Thursday, May 2, 2019

திரு ஏ வி சுப்பிரமணியன்

கச்சிதா3ஸீத3ந்ருதோக்திநா விநா நிஷேத4தி ப்ரேயஸி கா 3திர் மம|
ஸமாக3மாஹே ஸ்ரவத3ம்பு3ஸம்ஸ்தி2: 3: ப்ரஸந்நோSர்தி2 மத்ஸ்ய ஸம்ஹதி: || 

இந்த ச்லோகம் குறுந்தொகைப் பாட்டு ஒன்றின் ஸம்ஸ்க்ருத மொழிபெயர்ப்பு

குறுந்தொகை 25 

யாரும் இல்லைத் தானே கள்வன் 
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ 
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால 
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் 
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே
-கபிலர்.

(பாடல் இணையத் தயவு -- ப்ராஜக்ட் மதுரை

இந்தப் பாடலை ஸம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்த்திருப்பது மின் தமிழுக்கு முன்னரே நாம் அறிமுகப் படுத்திய ஸ்ரீ வி சுப்ரமணியன் அவர்கள்

இது ஒரு பாடல் மட்டும் இல்லை. குறுந்தொகையிலிருந்து சுமார் 200 பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஸம்ஸ்க்ருத பத்யங்களாகச் செய்திருக்கிறார் திரு வி எஸ்
வெளியீடு -- ஸாஹித்ய அகாடமி

திரு வி எஸ் ஓர் அருமையான இலக்கிய வாதி. வடமொழி சரளமாகப் பேசும் வல்லமை கொண்டவர். தமிழில் சங்கப் பாடல்களை மிகவும் நேசிக்கும் ரசிகர். வடமொழி காவிய சாத்திரக் கோட்பாடுகளையும், தமிழ் தொல்காப்பிய இலக்கியக் கோட்பாடுகளையும் இணைத்து சங்கப் பாடல்களை ரசித்து, நம்மையும் ரசிக்க செய்வதில் மிகத் திறமையானவர். அவரே காவிய சாத்திரக் கோட்பாடுகளில் புதிய தடங்கள் உருவாக்கியவர்

தமிழில் அளபெடையை கவிஞர்கள் எப்படிக் கையாண்டிருக்கிறார்கள் என்று அவருடைய விளக்கம் அருமை

இந்த நூலில் 200 குறுந்தொகைப் பாடல்களுக்கும் ஸம்ஸ்க்ருத ஆக்கம, கூடவே ஸம்ஸ்க்ருதத்தில் விளக்கம், துணைக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு பாடல்களுக்கு என்று தமிழ் தெரியாத பிற மொழி இந்தியர்க்கு நன்கு பயன்படும் வண்ணம் சங்க நூல் ஒன்றை அறிமுகப் படுத்தியிருக்கும் திரு வி எஸ் அவர்களின் அரும்பணி பாராட்டிற்குரியது

நூல் 

Srngarapadyavali 

By A V Subramanian 

Sahitya Academy 

Rs 150 

ஓர் அருமையான ஆங்கில முன்னுரை நூலை முகப்பில் அணி செய்கிறது

அதில் ஆசிரியர் கூறும் ஒரு கருத்து கவனத்திற்குரியது. த்வனி என்ற வடமொழி காவிய சாத்திரக் கருத்தின் மிக நுணுக்கமான உதாரணங்களாகச் சங்கப் பாடல்கள் திகழ்கின்றன என்று கூறுகிறார்

Suggestion or dhvani has received a great deal of attention at the hands of Sanskrit rhetoricians. But the use of this device by creative poets is more extensively met with in Tamil Sangam love poetry than even in Sanskrit literature. (pp14) 

திரு வி எஸ் 200க்கும் மேற்பட்ட நூல்கள் இலக்கிய சம்பந்தமாக எழுதியுள்ளார்

இவருடைய நேர்முக பேட்டியும், தமது இலக்கியக் கொள்கைகளை அவர் தாமே எடுத்துச் சொல்வதை ஆடியோ வீடியோ கோப்புகளாக சேமிப்பதும் செய்யக் கூடிய அரும்பணி. முன்னரே மின் தமிழில் இந்தப் பரிந்துரையை வைத்திருக்கிறேன்
Let the ears that may hear pay heed 

*** 


No comments:

Post a Comment