியார், மகாத்மா காந்தி, பகவான் ஸ்ரீரமணர், மஹாமஹோபாத்திய ஸ்ரீ சுவாமிநாதய்யர், ரைட்ஹான்ரபிள் ஸ்ரீ வி எஸ் ஸ்ரீநிவாச சாஸ்திரியார், திரு வ உ சி, திரு வ வெ சு ஐயர், திரு ராஜாஜி, திரு வையாபுரிப்பிள்ளை, திரு வி க, திரு டி கே சி இப்படி இன்னும் பலர்.
A true poet is born with a vision and mission. You are such a poet. Your words spark out of the inner flame. Bharata Shakti is indeed a grand epic. --- இவ்வாறு சொன்னவர் ஸ்ரீரவீந்திரநாத தாகூர்.
'பாரத சக்தியைப் பார்த்தோம்; அற்புதமாயிருக்கிறது; கம்பீரமாயிருக்கிறது; ஐயர் மெச்சினார்; நாமும் மெச்சுகிறோம். மஹாகாவியம் என்றார் ஐயர். அது தமிழுக்கு அரிய கலைச் செல்வமாகும்; அத்யாத்ம நிதியாகும்' -- இவ்வாறு சொன்னவர் மகாகவி பாரதி.
அரவிந்த-- அன்னைக்கே தம் காவியத்தைச் சமர்ப்பிக்கிறார் இவ்விதமாக --
You are my heart; you are my brain
Hail Auro--Mere supreme divine
This epic inspired by your grace
Is the story of your super race
Bharata Shakti is the voice
Of the New world of your choice;
உள்ளமும் அறிவும் உணர்வும் ஆகிய
அரவிந்த சக்தியே அன்புத் தெய்வமே
உன்னருளாலே செம்மையாய் முடிந்த
பாரத சக்திப் பனுவலுன் புதிய
தெய்வ மரபின் சீரிய கதையே
புதுவுலகத்தின் பூரண வேதமே. ----
I gave you a Milton that day;
I find a Milton today,
In your epic of Godmen - Bharata Shakti. என்கிறார் அன்னிபெசண்ட்.
மகாத்மாவோ 'I appreciate your grand epic of Godmen. It seems a new Maha Bharatam' என்று கூறுகிறார்.
கவியோகி 'பாரதசக்தி மகாகாவியம்' என்பதற்கு ஆங்கிலத்திலே 'The Epic of God-men" என்று மொழிபெயர்க்கிறார். அதையும் விரிவு படுத்தி The Epic of one god, One world, and one humanity என்று அடைப்புக்குறியிடுகிறார். ஆனால் தமிழில் விளக்கம் தரும்போது இதையே சமயோக வேதம் என்று குறிப்பிடுகிறார். எதற்குச் சொல்கிறேன் என்றால் புதிய பதிப்பில் இந்த வித்தியாசங்களையெல்லாம் எடுத்துவிட்டு ஒரு நூல் என்று தந்துவிடுவார்கள். ஆனால் கவியோகி இருந்தபோது தாமே அதற்கு என்ன பொருள் கண்டார் என்பது இந்த தலைப்புகளிலிருந்தே தெரியவருகிறது அல்லவா?
தெய்வ மனிதர்களைப் பற்றிய காவியம் என்றும், ஒரே கடவுள், ஒரே உலகம், ஒரே மானிடம் என்பதைப் பற்றிய காவியம் என்றும் ஆங்கிலத்தில் பொருள்
கூறுபவர், தமிழில் யோகங்களைச் சமப்படுத்திய வேதம் என்றும், சமத்துவ நிலையை யோகமாக்கிய வேதம் என்றும் பொருள் படும்படி விளக்குகிறார்.
மொத்தம் ஐந்து காண்டங்கள் -- 1)சித்தி காண்டம் 2) கௌரி காண்டம் 3) சாதன காண்டம் 4) தானவ காண்டம் 5) சுத்த சத்தி காண்டம். ஐந்திலும் முறையே 25 + 37 + 32 + 31 + 21 படலங்கள்.
