நம் யோகிகளோ நதி, மலை என்று எல்லாவற்றையும் பெரும் ஆட்களாகவே யோக தர்சனத்தில் கண்டு சொல்லிவிட்டுப் போகிறார்கள். அதற்கு என்ன அர்த்தம்? புரியவில்லை.
கங்கை நதி சிவனார் தலையில் வந்து இறங்கியதாமே, பகீரதன் தவத்திற்காக? என்ன அர்த்தம்? தெரியவில்லை.
கங்கை நதி சந்தனுவிற்கு மனைவியாக ஆனதாமே? என்ன பொருள்? ம் ம்.
கங்கையைக் காட்டிலும் சத்சங்கம் என்ன இருக்கிறது? கங்கையின் ஜலம் மருந்து. வைத்தியரோ நாராயணனாகிய ஹரி என்கிறது ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம்.
கங்கா ஜலம்.
கீதா படனம்.
ஸ்ரீமந்நாராயண ஸ்மரணம்.
போதுமே என்று போய்க்கொண்டே இருக்கிறார்கள் சாதுக்கள்.
***
No comments:
Post a Comment