'காலைப் பரிதி காவிரி யாற்றைக்
கொஞ்சித் தழுவும் குளிர்ந்த வேளையில்,
ஓமிசைத் தாடும் பூமணக் காற்றுடன்
புதுயுகக் குழலிசை பொங்குங் காலையில்,
விசும்பின் குடைக்கீழ் பசும்பொன் இயற்கை
அமுதப் புன்னகை அருளுங் காலையில்,
தியானப் பறவை சிறகடித் தோங்கி
வானக் கனவில் வாழுங் காலையில்
கண்டனன் பாரத சக்திக் காட்சியே.'
என்று எழுந்த காட்சியை
'ஆத்தும தத்துவம் ஆணிவே ராகி,
உலகப் பெரியார் உள்ளமே கிளைத்து,
யோகமாய் மலர்ந்து, போகமாய்க் கனிந்து
பூரண வாழ்வைப் பொருளாய்க் கொண்ட
மகாகாவி யத்தை மலைநதி வனங்கள்
கோயில் குளங்கள் தூய்தவக் குடிலகளில்
தியானத் தமர்ந்து மோனத் துணர்ந்து,
படலம் படலமாய்ப் பாடி முடித்தேன்.
நான்கு தடவை நயமுற வமைத்தேன்,
ஆத்ம சோதனையில் அனைத்துங் காண்கவே.
சித்தி, கௌரி, சாதன, தானவ
சுத்த சக்தியாம் துலங்குகாண் டங்கள்
ஐந்தும் வாழ்வின் ஐம்பெறு நிலையாம்'
என்று வடிவமைத்ததாகக் கூறுகிறார் கவியோகி தாமே முகப்பில். பாடல்கள் இனிய ஓசையும், பொருளமைதியும் கொண்டு இலங்குவன. உதாரணத்திற்கு, தொடக்கத்திலேயே
'எல்ல யற்றநல் லின்னுயி ருள்ளமே
தில்லை யாகத் திருநடஞ் செய்பவன்;
இல்லை யென்பவ ருள்ளு மிருப்பவன்;
சொல்லைத் தூண்டித் துலக்குக வெற்றியே!'
மீட்டுவாய் உயிர் வீணையை பண்ணுடன்,
ஊட்டுவாய் உயர் வோங்குங் கலையின்பம்,
காட்டுவாய் வழி காசினி யெங்குமே
நாட்ட வுன்னிசை நற்றமிழ் வாணியே!
வள்ளல் வானில், மலைவனக் காட்சியில்,
துள்ளு மாற்றினிற் சூழும் இயற்கையில்,
அள்ளி யள்ளி யளித்திடும் பாட்டையென்
உள்ளப் பொய்கையில் ஊற்றி யருளுவாய்!
பாழில் படைப்பு எப்படி உண்டாயது? கவியோகியின் கவிதை --
பாழி டத்தினிற் பரந்ததோர் பம்பர வியக்கம்;
யாழி சைதரும் அகரத்தால் அம்பரம் விழிக்க,
வாழி சைதரும் உகரத்தால் வளர்தரும் அணுக்கள்
சூழி சைதரும் மகரத்தாற் சுழன்றன விரைந்தே.
***
மழையைப் பற்றி கவியோகம் --
தேனார் மழை பொழிவாய்
தெய்வத் திருவருளே
ஊனார் உயிர்வாழ
உழவுத் தொழிலோங்க
கோனார் குழல் கேட்டுக்
கோக்கள் பால்சொரிய
வானார் கருமுகிலே!
வழுவா மழைபொழிவாய்.
அலைமனம் அடங்கிச் சீறும்
ஆணவப் பேயடங்கி
மலையென நிட்டைகூடி
வானென வாழ்ந்து தெயவக்
கலைநதி யெனவுலாவுங்
களிப்பெமக்கீவாய்; உள்ளே
நிலைபெறும் அன்பருக்கு
நின்னையே நல்கும் எந்தாய் !
***
பாழிடத்தில் பரந்த இயக்கத்தின் பின் என்ன நடந்தது?
"வெளி நிறைந்தது; சக்தியால்
வேகமாம் அணுவில்
களி நிறைந்தது; கதிரிடுஞ்
சுடர்களில் கனலின்
சுழி நிறைந்தது; கடலுண்டு
சொரியும்வா னமுதின்
அளி நிறைந்தது; புதியநல்
லழகெங்கு நிறைந்தே!"
ஒரு நாடு பெரிய நாடு என்று சொல்லலாம். எப்பொழுது?
"வேதமும் வாழ்வும் ஒன்றும்;
வீரமும் அறமும் ஒன்றும்;
காதலும் கற்பும் ஒன்றும்;
கண்ணுடன் கருணை ஒன்றும்;
போதமும் குணமும் ஒன்றும்;
புதுமையும் பண்டும் ஒன்றும்;
நிதியும் அருளும் ஒன்றும்
நெறியினில் பெரிய நாடே!"
அத்தகைய பெரிய நாட்டில் இருப்போர் ஒன்றினில் ஒன்றைக் காண்பார். எதனில் எதனைக் காண்பார்?
"ஈதலில் இன்பம் கண்டார்;
இன்பத்தில் கடவுள் கண்டார்;
மாதரில் அன்னை கண்டார்;
மண்ணிடை விண்ணைக் கண்டார்;
காதலில் கலையைக் கண்டார்;
கலையினில் வாழ்வைக் கண்டார்;
சாதலும் பிறப்பு மில்லாத்
தம்மையே கண்டார் மாதோ!"
அந்த நாடு! அதை என்ன என்று சொல்வது?
"பூமகள் வாசமோ?
புகழின் வாகையோ?
நாமகள் வீணையோ?
நாட்டின் உள்ளமோ!
பாமணம் பூமணம்
பருகுந் தென்றலில்
ஓமொளிக் கொடிவளர்ந்
தோங்கு மாநகர்"
"கவினெலாந் திரண்டிதன்
காட்சி யானதோ?
தவமெலாந் திரண்டிதன்
தரும மானதோ?
சிவமெலாந் திரண்டிதன்
சீவ னானதோ?
புவியெலாந் திரண்டிதன்
புகழைப் போற்றுமால்!"
அந்த நாட்டில் பெருகிய வளங்கள்தாம் என்ன? எழுந்த ஒலிகள்தாம் என்ன?
***
இயற்கையின் இனிய புலரி.
காலை இளவெயிலின் காட்சி தோன்றாமுன்னம்
அருணச் செம்மை மும்மைசால் உலகெலாம் பூச
இருள் தடவி இட்ட சுண்ணம் இரவான இலையடக்கி
கடைவாய் மெல்லும் உஷை தன் அதரம் சிவந்ததென
சுழித்த நாவின் நுனி அருணச் சிகப்பாய் ஒளிரும் வேளை
தியானத்தில் இருந்து பார்த்திருக்கிறீர்களா?
வானுலகும், மண்ணுலகும், விரியுமொளியும், பரவும் காற்றும், படிந்த ஈரமும் உங்களோடு பக்கம் பக்கமாக தியானத்தில் அமர்ந்திருக்கும் வேளை அதிகாலை. அந்த நேரத்து தியானத்தையும், இயற்கையையும் ஒரு சேரப் பாடியவர்கள் உலகிலேயே இரண்டு பேர்தாம் உண்டு போலும். ஒன்று நான். மற்றொன்று கவியோகி சுத்தாநந்த பாரதி. கவியோகி எனக்குத் தெரியாமல் முன்னால் பாடிவைத்திருக்கிறார். நான் பாடியதை வேறொரு சமயம் கூறுகிறேன். இப்பொழுது சுத்தாநந்தம் ---
"ஆர்த்தன புள்ளினங்கள், அருவியின் பாட்டைக் கொஞ்சி
ஆர்த்தது மலைப்பூங் காற்று, காலையின் அமைதி தன்னில்
ஆர்த்தது சங்க நாதம், அரியநல் லான்மநேயர்,
ஆர்த்து"சுத் தோஹம்"என்றே வட்டமாய்
அமர்ந்தார் ஆங்கே!
தங்கப்புன் னகையை வீசித் தாமரை தனையெ ழுப்பித்
திங்களைச் செலவு கூறித் தினகரன் உதித்த வேளை,
மங்களத் தூயன் முன்னே மாதவர் ஆத்மா னந்தம்
பொங்கிடத் தியானஞ் செய்து பூரணப் பொலிவு பெற்றார்!
தீயெழப் பசித்த போது, தேவமு துண்டார் போலும்,
தாய்முலை யுண்டு வந்து தவழ்ந்திடுஞ் சேயைப் போலும்
தேயத்தின் சுதந்த ரத்தை நாட்டிய தீரர் போலும்,
தூயசிற் சக்தி யுண்ட முனிவரர் துலங்கி னாரே !
வண்டென ஓமொ லிக்க வளர்சுக நிட்டை செய்து
விண்டுதன் னின்பந் தூய விமலனுள் ளாழ்ந்து, நன்று
கண்டதோர் காட்சி தன்னைக் 'கருத்துடன் கேளீர்' என்று
குண்டலி முனிவர் நெஞ்சங் குளிர்ந்திட வாய்தி றந்தான்."
***
கீழ்க்காணும் பகுதி அமர கலைஞன் விக்டர் ஹ்யூகோ எழுதிய The Man who Laughs, ப்ரெஞ்சில் L'Homme qui Rit என்ற நாவலின் ஒரு பகுதி.
இதற்கும் கவியோகி சுத்தாநந்த பாரதிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? இருக்கிறது. இந்தப் பகுதியைப் படித்துவிட்டு அதற்குப் பின் நான் தரும் கவியோகியின் தமிழில் 'இளிச்ச வாயன்' பகுதிகளைப் பாருங்கள். மொழிபெயர்ப்பில் கவியோகி மன்னன் என்பது நான் சொல்லாமலேயே உங்களுக்கு விளங்கும்.
URSUS.
I.
Ursus and Homo were fast friends. Ursus was a man, Homo a wolf. Their dispositions tallied. It was the man who had christened the wolf: probably he had also chosen his own name. Having found Ursus fit for himself, he had foundHomo fit for the beast. Man and wolf turned their partnership to account at fairs, at village fêtes, at the corners of streets where passers-by throng, and out of the need which people seem to feel everywhere to listen to idle gossip and to buy quack medicine. The wolf, gentle and courteously subordinate, diverted the crowd. It is a pleasant thing to behold the tameness of animals. Our greatest delight is to see all the varieties of domestication parade before us. This it is which collects so many folks on the road of royal processions.
Ursus and Homo went about from cross-road to cross-road, from the High Street of Aberystwith to the High Street of Jedburgh, from country-side to country-side, from shire to shire, from town to town. One market exhausted, they went on to another. Ursus lived in a small van upon wheels, which Homo was civilized enough to draw by day and guard by night. On bad roads, up hills, and where there were too many ruts, or there was too much mud, the man buckled the trace round his neck and pulled fraternally, side by side with the wolf. They had thus grown old together. They encamped at haphazard on a common, in the glade of a wood, on the waste patch of grass where roads intersect, at the outskirts of villages, at the gates of towns, in market-places, in public walks, on the borders of parks, before the entrances of churches. When the cart drew up on a fair green, when the gossips ran up open-mouthed and the curious made a circle round the pair, Ursus harangued and Homo approved. Homo, with a bowl in his mouth, politely made a collection among the audience. They gained their livelihood. The wolf was lettered, likewise the man. The wolf had been trained by the man, or had trained himself unassisted, to divers wolfish arts, which swelled the receipts. "Above all things, do not degenerate into a man," his friend would say to him.
Never did the wolf bite: the man did now and then. At least, to bite was the intent of Ursus. He was a misanthrope, and to italicize his misanthropy he had made himself a juggler. To live, also; for the stomach has to be consulted. Moreover, this juggler-misanthrope, whether to add to the complexity of his being or to perfect it, was a doctor. To be a doctor is little: Ursus was a ventriloquist. You heard him speak without his moving his lips. He counterfeited, so as to deceive you, any one's accent or pronunciation. He imitated voices so exactly that you believed you heard the people themselves. All alone he simulated the murmur of a crowd, and this gave him a right to the title of Engastrimythos, which he took. He reproduced all sorts of cries of birds, as of the thrush, the wren, the pipit lark, otherwise called the gray cheeper, and the ring ousel, all travellers like himself: so that at times when the fancy struck him, he made you aware either of a public thoroughfare filled with the uproar of men, or of a meadow loud with the voices of beasts—at one time stormy as a multitude, at another fresh and serene as the dawn. Such gifts, although rare, exist. In the last century a man called Touzel, who imitated the mingled utterances of men and animals, and who counterfeited all the cries of beasts, was attached to the person of Buffon—to serve as a menagerie.
Ursus was sagacious, contradictory, odd, and inclined to the singular expositions which we term fables. He had the appearance of believing in them, and this impudence was a part of his humour. He read people's hands, opened books at random and drew conclusions, told fortunes, taught that it is perilous to meet a black mare, still more perilous, as you start for a journey, to hear yourself accosted by one who knows not whither you are going; and he called himself a dealer in superstitions. He used to say: "There is one difference between me and the Archbishop of Canterbury: I avow what I am." Hence it was that the archbishop, justly indignant, had him one day before him; but Ursus cleverly disarmed his grace by reciting a sermon he had composed upon Christmas Day, which the delighted archbishop learnt by heart, and delivered from the pulpit as his own. In consideration thereof the archbishop pardoned Ursus
*
"உர்ஸுஸ், ஓமோ -- இருவரும் இணைபிரியாத நண்பர். உர்ஸுஸ் மனிதன், ஓமோ ஓநாய். அவன் அதையே விரும்புவான்; அது அவனையே விரும்பும். இருவருக்கும் மெத்தப் பிடித்தம். இருவரும் ஒருவர் இயல்பில் இன்னொருவர் கடன்வாங்கிக் கொண்டனர். ஓமோ, பழகிய வீட்டு நாய் போன்று சாதுவாய் இருக்கும். தனது மனித நண்பன் குறிப்பறிந்து நடக்கும்.
உர்ஸுஸ் தனிமையிலே வாழ்ந்து, முதிர்ந்து, முடிவில் இந்த ஒரே நண்பனைக் கண்டுபிடித்துப் பழக்கினான். இருவருக்கும் உயிர் நட்பு ஏற்பட்டது. "நான் இறந்த பிறகு என்னைப்பற்றி அறிய விரும்புவோர் ஓமோவைப் பாருங்கள்" என்பான் உர்ஸுஸ். உர்ஸுஸ் காட்டுத் தனிமையை விரும்புவான்; தனக்குத்தானே பேசுவான்; வேறொருவருடனும் கலக்க மாட்டான். "மஹாத்மா ஸோக்ரதரும் தனிமையில் தனக்குத்தானே பேசுவார். லூதரும் அவ்வாறே. அப்படியே நானும்" என்பான் உர்ஸுஸ். உர்ஸுஸ் உலகம் ஒரு பெட்டி வண்டிதான்; அவ்வண்டியை இழுப்பது ஓமோ; பாதை கடினமாயிருந்தால் இருவரும் சேர்ந்தே இழுப்பர். வண்டிக்குள் அவனது சிற்றுலகம் அடங்கியிருந்தது. அதில் ஒரு நீளப்பெட்டி யிருந்தது. அதில் அவன் புத்தகம், சட்டைத் துணி, லொட்டு லொஸ்குகளெல்லாம் அடக்கம். அவன் அதன் மேல் ஜமக்காளம் விரித்துப் புத்தகத்தைத் தலைக்கு வைத்துக்கொண்டு ஹாயாகப் படுப்பான். "எனக்கு இரண்டு தோல்கள் - இதுதான் உண்மைத் தோல்" என்று ஒரு பழைய கரடித் தோல் போர்த்துக் கொள்வான். அதனுடன் கரடித் தொண்டையும் கூடினால் கேட்க வேண்டுமா! அசல் ஜாம்பவான்தான்.!
உர்ஸுஸ் உலகை வெறுப்பான்; உலகோர் நடையைக் கண்டு சிரிப்பான். "நீ படைத்த உலகின் லட்சணத்தைப் பார்; தேனுண்ணும் உதட்டில் தேனீ கொட்டுகிறது. ரோஜாவுக்கடியில் முள் அடர்ந்திருக்கிறது; பொதுப் பணத்தைக் கொண்டு பிரபுக்கள் இடம்பக் கூத்தாடுகிறார்கள்; ஏழைகள் அனாதைகளாக வருந்துகிறார்கள்; பார் உலகின் அழிநாடகத்தை" என்று கடவுளை அவன் அடிக்கடி இடித்துரைப்பான்."
(பக் 62 --69, இளிச்ச வாயன், (மொழிபெயர்ப்பு The Man who Laughs by Victor Hugo) கவியோகி சுத்தாநந்த பாரதி, அன்பு நிலையத்தார் இராமச்சந்திரபுரம், பிரமாதி, மார்கழி)
***
No comments:
Post a Comment